ரஜினிகாந்த் கவர்னர் ஆகிறாரா?.. ஓகே சொன்ன லீடர்கள்.. டபுள் பிளானில் "மேலிடம்".. என்ன நடக்குது பாஜகவில்
ரஜினிகாந்த்தை கவர்னர் ஆக்கும் முயற்சியில் பாஜக மேலிடம் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது
சென்னை: ரஜினிகாந்த் ஆளுநராக போகிறார் என்று தகவல்கள் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.. ரஜினியை வைத்து பாஜக மிகப்பெரிய பிளானை போட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
Recommended Video
விரைவில் எம்பி தேர்தல் வர உள்ளது.. இதற்காக தமிழகத்தை நோக்கி இப்போதே மேலிட பாஜக காய் நகர்த்த துவங்கிவிட்டது.
இதனிடையே, சமீபத்தில் ஆளுநரை ராஜ்பவனில் ரஜினி திடீரென சந்தித்து பேசியிருந்தார்.. அரசியல் காரணங்களுக்காக இந்த சந்திப்பு நடக்கவில்லை என்கிறார் ரஜினி.

ஹார்ட் ஒர்க்
அத்துடன், செய்தியாளர்களிடம் பேசும்போது, ஆளுநரை நிறைய புகழ்ந்து பேசினார். "மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.. 30 நிமிடம் பேசினேன். அரசியல் விஷயமும் அவரிடம் பேசினேன்.. அவர் காஷ்மீரில் பிறந்து, வடமாநிலங்களிலேயே இருந்தவர்.. ஆனால், தமிழ்நாட்டை மிகவும் நேசித்துள்ளார்.. முக்கியமாக தமிழக மக்கள், அவர்களது நேர்மை, கடின உழைப்பு இதெல்லாம் ஆளுநருக்கு மிகவும் பிடித்துவிட்டது.. இங்கே உள்ள ஆன்மீக உணர்வு அவர் மிகவும் நேசிக்கிறார்.. தமிழகத்தின் நல்லதுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறேன் என்று ஆளுநர் சொல்லி உள்ளார். தமிழக ஆன்மீக உணர்வு ஆளுநரை ஈர்த்துள்ளது" என்றார் ரஜினி.

பழனிசாமி பகீர்
அரசியல் காரணங்களுக்காக பேசினேன் என்று வெளிப்படையாக சொன்ன ரஜினி, அவைகள் என்ன என்பதை கூற மறுத்துவிட்டார்.. இப்படிப்பட்ட சூழலில்தான், அதிமுகவின் கேசி பழனிசாமி புதுகுண்டை ஒன்றை தூக்கி போட்டார்.. அதன்படி, "அதிமுக சின்னத்தை முடக்கி, ரஜினியை அதிமுகவுக்குள் கொண்டு வந்து, அவரை முன்னிறுத்தி நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாஜக திட்டமிடுகிறது" என்று கூறியிருந்தது, அதற்கு மேல் பரபரப்பையும், விவாதங்களையும் ஏற்படுத்தியது.

ஓபன் டாக்
ஏற்கனவே, திமுகவுடன் ஆளுநருக்கான உரசல் அதிகமாகி உள்ள நிலையில், ஆளுநரின் தொடர் வெறுப்பரசியல் பேச்சால், திமுக கூட்டணி கட்சிகள் கொந்தளிப்பில் உள்ள நிலையில், ஆளுநர் ரவி மீதான இமேஜை உயர்த்தி ரஜினி பேசியிருந்தது, பல்வேறு தரப்புக்கு கடுப்பை ஏற்படுத்தியிருந்தது.. அரசியலுக்கு வரப்போவதில்லை என்று ரஜினியே ஓபனாக அதே செய்தியாளர் கூட்டத்தில் சொல்லிவிட்ட நிலையில், ரஜினியால் அதிமுகவுக்கு எந்தவித பாதிப்பும் வராது என்றும் மற்றொரு சாரார் கருத்துக்களை தெரிவிக்க தொடங்கினர்.

ஈர்ப்பு + அறுவடை
ஆளுநருடன் ரஜினி என்ன பேசியிருப்பார் என்ற யூகங்கள் வட்டமடித்து வந்தாலும், எப்படியும் ரஜினியை பாஜக முழுமையாகவே பயன்படுத்தி கொள்ளக்கூடும், அவரை இந்த முறை லேசில் நழுவ விடாது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. ஆனால், ரஜினியை பாஜகவுக்குள்ளேயே ஒரு தரப்பு விரும்புகிறது, இன்னொரு தரப்பு விரும்பவில்லையாம்.. அதாவது, மோடி தரப்பில் ரஜினியை விரும்புகிறார்கள், ஆனால், அமித்ஷா தரப்பில் அந்த அளவுக்கு ரஜினி விஷயத்தில் ஆர்வம் காட்டப்படவில்லையாம். இப்படிப்பட்ட சூழலில்தான், இன்னொரு தகவல் தீயாய் வட்டமடித்து கொண்டிருக்கிறது..

கிசுகிசு
இப்போதைக்கு சில மாநிலங்களில் கவர்னர் பதவி காலியாகவே இருப்பதால், இவைகளில் சிறிய மாநிலம் ஒன்றில் ரஜினியை கவர்னர் பதவியில் அமர வைக்கலாம் என்று கூட ஆலோசிக்கப்பட்டதாக, ஒரு வார பத்திரிகைகளில் செய்தி வெளியாகி இருந்தது... இந்த தகவல் ஓரளவுக்கு உண்மை என்று தற்போது டெல்லி வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறதாம்.. அதுமட்டுமல்ல, தமிழகத்தில் ரஜினிக்கு மிகப்பெரிய வாக்கு வங்கி இல்லை.. அதிலும், 1996-களில் இருந்த ஆதரவு அலை இப்போது படிப்படியாக குறைந்துவிட்ட நிலையில், எப்படி இழந்த கிரேஸை அவருக்கு மீட்டு தருவது என்றும் பாஜக யோசித்து வருகிறதாம்.

3 + பிளான்கள்
அதன்படி, ரஜினியை தங்கள் பக்கம் இழுத்து, சில பொதுக்கூட்டங்களில் பேச வைத்தாலே போதும், இழந்த ஆதரவை அறுவடை செய்யலாம் என்று நினைக்கிறதாம்.. இதற்காக ரஜினிக்கு என்ன வேண்டுமானாலும் செய்ய பாஜக தலைவர்கள் தயாராக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.. ஒருபக்கம் கவர்னர் பதவி, இன்னொரு பக்கம் தங்கள் பக்கம் இழுத்து, மக்களின் வாக்குகளை பெறுவது என இரண்டுவித திட்டங்களை பாஜக கையில் எடுத்திருப்பதாக தகவல்கள் றெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கின்றன.. ஆகமொத்தம், ரஜினியை இப்போதைக்கு விடுவதாக இல்லை போலும்..!
-
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
ரஜினி படத்தை எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது.. ரசிகர் மன்றம் அதிரடி.. அண்ணாமலைக்கு வைத்த செக்? -
"விஜய்யை பார்த்து தொடங்கிய இயக்கமா? ரஜினிக்கு பொறாமையா?" ஓபனாக பேசிய லதா ரஜினிகாந்த்












Click it and Unblock the Notifications