சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உங்க ப்ரவுசர் சுத்த பத்தமா தானே இருக்கு! மறந்தும் இதனை கூகுளில் தேடாதீங்க! அப்புறம் கம்பி எண்ணனும்!

Google Oneindia Tamil News

சென்னை : நீங்கள் கூகுளில் எந்த விஷயத்தை தேடுகிறீர்கள் என்பதை பொறுத்து உங்களுக்கு சிக்கல் ஏற்படுமா அல்லது ஏற்படாதா என்பதை கூற முடியும். இதனால் கூகுளில் நீங்கள் தேடக் கூடாத டாப்பிக்குகள் என சில இருக்கின்றன

தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட சூழ்நிலையில் அனைத்து தேவைகளையும் செல்போன் மூலமே நிறைவேற்ற கொள்ள முடியும் என்று நிலை உருவாகி இருக்கிறது. தீபாவளிக்கு துணி எடுப்பது முதல் காலை டிபன் வரை எல்லாமே ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீடு தேடி வந்து விடும்.

அதேபோல ஃபேஸ்புக் ட்விட்டர் ஆகியவற்றில் கணக்கு இல்லாத நபர்களே கிடையாது. உச்சபட்ச நடிகர்கள் ,பிரபலங்கள், அரசியல்வாதிகள் தொடங்கி சாதாரண மக்கள் வரை அனைவரும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

சட்டசபையில் சம்பவம்.. வாழ்த்து மழையில் ஸ்டாலின் - கர்வமா இருக்கு தலைவரே! மா.சுப்ரமணியன் புகழாரம் சட்டசபையில் சம்பவம்.. வாழ்த்து மழையில் ஸ்டாலின் - கர்வமா இருக்கு தலைவரே! மா.சுப்ரமணியன் புகழாரம்

கூகுள்

கூகுள்

அதே நேரத்தில் கூகுள் இல்லையென்றால் யாராலும் ஒரு நாளை கடக்க முடியாது. பயணம், சினிமா, அரசியல், உணவு என எந்த துறைகள் ஆனாலும் ஒரு நாளாவது கூகுளை பயன்படுத்தாமல் யாராலும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு கூகுள் நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. அதே நேரத்தில் இணையங்களில் பல பிரச்சனைகளும் இருக்கத்தான் செய்கிறது. கூகுளில் எதை வேண்டுமானாலும் நீங்கள் பெறலாம் அதை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்துதான் இருக்கிறது. ஆனால் சட்டவிரோத செயல்களுக்காகவும் சிலர் கூகுளை பயன்படுத்தி வருகின்றனர்.

குண்டு வெடிப்பு

குண்டு வெடிப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட மங்களூர் குண்டுவெடிப்பில் குக்கர் வெடிகுண்டை எப்படி தயாரிப்பது என கூகுளில் பார்த்து குற்றவாளி தெரிந்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் கிளம்பியது இதே போன்ற ஒரு விவகாரம் புதுச்சேரியிலும் நடந்தது. தீபாவளிக்கு மீதமான பட்டாசுகளை வைத்து வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என பார்த்து சிக்கலில் சிக்கிய சிறுவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

சைபர் கிரைம்

சைபர் கிரைம்

இதனால் இணையதளங்களை சைபர் கிரைம் போலீசார் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். எனவே நீங்கள் கூகுளில் எந்த விஷயத்தை தேடுகிறீர்கள் என்பதை பொறுத்து உங்களுக்கு சிக்கல் ஏற்படுமா அல்லது ஏற்படாதா என்பதை கூற முடியும். இதனால் கூகுளில் நீங்கள் தேடக் கூடாத டாப்பிக்குகள் என சில இருக்கின்றன. அவற்றைத் தான் இந்த கட்டுரையில் நாம் பார்க்கப் போகிறோம்.

தீவிரவாத செயல்கள்

தீவிரவாத செயல்கள்

தற்போது கிடைத்திருக்கும் தகவல்கள் படி சைபர் கிரைம் போலீசார் மிக உன்னிப்பாக கவனிப்பது தீவிரவாத நடவடிக்கைகளை தான் எனவே பயங்கரவாத அமைப்புகள் குறித்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் வெடிகுண்டு தயாரிப்பது எப்படி உள்ளிட்ட விஷயங்கள் குறித்து எக்காரணத்தைக் கொண்டும் கூகுளில் தேடாமல் இருப்பது அவசியம் ஒருவேளை நீங்கள் கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வந்தால் எந்தவித விளக்கம் கொடுத்தாலும் நீங்கள் தப்பிக்க முடியாது ஆகவே தீவிரவாதம் மற்றும் அது தொடர்பான தகவல்களை கூகுளில் நீங்கள் தேடாமல் இருப்பது மிக மிக அவசியம் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆபாச படங்கள்

ஆபாச படங்கள்

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் நாகரீகம் வளர்ந்து விட்டாலும் ஆபாச படங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது ஆயிரக்கணக்கான வெப்சைடுகள் மத்திய அரசால் முடக்கப்பட்டிருக்கின்றன இருந்த போதும் புதிய புதிய பெயர்களில் ஆபாச வலைதளங்கள் முளைத்திருக்கின்றன ஆபாச படங்கள் பார்ப்பதை விட குறிப்பாக குழந்தைகள் ஆபாச படங்களை பதிவேற்றுவது பதிவிறக்கம் செய்வது பிறருக்கு பகிர்வது மிக முக்கிய குற்றமாக கருதப்படுகிறது child porn எனத் தேடினாலே அடுத்த நாள் உங்கள் வீட்டில் சைபர் கிரைம் போலீசார் காத்திருக்க நேரலாம் எனவே இதனையும் முற்றாக தவிர்த்து விடுவது நல்லது.

கொலை சம்பவங்கள்

கொலை சம்பவங்கள்

டெல்லி போன்ற பெருநகரங்களில் அடுத்தடுத்து இளம் பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர் கேரளாவிலும் இதே போல் குளிர்பானத்தில் விஷம் வைத்து இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார் இந்த குற்றவாளிகள் எல்லாம் மாட்டிக்கொள்ளாமல் கொலை செய்வது எப்படி தப்பிப்பது எப்படி உடல் பாகங்களை வெட்டுவது என தேடி இருப்பதாக தகவல்கள் வெளியானது எனவே கொலை கொள்ளை போன்றவற்றை எப்படி செய்வது என்பதை நிச்சயம் நீங்கள் கூகுளில் தேடக்கூடாது வேறு யாரும் காட்டிக் கொடுக்கத் தேவையில்லை google உங்களை காட்டிக் கொடுத்து விடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

டார்க் வெப்சைட்

டார்க் வெப்சைட்

இந்த பட்டியலில் இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன அந்த வகையில் கருக்கலைப்பு செய்வது எப்படி டார்க் வெப்சைட் என்றால் என்ன திருட்டு சினிமா உள்ளிட்ட விவகாரங்களும் இந்திய சட்டங்களின்படி தடை செய்யப்பட்டு இருக்கிறது எனவே கூகுளை நீங்கள் ஆக்கபூர்வமாக பயன்படுத்தினால் உங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை அதே நேரத்தில் சட்டவிரோதமாக நீங்கள் எதை செய்தாலும் நிச்சயம் நீங்கள் கம்பி எண்ண வேண்டி இருக்கும் என்பதை மறந்து விட வேண்டாம்

English summary
Depending on what you're searching for on Google can tell whether or not you're going to have a problem. So there are some topics that you should not search on Google
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X