ட்வின்ஸில் டிவிஸ்ட் வைத்த நடிகை.. வாடகைத் தாய் முறையில் பதிவு செய்த ஆதாரத்தை காட்டிய நயன்தாரா?
சென்னை: வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள தாங்கள் எப்போது பதிவு செய்தோம் என்பது குறித்து நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளதாக தெரிகிறது.
நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் செய்து 4 மாதங்கள் ஆன நிலையில் அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக அறிவித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
திருமணமாகி 4 மாதங்களில் இரட்டை குழந்தைகள் என்றால் நயன்தாரா அவரது திருமணத்தின் போது 6 மாத கர்ப்பிணியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அது போல் இல்லை. இதனால் அவர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றிருக்கலாம் என சொல்லப்பட்டது.

வாடகைத் தாய்
வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள நிறைய சட்டவிதிகள் இருக்கின்றன. இதில் முக்கியமானது இந்த முறையில் குழந்தை பெற்று கொள்ள தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். இந்த முதல் விதியிலேயே நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடி விதிகளை மீறிவிட்டதாக சொல்லப்பட்டது.

சர்ச்சை
இது பெரும் சர்ச்சையை கிளப்பியதால் இதுகுறித்து தமிழக அரசு தன் விசாரணையை தொடங்கியது. இது தொடர்பாக விசாரணை நடத்த மருத்துவத் துறை இணை இயக்குநர் தலைமையில் 3 மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் முதலில் நயன்தாரா வாடகைத் தாய் முறைக்கு அணுகிய மருத்துவமனையை கண்டறிந்தனர்.

நயன்தாரா- விக்னேஷ் சிவன்
அங்கு அவர்கள் விசாரணை நடத்தினர். நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியில் யாராவது ஒருவருக்கு இயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்பதற்கான சான்றிதழ் வாங்கப்பட்டதா, வாடகைத் தாய் முறை குறித்து தம்பதிக்கு முழுமையாக விளக்கம் அளிக்கப்பட்டதா?

விதிமுறைகள்
இந்த முறையில் விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்தெல்லாம் விசாரணை நடத்தினர். இதையடுத்து நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியிடமும் மருத்துவக் குழுவினர் விசாரணை நடத்தியதாக சொல்லப்படுகிறது. அதற்கான ஆதாரங்களையும் அவர்கள் சமர்ப்பித்ததாக தெரிகிறது. அந்த ஆதாரங்களின் அடிப்படையில் இருவரும் கடந்த 2016 ஆம் ஆண்டே பதிவு திருமணம் செய்து கொண்டனராம்.

வாடகைத் தாய் முறைக்கு பதிவு
கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற பதிவு செய்து விட்டனராம். கடந்த ஜனவரி மாதம் வாடகைத் தாய்க்கு செயற்கை முறையில் கருவானது கருப்பையில் செலுத்தப்பட்டதாம். எனவே தங்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளானது, அது போல் வாடகைத் தாய் நெறிமுறை சட்டமும் கடந்த ஜூன் மாதம் தான் அமலுக்கு வந்தது. ஆனால் நாங்கள் ஜனவரியிலேயே வாடகைத் தாயின் கர்ப்பப்பையில் எங்கள் கரு செலுத்தப்பட்டுவிட்டது. இதனால் நாங்கள் எந்த விதிகளையும் மீறவில்லை என தெரிவித்துள்ளனராம்.

6 ஆணடுகளுக்கு முன்பே பதிவு திருமணம்
கடந்த ஒரு வாரமாக விக்னேஷ் சிவன் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக போட்ட பதிவு முதல் தற்போது வரை நயன்தாரா சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் அந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளியையும் தங்கள் விளக்கத்தின் மூலம் நயன்தாரா விக்னேஷ் சிவன் அளித்துவிட்டதாகவே பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சர்ச்சை தொடங்கிய அடுத்த நாளே விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பதிவில், ல்லாம் சரியான தருணத்தில் உங்களை வந்து சேரும். அதுவரை பொறுமையாய் நன்றியுடன் இருங்கள் என்றும் விக்னேஷ் சிவன் குறிப்பிட்டிருந்தார். அந்த சரியான தருணம் மருத்துவத் துறை அதிகாரிகள் தங்களை கேட்ட போது விளக்கம் அளித்ததுடன் பொருந்தி போயுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications