டிக்கெட் செக்கிங் மட்டுமில்லை.. ரயிலில் டிடிஆருக்கு இவ்ளோ பொறுப்பு இருக்கா.. எப்படி புகார் அளிப்பது?
சென்னை: ரயில்களில் பயணிகளிடம் டிக்கெட் செக்கிங் செய்வது மட்டுமேதான் வேலை என்று பயணிகள் பலரும் நினைத்திருப்பார்கள். ஆனால், டிக்கெட் செக்கிங் மட்டும் இன்றி டிடிஇ -க்களுக்கு பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு கடமைகளும் உள்ளன. அதுபற்றி இங்கே பார்ப்போம்.
இந்தியாவில் தினமும் 2 கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் சேவையை பயன்படுத்துகிறார்கள். தொலைதூரங்களுக்கு செல்வது என்றால் ரயில் பயணத்தைதான் பயணிகள் அதிகம் விரும்புகிறார்கள். ரயில்களில் ஏறியதும், பயணிகளிடம் டிக்கெட் பரிசோதகர் (TTE) டிக்கெட் வைத்து இருக்கிறார்களா என சோதனை செய்து உறுதி செய்வார்.

டிக்கெட் பரிசோதகர்களின் பணி: டிக்கெட் பரிசோதகர் தன்னிடம் வைத்திருக்கும் லிஸ்ட்டில் உள்ள பயணிகள் தான், பயணம் செய்கிறார்களா? என்பதை உறுதி செய்வார். ரயிலில் டிக்கெட் பரிசோதகரின் பணி, டிக்கெட் செக்கிங் மட்டுமே என்று பல பயணிகளும் நினைக்கிறார்கள். ஆனால், டிடிஇ (டிக்கெட் பரிசோதகர்)களுக்கு டிக்கெட் செக் செய்வதை தவிர்த்து அவருக்கு வேறு பல பணிகளும் இருக்கின்றன. அது குறித்து இங்கே பார்க்கலாம்..
ரயில்வே விதிகளின் படி, ரயில்களில் கதவு முறையாக அடைக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்வதோடு, களவு எதுவும் நடைபெறாமல் பாதுகாப்பதும் டிக்கெட் பரிசோதகரின் பணிதான். ரயில்வே விதிகள் manual-ல் உள்ள மேலும் சில விதிகளை இங்கே பார்க்கலாம்
கதவுகளை மூடுவது:
* ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் வரும் திசையில் உள்ள கதவுகளை மட்டுமே டிக்கெட் பரிசோதகர் திறக்க வேண்டும். மறுபக்கம் அதாவது பிளாட்பார்ம் இல்லாத பக்கத்தில் உள்ள கதவுகள் மூடியிருப்பதை உறுதி செய்வது டிடிஇ-க்களின் பணிதான். இதன் மூலம் பிளாட்பார்ம் இல்லாத பக்கத்தில் இருந்து பிற நபர்கள் ரயிலுக்குள் ஏற முடியாத நிலை ஏற்படும்.
* ரயில் புறப்பட்டதும் ரயிலின் கதவை மூடுவது என்பது டிக்கெட் பரிசோதரின் பொறுப்புதான். ஏதாவது ஒரு பயணி ரயிலின் கதவு அருகே சுற்றிக்கொண்டு இருந்தால் அவரை சீட்டில் இருக்க சொல்லும் உரிமை டிக்கெட் பரிசோதகருக்கு உள்ளது.
டிடிஇ-க்களுக்கு எதிராக புகார் அளிப்பது எப்படி?:
ரயிலில் பயணம் செய்யும் போது ரயில் நிலையங்கள் பற்றிய தகவல்களை பயணிகளுக்கு டிக்கெட் பரிசோதகர் அளிக்கவில்லை என்றால், பயணிகள் அவருக்கு எதிராக 139 என்ற எண்ணில் புகாரளிக்கலாம்.
* எஸ்.எம்.எஸ் மூலம் புகாரளிக்க விரும்பினால், 91-9717680982-என்ற எண்ணில் பயணிகள் புகாரினை டைப் செய்து அளிக்க முடியும்.
* ரயில்களில் சேவை குறைபாடு இருந்தால் @RailMinIndia என்ற எக்ஸ் கணக்கு மூலமாகவும் பயணிகள் புகாரினை தெரிவிக்கலாம்.
டிக்கெட் பரிசோதகரின் பிற பொறுப்புகள்:
ஸ்லீப்பர் கோச் டிக்கெட் பரிசோதகர்கள், ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே தங்கள் டூட்டியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். டிக்கெட் பரிசோதகர்கள் உரிய யூனிபார்ம் அணிந்து இருப்பது ரயில்வே விதிகளின் படி கட்டாயம். பணி நேரத்தில் பெயருடன் கூடிய பேட்ஜும் அணிந்து இருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications