மாஸ்டர் ப்ளான்.. ஸ்டாலின் ஸ்ட்ரைட்டா அங்கேயே போறாரு.. காங்கிரஸ் கூட்டணிக்கு சிக்கலா?.. ஒரே டென்ஷன்
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் டெல்லி பயணம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
புயல் பாதித்த மாவட்டங்களுக்கு கூடுதலாக நிவாரண நிதி கேட்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. மத்திய குழுவினர் டெல்லி சென்று அறிக்கையை சமர்ப்பித்ததுமே, தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு டெல்லி சென்று கூடுதல் நிவாரண நிதி கேட்க உள்ளதாக தகவல்கள் கடந்த வாரம் வெளியானது.

2 அமைச்சர்கள்: இவர்கள் 2 பேருமே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து, புயல்-வெள்ள பாதிப்புக்கு கூடுதல் நிவாரண நிதியை வழங்குமாறு வலியுறுத்த போவதாகவும், என்னென்ன சேதத்துக்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என்ற விவரங்களுடன் லிஸ்ட்டை, கோரிக்கை மனுவாகவும் அமித்ஷாவிடம் வழங்க உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் கசிந்தன.
அதேபோல, முதல்வர் ஸ்டாலினே நிவாரண நிதி கேட்க, டெல்லி செல்லலாம் என்றும், இதுகுறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் சொன்னார்கள்.
நிவாரணம்: ஆனால், அரசியல் ரீதியாக, பிரதமர் மோடியை எதிர்ப்பதில் உறுதியாக இருக்கிறேன் என்பதை, "இந்தியா" கூட்டணி தலைவர்களுக்கு வெளிப்படுத்துவதற்காகவே, மோடியை ஸ்டாலின் சந்திப்பதை தவிர்க்கவும் வாய்ப்பு உள்ளதாக சொன்னார்கள். அதனால்தான், அமித்ஷாவை சந்தித்து, வெள்ள நிவாரண தொகையை கூடுதலாக பெறுவதற்குரிய கோரிக்கை மனு வழங்குவதற்கான ஏற்பாடுகளும், உதயநிதி தரப்பில் செய்யப்பட்டு வருவதாக கூறினார்கள்.
ஆனால், இப்போது விவகாரமே வேறுமாதிரியாக திரும்பியுள்ளது.. இந்தியா கூட்டணியின் 4-வது ஆலோசனைக்கூட்டம் நாளை டெல்லியில் நடக்கவிருக்கும் நிலையில், அதில் கலந்துகொள்ள டெல்லி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின். இந்த பயணத்தின்போது பிரதமர் மோடியை சந்தித்து, பேச திட்டமிட்டுள்ளார். இதற்காக மோடியின் அப்பாயிண்ட்மென்ட்டும் கேட்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
தென்மாவட்டம்: அதாவது, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை மிக்ஜாம் புயல் தாக்கிய சேதத்தில் இருந்து மீளாத திமுக அரசுக்கு, குமரி உள்ளிட்ட 4 தென்மாவட்டங்களில் பெய்து வரும் பேய் மழையில் ஏற்பட்டு வரும் பாதிப்புகள் மேலும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், மிக்ஜாம் புயல் பாதிப்புகளுக்கான நிவாரண நிதி உதவியை விரைந்து வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைப்பதற்காக பிரதமர் மோடியை சந்திக்க முடிவு செய்யப்பட்டு, மோடியிடம் அப்பாயின்ட்மெண்ட் கேட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குமரி உள்ளிட்ட 4 மாவட்டங்கள் மழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும் இந்த சந்திப்பில் விவாதிக்கவிருக்கிறாராம் முதல்வர் ஸ்டாலின்.
விவாதம்: இந்த சந்திப்பின்போது, நிவாரண உதவி கோருவது மட்டுமல்ல, ராஜ்நாத்சிங் - ஸ்டாலின் சந்திப்பின்போது பேசப்பட்ட அரசியல் குறித்தும் விவாதிக்கப்படலாம் என்றும் திமுக தரப்பில் கிசுகிசுக்கப்படுகிறது.
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலக்கப்பட வேண்டும் என்பது மோடி - அமித்ஷாவின் எதிர்பார்ப்பாக உள்ளதாம்.. அந்த எதிர்பார்ப்பை திமுக நிறைவேற்ற வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாகவும் இருக்கிறதாம். இந்த அரசியல் குறித்து திமுகவின் நிலைப்பாட்டை ஸ்டாலின் தெரிவிப்பார் என்கிறது திமுக வட்டாரம். அநேகமாக, இந்த சந்திப்பிற்கு கூடுதல் தகவல் கிடைக்கும் என்கிறார்கள் திமுக சீனியர்கள்.
அமித்ஷா: இதற்கிடையே, அமித்ஷாவை சந்திக்க உதயநிதிக்காக அப்பாயிண்மென்ட் கேட்கப்பட்டது. ஆனால், அமித்ஷா அப்பாயின்மெண்ட் அதிகமிருப்பதால் உடனடி நேரம் ஒதுக்கப்படவில்லையாம். மேலும், இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்திற்கு இந்தமுறை உதயநிதியை அழைத்துச் செல்லவும் ஸ்டாலின் திட்டமிட்டிருந்தாராம்.
காரணம், உதயநிதியின் சனாதன எதிர்ப்பு பேச்சுக்கு இந்தியா கூட்டணியில் ஆதரவு இல்லாததும், எதிர்ப்புகள் வலுத்ததும் தான். இதனை சரி செய்ய உதயநிதியை அழைத்து செல்லலாம் என யோசித்தார் ஸ்டாலின். ஆனால், தென் மாவட்ட மழை பாதிப்பை பார்வையிட உதயநிதி செல்வதால், ஸ்டாலினுடன் டெல்லிக்கு உதயநிதி செல்லவில்லை என்றும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications