தாம்பரம் டூ வேளச்சேரி சாலை விரிவாக்கம்.. ஜவ்வு போல இழுத்துச்சே? இப்ப பாருங்க.. சென்னைக்கே ஹேப்பி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிழக்கு தாம்பரம்- வேளச்சேரி சாலையை விரிவுபடுத்துவது தொடர்பான முக்கிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

தாம்பரம் - வேளச்சேரி சாலையை பொறுத்தவரை சென்னைவாசிகளின் தவிர்க்க முடியாத சாலையாகும்.. கிழக்கு தாம்பரத்தில் துவங்கும் இந்த சாலையானது சேலையூர், கேம்ப் ரோடு, செம்பாக்கம், வேங்கைவாசல், மேடவாக்கம், பள்ளிக்கரணை வழியாக வேளச்சேரியை அடைகிறது.

tambaram chennai

ஒருவழிப்பாதை: 16.3 கி.மீ., கொண்ட இந்த சாலை, ஜி.எஸ்.டி., சாலைக்கு மாற்றாக விளங்கி வருவதால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது.. அதனால்தான், கடந்த 1992ல், ஒரு வழிப்பாதையாக இருந்த இந்த சாலையை 4 வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யப்பட்டது.

எனினும் இப்போது சமீப ஆண்டுகளாகவே, மடிப்பாக்கம், பெரும்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகள் விஸ்வரூப வளர்ச்சியடைந்துவிட்டன.. அத்துன், ஐடி கம்பெனிகள், தனியார் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், அப்பார்ட்மென்ட்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள், என பிரம்மாண்டமாக வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. இதனால், டிராபிக் ஜாம் என்பது எப்போதுமே இங்கு காணப்படுகிறது.

பஸ் ஸ்டாண்டு: போதாக்குறைக்கு கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டும் பயன்பாட்டுக்கு வந்துவிட்டதால், தாம்பரம் - வேளச்சேரி சாலையில், நெரிசல் ஓயாமல் காணப்படுகிறது. நிரம்பி வரும் வாகன எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, சாலையின் அகலமும் இல்லை.. கிழக்கு தாம்பரம் முதல் மேடவாக்கம் வரை, பல இடங்களில் சாலை விரிவுபடுத்தப்படாமல் உள்ளதால், போக்குவரத்து நெரிசல் குறையாமலேயே காணப்படுகிறது. தவிர, குறையவில்லை.

தாம்பரம் - வேளச்சேரி சாலையை, ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகடள் நீண்ட காலமாகவே நடந்து வருகிறது.. ஆனால், இதில் 90 சதவீதம் முடிந்துவிட்டாகவும், இன்னும் சில மாதங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்து, எஞ்சிய பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால், இதற்கு தேவையான நிலங்கள் முழுமையாக இன்னும் வருவாய்த் துறையினர் கையகப்படுத்தி கொடுக்கவில்லையாம்.

இடவசதிகள்: எனவே, 6 வழி சாலையாக மாற்றுவதற்கு இடவசதி உள்ள இடங்களில் மட்டும் சாலைகளை பகுதி, பகுதியாக விரிவுபடுத்தியிருப்பதாக தெரிகிறது.. அதாவது, மேடவாக்கத்திலிருந்து கிழக்கு தாம்பரம் வரையில் சாலையை, முழுமையாக விரிவுபடுத்த முடியவில்லை என்கிறார்கள்..

இதன்காரணமாகவே, இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலால் விபத்துகள் நடப்பதால், தாம்பரம்-வேளச்சேரி சாலை விரிவாக்கப்பணியை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கைகைளை பொதுமக்கள் விடுத்து வருகிறார்கள்.

நிம்மதி: இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரப்பில் சொல்லும்போது, "கிழக்கு தாம்பரம்- வேளச்சேரி சாலையை விரிவுபடுத்துவதற்கு வசதியாக, நிலங்களை கையகப்படுத்துவதில் சில பிரச்சனைகள் ஏற்பட்டதால் தாமதம் ஆனது.

இப்போது நில உரிமையாளர்களிடம் பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது... அதனால் விரைவில் வருவாய்த்துறை நிலங்களை கையகப்படுத்தி, ஒப்படைக்க உள்ளனர்... இதையடுத்து, சாலையை விரிவுப்படுத்தும் பணி விரைவில் தொடங்கும்" என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள். இதையடுத்து, சென்னை புறநகரில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றே தெரிகிறது. அத்துடன் கிளாம்பாக்கத்தில் ரயில்வே ஸ்டேஷனும் வந்துவிட்டால், சென்னை மக்களுக்கு மிகுந்த வசதியாக இருக்கும் என்றே நம்பப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+