மூல பத்திரம்.. அதைவிடுங்க.. பவர் பத்திரம் பண்றீங்களா? சொத்து விற்பனையில் இவ்வளவா? நோட் பண்ணுங்க
சென்னை: பவர் பத்திரம் என்றால் என்ன? அதன் அதிகாரங்கள் என்னென்ன? என்பதை பற்றி சுருக்கமாக தெரிந்து கொள்ளலாம்.
நாளுக்கு நாள் சொத்துக்கள் விவகாரங்களில் நிறைய முறைகேடுகள் நடந்து வருகின்றன.. நிலத்தை வாங்கி விற்பதற்கு பத்திரங்கள் என்பது மிகமிக அவசியமானது என்பதால், போலி பத்திரங்களை தயார் செய்து, மோசடிகள் அதிகரித்துவிட்டன.

பதிவுத்துறை: அதனால்தான், இனி பத்திரப்பதிவுத்தலைவரே, போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் வகையில் அதிகாரம் வழங்கும் பத்திரப்பதிவு திருத்தச் சட்ட மசோதாவை, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.. போலி பத்திரம் பதிவாகிவிட்டால், பதிவாளரே முன்வந்து, புகாரின் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுப்பார்.
அதேபோல, அதுமட்டுமல்ல, ஒருவரின் பத்திரம் உண்மையா? அது அவர்களின் பெயரில்தான் உள்ளதா? நிலத்தின் உரிமையாளர் யார்? என்பதை கண்டுபிடிக்க, http://ecview.tnreginet.net/ என்ற வசதியையும் தமிழக அரசு ஆன்லைனில் செய்து தந்துள்ளது ..
சொத்தின் உரிமையாளர், தன்னால் செயல்படுத்த முடியாத அல்லது சரியாக பராமரிக்க முடியாத சொத்தை அதிகாரம் என்ற பெயரில், மற்றொருவருக்கு எழுதி கொடுப்பதே பவர் பத்திரம் ஆகும்.. அதுமட்டுமல்ல, நமது நிலத்தை யாராவது ஆக்கிரமிப்பு செய்தால், அப்போது இந்த பவர் பத்திரம் பயன்படும்..
பவர் பத்திரங்கள்: பவர் பத்திரம் எழுதி கொடுப்பவர் முதன்மையாளர் (Principal) என்பார்கள்.. யாருக்கு பவர் பத்திரம் எழுதி தருகிறோமோ அவர் பெயர் முகவர் என்பார்கள். அந்தவகையில், முதன்மையாளர் தன்னுடைய முகவருக்கு சில குறிப்பிட்ட அதிகாரங்களை தன் சார்பாக செயல்பட வழங்க முடியும்.
முன்பெல்லாம், முதன்மையாளர் மட்டுமே பவர் பத்திரத்தில் கையெழுத்து போட்டனர்,. ஆனால், இப்போது, பவர் பத்திரத்தில் முதன்மையாளர் கையெழுத்துடன் சேர்த்து, அவர் நியமிக்கும் முகவரும் கையெழுத்தும் கட்டாயம் போட வேண்டுமாம்.
பொது அதிகாரம்: பவர் பத்திரங்களில், பொது அதிகாரப் பத்திரம் (General Power Of Attorney) தனி அதிகாரப் பத்திரம் Limited Power Of Attorney) என்று 2 வகைகள் உள்ளன.. பொது அதிகார பத்திரம் என்பது அதன் முகவராக உள்ளவருக்கு சம்பந்தப்பட்ட சொத்தை விற்கவும், நிலத்தை மனைப்பிரிவுகளாக ஆக்கவும், அரசு அலுவலகங்களில் சொத்து சம்பந்தமான ஆவணங்களில் கையொப்பம் இடவும் அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கும்
தனி அதிகார பத்திரம் என்பது ஒரு குறிப்பிட்ட செயலை செய்வதற்கு மட்டும் அதிகாரம் தரப்பட்டிருக்கும். அதாவது, சொத்தை விற்பது அல்லது நிலத்தை மனைப்பிரிவுகளாக பிரிப்பது போன்ற குறிப்பிட்ட செயலை தவிர வேறு எதையும் அவர் மேற்கொள்ள இயலாது.
பவர் ரத்து: பவர் பத்திரத்தில், ஏதேனும் காலத்தை குறிப்பிடாமல் இருந்தால், அந்த பவர் பத்திரத்தை முதன்மையாளர் ரத்து செய்யும் வரை செல்லுபடியாகும்.. ஆனால், முதன்மையாளர் இறந்துவிட்டால் பவர் பத்திரம் தானாகவே காலாவதியாகிவிடும்..
நீங்கள் அதிகாரம் கொடுக்கும் முகவர், உங்கள் நிலத்தை வேறு யாருக்காவது கிரையம் செய்திருந்தாலோ அல்லது கிரையம் செய்வதற்கான வேலையில் இறங்கியிருந்தாலோ, அந்த பவர் பத்திரத்தை முதன்மையானர் எளிதாக ரத்து செய்துவிடலாம்.
சொத்தின் உரிமையாளர் அல்லது பவர் ஆப் அட்டர்னி மூலம் மட்டுமே அதிகார பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் அதற்கான நகல் வேண்டி விண்ணப்பம் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் பவர் ரத்து செய்யப்பட்டுள்ளதா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ளமுடியும்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications