"ஜல்சக்தி அபியான்" சூப்பர் ப்ளான்.. மாநில பள்ளிக்கல்வித்துறைக்கு ஓடிவந்த உத்தரவு.. சபாஷ் மத்திய அரசு
சென்னை: மாநில பள்ளிக்கல்வித் துறைக்கு, மத்திய கல்வித்துறை அமைச்சகம் ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ள நிலையில், இதற்கு மாநில பள்ளிக்கல்வித்துறையும் இசைவு தெரிவித்துள்ளது. என்ன அது?
நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க "ஜல்சக்தி அபியான்" என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. காரணம், நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது.. இந்த பிரச்னையை சரி செய்யவும், இயற்கை வளத்தைப் பாதுகாக்கவும்தான், மத்திய அரசு ஜல் சக்தி அபியான் என்ற திட்டத்தை செயல்படுத்த முனைந்தது.

நியமனம்: இதற்காக நாடு முழுவதும் 255 மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருவதாக கண்டறியப்பட்டது.. இதற்காகவே 255 கூடுதல் மற்றும் இணை செயலாளர்களையும் மத்திய அரசு நியமித்திருந்தது..
இவர்கள் அந்தந்த மாவட்டங்களின் பொறுப்பாளர்களாக இருந்து தண்ணீர் சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.. 255 மாவட்டங்களில் உள்ள 1592 தாலுகா வாரியாக நீர்நிலைகள் கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தனர். தெரிவித்துள்ளனர்.
நிலத்தடி நீர் மட்டம்: அதுமட்டுமல்லாமல், ஜல்சக்தி அபியான் திட்டத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படுகின்றன. மழைநீர் சேகரிப்பு அமைப்புகள், பண்ணை குட்டை அமைத்தல், சிறு தடுப்பணைகள், விவசாய நிலையங்களில் வரப்பு அமைத்தல், மழை வளம் அதிகரிக்க மரம் வளர்க்கும் பணிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது.
நாடு முழுதும் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும், குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் வகையில், ஜல்சக்தி அபியான் திட்டத்தை, மத்திய அரசு துவக்கி செயல்படுத்திவரும்நிலையில், இன்னொரு முக்கிய வேண்டுகோளை மத்திய கல்வித்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஜல்சக்தி அபியான் திட்டம்: அதில், ஜல்சக்தி அபியான் திட்டத்தின் நோக்கம் பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்துதல், நீரை சேமித்தல், நீரை வீணாக்காமல் செலவழித்தல், குடிநீர் ஆதாரங்களை பேணுதல் போன்றவை குறித்து, மாணவர்களுக்கு வகுப்பு நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மாநில பள்ளிக்கல்வித் துறையை, மத்திய கல்வித்துறை அமைச்சகம் கேட்டு கொண்டுள்ளது. அதன்படி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனரகம் தற்போது அறிவுறுத்தியிருக்கிறது.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications