கோடை விடுமுறைக்கு பின்.. பள்ளிகள் திறப்பு.. பள்ளி கல்வித்துறை வெளியிட்ட முக்கிய வார்னிங்! இதை படிங்க
சென்னை: கோடை விடுமுறைக்கு முன் பள்ளிகள் திறப்பது தொடர்பாக பள்ளி கல்வித்துறை மிக முக்கியமான வார்னிங் ஒன்றை வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. கோடையில் நிலவும் கடும் வெயில் காரணமாகவும், வெப்ப அலை காரணமாகவும் மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறப்பை தள்ளிப்போட வேண்டும் என்று பெற்றோர்கள் பலரும் கோரிக்கை வைத்தனர்.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர்கள் உடனே ஏற்கனவே அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். பள்ளிகள் திறப்பை தள்ளிப்போடலாமா என்று ஆலோசனை செய்தார்.

கடந்த வெள்ளிக்கிழமையும் அவர் நிர்வாகிகளுடன் மீண்டும் ஆலோசனை செய்தார். அதன்பின் மீண்டும் தலைமை செயலாளர் இறையன்பு உடன் அன்பில் மகேஷ் ஆலோசனை செய்தார். அந்த ஆலோசனைக்கு பின் பள்ளிகளை திறக்க இரண்டு தேதிகளை தேர்வு செய்துள்ளதாக அமைச்சர் அன்பில் அறிவித்தார்.
இந்த தேதிகளை முதல்வரிடம் கொடுத்து, முதல்வர் அதில் ஒரு தேதியை தேர்வு செய்வார் என்று அன்பில் மகேஷ் கூறி இருந்தார் . இந்த நிலையில்தான் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். 7ம் தேதி பள்ளிகளை திறக்க முதல்வர் ஸ்டாலின் ஜப்பானில் இருந்து அனுமதி கொடுத்த நிலையில் அந்த தேதி உறுதி செய்யப்பட்டது.
1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் ஜுன் 7ம் தேதி தொடங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். இந்த நிலையில்தான் கோடை விடுமுறை தொடர்பாக மிக முக்கியமான வார்னிங் ஒன்றை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளுக்கு கொடுத்துள்ளது. விடுமுறை காலம் நீட்டிக்கப்படுவதால் கோடை காலத்தில் தனியார் பள்ளிகள் தனியாக வகுப்பு எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
7 நாட்கள் சிறப்பு வகுப்புகளை நடத்த கூடாது. சிறப்பு வகுப்புகள் மட்டுமின்றி பயிற்சி வகுப்புகள் எதையும் எடுக்க கூடாது, பாதி நாள் மட்டும் வாருங்கள் என்று அழைக்க கூடாது, சிலபஸை முடிக்க வேண்டும் என்று மாணவர்களை அவசரப்படுத்த கூடாது என்று பள்ளிகல்வித்துறை சார்பாக உத்தரவிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தனியார் பள்ளிகளை கண்காணிக்கவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
விடுமுறை ஏன்?
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு தேர்வு நடந்தது. 12ம் வகுப்புகளுக்கு தேர்வு கடந்த மார்ச் 3ம் தேதி நிறைவு பெற்றது.
10ம் வகுப்புகளுக்கு தேர்வு கடந்த மார்ச் 30ம் தேதி நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதித்தேர்வுகள் நடைபெற்று வந்தன. இந்த இறுதித்தேர்வுகள் ஏப்ரல் 28 உடன் நிறைவு பெற்றது.

இதையடுத்து கடந்த 29ம் தேதி முதல் முதல் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. 30 நாட்களுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில்... 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை சார்பாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கோடை வெயில் காரணமாக திறப்பு தேதி 7ம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் வானிலை மிக மோசமாக சுட்டெரித்து வருகிறது. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. முக்கியமாக சென்னையில் வெப்பநிலை உச்சத்தில் உள்ளது.
சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது. சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது.
இந்த மாத தொடக்கத்தில் மழை பெய்த நிலையில் உண்மையான கோடை காலம் கடந்த இரண்டு நாட்களாகத்தான் சென்னையில் நிலவி வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. வரும் நாட்களில் தமிழ்நாட்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே திறப்பு தேதி மாற்றப்பட்டு உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications