ஆதார் போட்டோவ விட மோசம். உலகின் கடைசி செல்ஃபி இப்டிதான் இருக்குமாம்! ரோபோ வெளியிட்ட படம்
சென்னை: உலகம் அழியும் நேரத்தில் ஒரு செல்பி எடுத்தால் எப்படி இருக்கும்? என்ற இந்த கேள்விக்கான விடைகளை ரோபோ வழங்கியுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள இயற்கை வளங்களை மனிதன் தனது தேவைக்கு பயன்படுத்தி வருகிறான். ஆனால் இது இயற்கையை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறது. பேராசை கொண்ட மனித இனம் உலகில் உள்ள வேறெந்த உயிரினத்தை விடவும் அதிக அளவில் இயற்கையை சுரண்டி வருவதாக அவ்வப்போது அறிவியல் ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்த உலகம் ஒரு வேளை அழிந்து விட்டால் எப்படி இருக்கும்? இந்த இறுதி தருணத்தில் ஒரு செல்பி எடுத்தால் எப்படி இருக்கும்?
இந்த கேள்விக்கான விடைகளை சமீபத்தில் ஒரு ரோபோ வழங்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவு திறனை கொண்டு இயங்கும் DALL-E எனும் அமைப்பு ஒன்று இந்த படங்களை டிக்டாக்கில் பதிவிட்டுள்ளது. ஆனால் இந்தியாவில்தான் டிக்டாக் இல்லையே என்று வருந்துகிறீர்களா? கவலை வேண்டாம் தற்போது இது தொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களை அனைத்திலும் பகிரப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது.

அழிவு
இந்த படங்களில் மனிதன் ஆதார், வாக்காளர் அடையாள அட்டையில் உள்ளதைக் காட்டிலும் மிகவும் மோசமான நிலையில் உள்ளான். ஆமாங்க சிதைந்த முகம், பருமன் ஏறிய உடல், ஒழுங்கில்லாத விரல்கள் அமைப்பு என ஏறத்தாழ ஒரு ஜாம்பி போல மனிதன் உள்ளான். அப்படியான நிலையில் அவன் எடுத்துள்ள செல்ஃபிதான் இந்த உலகத்தின் இறுதி செல்ஃபி என சொல்லப்படுகிறது. அதாவது மனிதன் அழிவதற்கு முன்னர் இப்படிதான் இருப்பான் என ஓவர்லார்ட்ஸ் எனும் ரோபோ கணித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு
சரி இப்படி எதிர்காலத்தை கணிக்கக்கூடிய ரோபோக்கள் எப்படி சாத்தியம் எனக் கேட்கிறீர்களா? அதற்குதான் செயற்கை நுண்ணறிவு பயன்படுகிறது. அதிலும், GPT-3 என்பது இதில மிகவும் மேம்பட்டதாகும். இந்த GPT-3 என்பது தன்னியக்க மொழி மாதிரியாகும். இது ஆழ்ந்த கற்றல் முறையை பயன்படுத்துகிறது. இதன் மூலம், மனிதனைப் போன்ற உரையாடல், கதைகள் மற்றும் கவிதைகளை உருவாக்க முடியும். இதை பயன்படுத்திதான் எதிர்க்கால படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பெறப்பட்ட படங்கள் முற்றிலும் சரியானது இல்லை என்றாலும் இதை பார்க்கும் மக்களுக்கு நமது பூமியின் மீது ஒரு வித மதிப்பு ஏற்படுகிறது.

கடைசி செல்ஃபி
சமூக வலைத்தளத்தில் இந்த படங்கள் பதிவேற்றப்பட்ட பின்னர் பலர் மேற்குறிப்பிட்டவாறு பூமி குறித்து நேர்மறையாக சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். அதே சமயம் இது பலபேரின் தூக்கத்தையும் கெடுத்துள்ளது. இந்த DALL-E என்பது கடந்த ஆண்டு செயற்கை நுண்ணறிவு திறன் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். தற்போது உலகம் முழுவதும் உயிரோடு உள்ள இனங்கள் வெறும் 1-3 சதவிகிதமானவைதான். ஏனெனில் இதற்கு முன்னர் இருந்த பெரும் உயிரினங்கள் இயற்கை பேரிடரால் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டன. எனவே மீதமிருப்பது நாம் மட்டும்தான்.

மனிதன்
உயிர் சூழலியலை கட்டமைப்பதில் விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு மிகப் பெரிய பங்களிப்பு உண்டு. நிலையான வளர்ச்சியை நோக்கிய மரபு ரீதியான மாற்றங்கள், சமூக, பொருளாதார மாற்றங்கள், கல்வி மற்றும் மனிதர்களின் நலனுக்கான நடவடிக்கைகள் போன்றவற்றுக்கும் அவை உறுதுணையாக இருக்கின்றன. சுருக்கமாக சொல்வதெனில் சக உயிரினங்கள் இல்லையேல் மனிதர்கள் இல்லை. அப்படி இருக்கையில் லாப வெறி கொண்டு இயற்கையை சுரண்டும் ஒரு சிறு பிரிவினர் இந்த உலகத்தின் கடைசி செஃபியை பார்த்தாவது திருந்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் பலர் வலியுறுத்தியுள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications