வியந்த தமிழ்நாடு.. கலர்ஃபுல் வசதிகளுடன் ரெடியான வந்தே மெட்ரோ ரயில்கள்.. சென்னை ஐசிஎப் செம மகிழ்ச்சி
சென்னை: சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலை, இன்னொரு புதிய சாதனையை படைக்க போகிறது.. இதுகுறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
உலக அளவில் ரயில் பெட்டிகள் தயாரிப்பில் முக்கியமான தொழிற்சாலையாக சென்னை ஐசிஎஃப் (ஒருங்கிணைந்த ரயில்பெட்டி தொழிற்சாலை) உள்ளது. அதனால்தான், இங்கு இப்போதுவரை பல்வேறு வகைகளில் 72,000-க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
வந்தே பாரத்: அந்தவகையில், வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பிலும், பயணிகளின் அபார ஆதரவை இந்த ஐசிஎப் பெற்று வருகிறது.. வந்தே பாரத் ரயில் பெட்டி தயாரிப்புகளின் அடுத்தடுத்த விரிவாக்கமும் நடந்து வருகிறது.. இதுவரை 60-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரித்து ரயில்வே வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில் 50-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல்வேறு முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.
சாதாரண பெட்டிகளை கொண்ட "வந்தே சதரன்" ரயில் பெட்டிகள் தயாரிப்பு பணிகள், ஐசிஎப் ரெயில் பெட்டி தொழிற்சாலையில்தான் தயாரிக்கப்பட்டு வருகின்றன..
துரிதமான பணிகள்: மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக வந்தே பாரத் ரயில் திட்டத்துக்கான பணிகளும் நடைபெற்று கொண்டிருக்கிறதாம். அலுமினியத்தால் தயாரிக்கப்பட்டு, மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக வந்தே பாரத் ரயில் திட்டத்துக்கான, ஆரம்பக்கட்ட பணிகள் துரிதமாக நடந்து வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதைத்தவிர சாதாரண வந்தே பாரத் என்று சொல்லக்கூடிய அம்ரித் பாரத் ரயில் ஏற்கெனவே 2 ரயில்கள் தயாரித்து அனுப்பிய நிலையில், கூடுதலாக அம்ரித் வந்தே மெட்ரோ ரயில்கள் தயாரிக்கும் பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
ஒருபக்கம் அம்ரித் பாரத் (சாதாரண வந்தே பாரத்)ரயில், இன்னொரு பக்கம் வந்தே மெட்ரோ ரயில் தயாரிப்பு பணிகள் என சென்னை ஐசிஎப் பம்பரமாக சுழன்று வருகிறது.. மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய முதல் வந்தே மெட்ரோ ரயில் தயாரிப்பு பணி கடந்த சில மாதங்களாக முழுவீச்சில் நடந்து வந்த நிலையில், அந்த பணிகளும் தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டதாம்.
அதிகாரிகள்: இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் சொல்லும்போது, "சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் குறுகியதூரத்துக்கு இயக்கும் வகையிலான வந்தே மெட்ரோ ரயில் தயாரிப்பு பணி 80 சதவீதம் முடிந்துள்ளது. இந்த மாத இறுதிக்குள் இந்த பணிகள் நடந்து முடிந்துவிடும்.. ரயில்வே வாரியத்திடம் வந்தே மெட்ரோ ரயிலை ஒப்படைக்க உள்ளோம்.
AC வசதி, பயணிகளை கவரும் உள்அலங்காரம், சொகுசு இருக்கைகள், கண்காணிப்பு கேமரா, அதிநவீன கழிப்பறைகள், தானியங்கி கதவுகள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறும். தேவைக்கு ஏற்ப, 8 முதல் 12 பெட்டிகள் இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும் 100பேர் அமர்ந்து செல்லலாம். 200 பேர் நிற்க முடியும்" என்று தெரிவித்துள்ளனர்.
எகிறும் எதிர்பார்ப்பு: இத்தனை வசதிகளுடன் இந்த மாதமே இறுதிக்கட்ட பணிகள் முடிந்துவிடும் என்று சொல்லியிருப்பதால், வந்தே மெட்ரோ ரயில்கள் மீதான எதிர்பார்ப்பு பொதுமக்களுக்கு அதிகரித்து வருகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications