இதயத்தை உடைத்த விஜய்.. கலங்கிய சங்கீதா! 20 ஆண்டு கால காதலும், ஒரு நடிகையால் முறிந்த பந்தமும்!
சென்னை: அது ஒரு காலம்... லண்டனின் குளிர்கால மாலைப் பொழுதில், ஒரு சாதாரண ரசிகையாகத் தொடங்கி, கோலிவுட்டின் உச்ச நட்சத்திரத்தின் சரிபாதி துணையாக மாறியவர் சங்கீதா. இன்று அதே லண்டன் வீதிகளில், தன் கணவர் இல்லாத தனிமையில் அவர் நடப்பார் என்று யாரும் நினைத்திருக்கமாட்டார்கள்.

லண்டன் டூ சென்னை: காதலில் பூத்த வசந்தம்
1996-ம் ஆண்டு... அப்போது விஜய் ஒரு வளர்ந்து வரும் நட்சத்திரம். 'பூவே உனக்காக' தந்த வெற்றியின் மிதப்பில் இருந்த விஜய்யைச் சந்திக்க லண்டனிலிருந்து வந்திருந்தார் சங்கீதா. அந்த முதல் சந்திப்பிலேயே, சங்கீதாவின் கண்ணியம் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை ஈர்த்தது. "இவள்தான் என் மருமகள்" என அவர் முடிவெடுக்க, 1999-ல் கோலாகலமாகத் தொடங்கியது அந்தத் திருமண வாழ்க்கை.
சங்கீதா வெறும் மனைவியாக மட்டும் இருக்கவில்லை; விஜய்யின் 'ஸ்டைல்', அவரது ஆடைத் தேர்வு, படங்களின் கதையைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு மறைமுக ஆலோசகர் என விஜய்யின் நிழலாகவே இருந்தார். ஒரு உச்ச நட்சத்திரத்தின் பின்னால் இருக்கும் அமைதியான சக்தியாக அவர் வலம் வந்த அந்த நாட்கள், ரசிகர்களுக்கு ஒரு 'பெர்பெக்ட்' குடும்பத்தின் உதாரணமாகத் திகழ்ந்தது. ஒரு கணவர் வெற்றிபெறுகிறார் என்றால் வீட்டில் ஒரு பெண் அவருக்கு என்று பல தியாகங்களை செய்கிறார் என்று பொருள்.. சங்கீதா அதைதான் செய்தார். லைம் லைட் இன்றி கணவனுக்காக வாழக்கையை அர்ப்பணித்தார்!
விரிசல் விழுந்த 'நிழல்' யுத்தம்
ஆனாலும், காலத்தின் சக்கரம் எப்போதும் ஒரே சீராகச் சுழல்வதில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே நீலங்கரை வீட்டில் அமைதி நிலவவில்லை என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். விஜய்யின் அபரிமிதமான வளர்ச்சியும், அரசியல் ஆசைகளும் ஒருபுறம் இருக்க, குடும்பத்திற்குள் புகுந்த 'மூன்றாம் மனிதர்' தான் மொத்தப் பிரச்சனையுமே என்கிறது நெருங்கிய வட்டாரம்.
விஜய்க்கும், அவருடன் நடித்த ஒரு பிரபல நடிகைக்கும் இடையே உருவான நெருக்கம், சங்கீதாவின் காதுகளுக்கு எட்டியபோது அவர் அதை முதலில் நம்பவில்லை. ஆனால், படப்பிடிப்புத் தளங்களைத் தாண்டி அந்த நடிகையுடன் விஜய் செலவழித்த நேரங்கள், சங்கீதாவை நிலைகுலையச் செய்தன. ஆரம்பத்தில் மெல்லிய மனக்கசப்பாகத் தொடங்கி, அது ஒரு பெரும் போராக மாறியது. அந்த நடிகையுடன் இவர் பயணித்து, அவரை வீட்டிற்கே கொண்டு வந்தது.. இருவரும் ஒன்றாக உள்ள படங்களை சாப்ட் லான்ஜிங் செய்தது என்று சங்கீதாவை எல்லாம் நிலைகுலைய வைத்தது. 2 கே உலகில் நீங்கள் ஒருவர் உடன் காதலில் இருப்பதை கொஞ்சம் கொஞ்சமாக வெளி உலகிற்கு சொல்வார்கள்.. முதலில் உங்கள் காதலரின் போஸ்டுகளை லைக் செய்வது.. பின்னர் இரண்டு பேருமே ஒரே இமேஜி பயன்படுத்துவது.. பின்னர் இரண்டு பேருமே ஒரே இடத்தில் இருந்து தனி தனியாக போட்டோ போடுவார்கள்.. ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா செய்தது போல.. இதை சாப்ட் லான்ஜிங் என்பார்கள்.. அதைத்தான் அந்த நடிகையும் செய்தார்.. இது சங்கீதாவை உடைத்து போட்டது.
விவாகரத்து நோட்டீஸ்: அந்த ஒரு பெயர்!
சமீபத்தில் சங்கீதா அனுப்பிய அந்த விவாகரத்து நோட்டீஸ், கோலிவுட்டையே அதிரவைத்தது. அதில் அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் மிகக் கடுமையானவை.
"இருபது ஆண்டுகளாக நான் கட்டிக்காத்த இந்த இல்லறத்தை, ஒரு நடிகைக்காகச் சிதைத்துவிட்டீர்கள். என் பிள்ளைகளின் எதிர்காலத்தை விட, அந்த நடிகையின் நட்பு உங்களுக்குப் பெரிதாகிவிட்டது,"
என்ற ரீதியில் அவர் தனது குமுறல்களை வெளிப்படுத்தியதாகத் தெரிகிறது. குறிப்பாக, அந்தப் பிரபல நடிகையின் பெயரைக் குறிப்பிடாமல் , அவரால்தான் தன் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என அவர் பகிரங்கமாகத் தனது தரப்பை முன்வைத்துள்ளார். தனது தியாகங்களுக்குக் கிடைத்த பரிசாக அவர் பார்ப்பது ஏமாற்றத்தை மட்டுமே.
இப்போது என்ன நடக்கிறது?
தற்போது சங்கீதா தனது பிள்ளைகளுடன் லண்டனில் வசிக்கிறார். விஜய்யின் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும், பட விழாக்களிலும் அவர் தென்படுவதில்லை. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'லியோ' படத்தின் போதே இந்த விரிசல் வெளிச்சத்திற்கு வந்தது. மாஸ்டர்தான் அவர்கள் ஒன்றாக தோன்றிய கடைசி நிகழ்வு.
விஜய் இப்போது ஒரு புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். ஒரு தொண்டர் படை அவர் பின்னால் அணிவகுத்து நிற்கிறது. ஆனால், அவருக்குப் பின்னால் நின்ற அந்த ஒற்றை பலம் - சங்கீதா - இன்று அவருடன் இல்லை. கேமராக்களுக்கு முன்னால் புன்னகைக்கும் 'விஜய்அந்தப் புன்னகைக்கு பின்னால், தொலைந்து போன தனது குடும்ப வாழ்க்கையைப் பற்றிய குற்ற உணர்ச்சி இருக்கலாம்.
அன்பால் கட்டப்பட்ட கோட்டையை விட, புகழால் கட்டப்பட்ட கோட்டை எப்போதும் பலவீனமானது என்பதை சங்கீதா - விஜய் விவகாரம் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது.
-
TN 2026 ட்ரெய்லரை பார்த்து கொளுத்தி போட்ட ஆதவ்.. விஜயை வைத்து பதிலடி கொடுத்த தம்பி ராமையா மகன் உமாபதி! -
டைம் ட்ராவல் செய்த விஜய்? பெரம்பூர் மனுவில் 52 வயது.. திருச்சி வேட்புமனுவில் 51 வயது! வெரி ராங் ப்ரோ -
தவெகவுடன் பேசியதை சொல்லட்டுமா.. தினகரன் குறித்து புட்டு புட்டு வைத்த முன்னாள் எம்எல்ஏ -
பெரம்பூரில் மூடிக் கிடக்கும் விஜய் தேர்தல் அலுவலகம்.. இவ்வளவுதான் தவெக தேர்தல் ஏற்பாடு! -
நீட் பயிற்சி மையத்திற்கு ரூ.20 கோடி கடன் கொடுத்த விஜய்? அனிதா மரணத்திற்கு ஆறுதல் சொன்னது பொய்யா? -
Vijay Affidavit: குடும்பத்திற்கே கடன் கொடுத்த ஒருவரை பார்த்ததே இல்லை! விஜய் மீது முத்தரசன் தாக்கு! -
3 மாத மவுனத்துக்கு பிறகு ஜனநாயகன் பற்றி முதல்முறையாக பேசிய விஜய்.. ஆனால் பாஜக பற்றி ‘கப்சிப்’! -
விஜய் வேட்பு மனு பெரம்பூரில் தள்ளுபடி செய்யப்படுமா? சட்ட ரீதியாக விஜய்க்கு உள்ள வாய்ப்பு என்ன? -
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
TN 2026 படத்தில் விஜய் ரோலா? தன்னுடைய கெட்டப் பற்றி நட்டி ஓபனா பேசிட்டாரே? பின்னணி சம்பவம் பெருசா இருக்கு -
Seeman: என்னாது 150 கட்சிகளுடன் விஜய் கூட்டணியா? சீமான் சொன்ன அந்த வார்த்தை! -
Election history: இந்திரா டூ மோடி.! ‘இரட்டைத் தொகுதிகள்’: யார்? எங்கே? நின்றார்கள்.. வென்றார்கள்?












Click it and Unblock the Notifications