பதிவுத்துறை தந்த சர்ப்ரைஸ்.. பத்திரப்பதிவில் அதுக்குள்ள இத்தனை கோடியா? தமிழக அரசு அசத்தல்
சென்னை: தமிழக பத்திரப்பதிவு துறையானது, முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்துகொண்ட ஆய்வுக்கூட்டம் தொடர்பான செய்தியையும் பதிவுத்துறை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
நம்முடைய பத்திரப்பதிவு துறையை பொறுத்தவரை, ஒவ்வொரு வருடமும் வருவாய் இலக்கினை நிர்ணயித்து, செயல்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்த வருடமும், ரூ.25,000 கோடி வருவாய் இலக்கினை நிர்ணயித்திருக்கிறது.

பதிவுத்துறை: இதற்காகவே, சில அதிரடி நடவடிக்கைகளையும் பதிவுத்துறை மேற்கொண்டு வருகிறது.. நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, பெரும்பாலானவர்கள் புதிதாக ஒரு வீடு, நிலம் வாங்கும்போதும்சரி, அதற்கான பத்திர பதிவு செய்யும்போதும்சரி, நல்ல நேரம், சுபமுகூர்த்த நாட்களை பார்ப்பது வழக்கமாக உள்ளது.
முக்கியமாக, சுபமுகூர்த்தத்தை எதிர்நோக்கி, பத்திரப்பதிவு கூட செய்யாமல் காத்திருக்கவும் செய்கிறார்கள். இதற்காகவே, சுபமுகூர்த்த தினங்களில் கூடுதலாக பத்திரவுப்பதிவுக்கான டோக்கன்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற சிறப்பு நாட்களில் கூடுதல் டோக்கன்கள் விற்கப்படுகின்றன. எனவே, இதன்மூலம் பத்திரப்பதிவு துறைக்கு அதிக வருவாயும் கிடைத்து வருகிறது.
தமிழக அரசு: இந்நிலையில், பதிவுத்துறையில் இந்த நிதி ஆண்டின் செப்டம்பர் மாதம் வரை ரூபாய் 1,121 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.
அதில், "வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் இன்று (03.10.2024) சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுத்துறை அலுவலகக் கூட்டரங்கில் 2 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள் (நிர்வாகம் (ம) தணிக்கை), மாவட்ட வருவாய் அலுவலர்/தனித்து தனித்துணை ஆட்சியர் (முத்திரை) மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் ஆகியோரின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், துணை பதிவுத்துறை தலைவர்கள் மற்றும் மாவட்ட பதிவாளர்கள் கடந்த மாதங்களில் சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலர்களில் மேற்கொண்ட திடீர் ஆய்வில் கண்டறியப்பட்ட விவரங்களை விவரித்தனர்.
ஆவணங்கள்: அதில் பதிவு செய்த ஆவணங்களை அதே நாளிலே திருப்பி ஒப்படைத்தல் (களப்பணி மேற்கொள்ள வேண்டிய ஆவணங்களை தவிர்த்து) ஆவணங்கள் பதிவு செய்தவுடன் தன்னிச்சையாக இணையவழி பட்டா மாற்றம் செய்வதை தெரிவு செய்தல், வில்லங்கச்சான்று மற்றும் சான்றிடப்பட்ட நகல்கள் இணைய வழியில் விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக அவர்களின் உள்நுழைவிற்கே இணையதளம் வழி அனுப்பிவைத்தல், நிலுவை ஆவணங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்த விவரங்கள். தணிக்கை பிரிவு அலுவலர்களின் பணிகள், முக்கிய பதிவேடுகளை பராமரித்து கண்காணித்தல், வருவாய் மற்றும் நிர்வாக சம்பந்தப்பட்ட கருத்துருக்கள் உள்ளிட்ட விவரங்களை அமைச்சர் கேட்டறிந்தார்.
அமைச்சர் பதிவு செய்த ஆவணங்களை அன்றே திருப்பி அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்கள் . மேலும் உயர் அலுவலர்களால் விவாதிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் கருத்துக்களை சம்பந்தப்பட்ட சார்பதிவாளர்களிடம் எடுத்து கூறி அவற்றினை செயல்பாட்டிற்க்கு கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்கள்.
வருவாய் : பதிவுத்துறையில் கடந்த 2023-24 நிதி ஆண்டின் செப்டம்பர் மாதம் வருவாயுடன் ஒப்பிடுகையில் இந்த நிதி ஆண்டின் செப்டம்பர் மாதம் வரை ரூபாய் 1,121 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு முதன்மைச்செயலாளர் பிரவேந்திர நவ்நீத் பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் , பதிவுத்துறை உயர் அலுவவர்கள் கலந்து கொண்டனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications