சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அச்சாணி" முறிகிறதா.. எடப்பாடி பழனிசாமி சொன்ன "மெகா கூட்டணி" இதுதானாம்.. விசிகவா? அதென்ன 7 கட்சிகள்?

எடப்பாடி பழனிசாமி அமைக்க போவதாக சொல்லும் மெகா கூட்டணி கணக்கு எது தெரியுமா

Google Oneindia Tamil News

சென்னை: மெகா கூட்டணி வைத்து அதிமுக போட்டியிடும் என்று எடப்பாடி பழனிசாமி சொன்னார் இல்லையா? அப்படியானால் அதிமுகவில் இடம்பெற போகும் கூட்டணிகள் என்னென்ன என்பது குறித்த ஒருசில தகவல்கள் வட்டமடிக்கின்றன.!!!

விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில் தேசிய கட்சிகள் அதற்கு தயாராகி வருகின்றன.. அதேபோல நம் தமிழகத்திலும் தேர்தலுக்கான முனைப்புகள் காட்டப்படுகின்றன. கூட்டணி பேச்சுக்களும் மெல்ல எட்டிப்பார்க்க துவங்கி உள்ளன.

திமுகவை பொறுத்தவரை, கூட்டணி உடையாது என்கிறார்கள்.. முக்கியமாக 2 இடதுசாரிகளும் திமுகவை விட்டு போக வாய்ப்பில்லை, அதேபோல, விசிக, மதிமுக, வேல்முருகன் மாதிரியான கட்சிகளும் நிச்சயம் போகாது என்று வலுவாக நம்பப்பட்டு வருகிறது.. அந்தவகையில் திமுக வலுவாகவே உள்ளது.

செங்கோட்டையன் முதல்ல.. அடுத்து ராவணன்.. எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையன் முதல்ல.. அடுத்து ராவணன்.. எடப்பாடி பழனிசாமி

 கிலி கலக்கம்

கிலி கலக்கம்

4 நாட்களுக்கு முன்பு நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, மெகா கூட்டணி அதிமுக தலைமையில் தேர்தலை சந்திக்கும் என்றார்.. அப்படியானால் எந்த கட்சிகளை மனதில் வைத்துக்கொண்டு எடப்பாடி இப்படி பேசினார் என்பதே பலரது கேள்வியாக எழுந்து வருகிறது.. பாமகவை எடுத்துக் கொண்டால், 5 சதவீதம் வாக்குகள் உண்டு என்றாலும்கூட, அதிமுகவை கடுமையாக சாடி ஆரம்பித்துவிட்டது.. மேலும், பாஜகவுடன் கூட்டணி வைக்கவே ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது.. இத்தனைக்கும் 10 சதவீத இடஒதுக்கீட்டு தீர்ப்பு விஷயத்தை பாமக கடுமையாக எதிர்க்கவே செய்தது..

 விஜயகாந்த் மனசு

விஜயகாந்த் மனசு

எப்போதுமே இந்தி திணிப்பு என்ற விஷயத்திலும், டாக்டர் ராமதாஸ் கொந்தளித்து வருவதையும் மறுக்க முடியாது.. கருத்தியல், கொள்கை ரீதியான விஷயங்களில் பாஜகவுடன் எதிர்ப்பு இருந்தாலும், கூட்டணி விஷயத்தில் மென்மைப்போக்கையே பாமக கையில் எடுக்கும் என தெரிகிறது. இந்த லிஸ்ட்டில் தேமுதிகவையும் இணைத்து கொள்ளலாம்.. ஒருகாலத்தில் 10 சதவீத ஓட்டு சதவீதம் பெற்ற தேமுதிக இன்றைக்கு ஒரு சதவீதம்தான் வைத்திருக்கிறது என்றாலும், பாஜகவின் அபிமானத்தை அக்கட்சி எப்போதுமே பெற்று வருகிறது.. அதற்கு காரணம் விஜயகாந்த் என்ற நல்ல மனிதர் மீதான அபிப்பிராயம் மட்டுமே தவிர, தவிர வேறு காரணம் இருக்கவே முடியாது என்று அடித்து சொல்லலாம்..

 விஜி விஜயகாந்த்

விஜி விஜயகாந்த்

இந்த 2 கட்சிகளையும் தவிர்த்துவிட்டு பார்க்கும்போது, பாஜகவின் வாக்கு வங்கியும் தமிழகதில் பெரிதாக இல்லாத சூழலில். வேறு எந்த கட்சிகளை இணைத்து மெகா கூட்டணியை எடப்பாடி முன்னெடுக்க போகிறார்? என்ற குழப்பம் நிலவுகிறது.. அதைவிட முக்கியம், அதிமுக வாக்கு வங்கியிலேயே 2 சதவிகிதிம் வாக்கு சரிவு வந்துவிட்டதை சரிப்படுத்த வேண்டி உள்ளது.. 10 சதவீத இடஒதுக்கீட்டு விஷயத்தை பாமக, திமுக, விசிக, அமமுக போன்ற கட்சிகள் எதிர்த்தாலும், அதிமுக இப்போதுவரை கப்சிப் என அமைதி காத்து வருகிறது.. அப்படியானால், பாஜகவை எதிர்க்க அதிமுக துணியவில்லை என்று எடுத்துக் கொண்டாலும், கூட்டணியில் இணைத்து கொள்ளும் என்பதை மறுப்பதற்கில்லை.. அதற்காக மெகா கூட்டணி என்றும் அழைத்து விட முடியாது என்கிறார்கள்..

 ஜான் பாண்டியன்

ஜான் பாண்டியன்

இப்படிப்பட்ட சூழலில், ஒரு தனியார் டிவிக்கு அரசியல் ஆலோசகர் ரவீந்தர் துரைசாமி அளித்துள்ள பேட்டியில், "அதிமுக - பாஜக கூட்டணியில் ஏற்கனவே பாமக, தேமுதிக கட்சிகள் உள்ள சூழலில் டிடிவி தினகரனையும் கூட்டணியில் சேர்த்துக்கொண்டால் நிச்சயம் அது திமுகவை வீழ்த்துவதற்கு வலு சேர்க்கும் என்றே அதிமுக நம்புகிறது.. திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியுடன் டிடிவியும் இணைவார் என்றே சொல்லகிறார்கள்.. அதேபோல, டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளும் அதிமுக - கூட்டணியிலேயே நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

பாரிவேந்தர்

பாரிவேந்தர்

அதன்படி பார்த்தால் பாஜக + அதிமுக + பாமக + தேமுதிக + அமமுக + புதிய தமிழகம், ஐஜேகே, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய 7 கட்சிகளும் ஒரே அணியில் நின்று திமுகவை எதிர்க்கும், இதைதவிர மேலும் பல அமைப்புகளும் அதிமுக + பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இதையெல்லாம் மனதில் வைத்தே எடப்பாடி பழனிசாமி மெகா கூட்டணி என்ற வியூகத்தை வகுத்துள்ளார் என்கிறார்கள்..

 லீடிங் பழனிசாமி

லீடிங் பழனிசாமி

ஆனால், அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி போன்றோர், வேறு ஒரு கணக்கை சொல்கிறார்கள்.. "இவர்கள் 2 பேரும் கையெழுத்து போட்டால்தான், இரட்டை இலை கிடைக்கும் என்பது யதார்த்த உண்மை.. தேர்தல் ஆணையத்தின் சூழ்நிலையும் அப்படித்தான் உள்ளதாக தெரிகிறது.. எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை லீடிங்கில் இருந்தாலும், அவர் சொல்வது அவரது கனவு கூட்டணியை.. அந்த கனவு கோட்டையில் விசிக + காங்கிரஸ் கட்சிகளையும் இணைத்து சொல்கிறார்..

 கிருஷ்ணசாமி

கிருஷ்ணசாமி

ஆனால், அந்த கட்சிகளிடம் இது தொடர்பாக எந்த அறிகுறியும் இதற்கு தென்படவில்லை.. எடப்பாடி பழனிசாமி, மெகா கூட்டணி என்றுதான் சொன்னாரே தவிர, மதசார்பற்ற மெகா கூட்டணியா? என்றெல்லாம் சொல்லவில்லையே.. பொத்தாம் பொதுவாக மெகா கூட்டணி என்று தான் சொல்லி உள்ளார்.. அதிமுக தலைமையில் கூட்டணி அமையும் என்று அண்ணாமலை சொன்னதுகூட, எடப்பாடி + ஓபிஎஸ் இருவரும் சேர்ந்த அதிமுகவைதான்.. இதன்மூலம் எடப்பாடி பழனிசாமி தவிர்க்க முடியாத சக்தி என்பதையும் அண்ணாமலை பதிவு செய்துள்ளார்" என்கிறார்கள். மெகா கூட்டணி என்ற ஒரு விஷயத்தை எடப்பாடி சொல்லப்போய், அது தீவிரமான விவாதங்களை கிளப்பி விட்டு கொண்டிருக்கிறது.

English summary
Do you know which mega alliance Edappadi Palaniswami said and will VCK form an alliance with AIADMK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X