முதலை கிட்ட கூலாக நெருங்கி போறாரே இந்த ஹீரோ.. அதுவும் வெறும் காலுடன்.. யாருன்னு பாருங்க.. உதறுதே
சென்னை: இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி கொண்டிருக்கிறது.. இந்த வீடியோவை பார்ப்பவர்கள் எல்லாருமே, அதிர்ச்சியில் ஒருகணம் உறைந்து போகிறார்கள்.. என்ன காரணம்? யாரிந்த ஹீரோ?
பெரிய அளவிலான முதலைகள் எப்போதுமே ஆபத்தானவை.. முதலைகள் மனிதனை விரட்டி பிடிக்காது என்றாலும், கொஞ்சம் அசந்தால் ஆளையே லபக்கென பிடித்து விழுங்கிவிடும். அதனால்தான், பூங்கா உள்ளிட்ட இடங்களில் முதலைகளை தூரத்திலிருந்தே பார்க்க வேண்டும், அருகில் செல்லக்கூடாது என்பார்கள்.

பயங்கரமான பற்கள்: முதலையால் வாயில் உணவை மென்று அசை போட்டு சாப்பிட முடியாது.. இத்தனைக்கும் அதன் பற்கள் பார்ப்பதற்கே பயங்கரமாக இருக்கும்... எந்த உணவையுமே முதலையால் கடித்து சாப்பிட முடியாது. அதனால், எந்த உணவாக இருந்தாலும், அப்படியே வாயில் போட்டு விழுங்கிவிடும்.
அதுமட்டுமல்ல, இந்த முதலைகள், தன்னுடைய இனத்தை சேர்ந்த முதலைகளையே விழுங்கிவிடுமாம். அதனால்தான், முன்பின் தெரியாத குளத்திலோ அல்லது ஆற்றிலோ இறங்ககூடாது என்று நம்மை பெரியவர்கள் சொல்வார்கள்.
முதலை வீடியோ: இவ்வளவு பயங்கரமான முதலையிடம் ஒருவர் கிட்ட நெருங்கி செல்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இளம் கன்று பயமறியாது என்பார்களே? அதுபோல, இளைஞர் ஒருவர், எந்த வித பயமும் இல்லாமல், முதலையிடம் சென்றிருக்கிறார்.
ஒரு முதலை இல்லை, 2 முதலை இல்லை.. அது ஒரு முதலைகள் கூட்டமாகும்.. அதுவும் ராட்சத முதலை கூட்டங்களுக்கு நடுவே, ரொம்ப கூலாக, வெறும் காலுடன் நடந்து சென்றுள்ளார்.. அவர் எங்கெல்லாம் நடந்து சென்றாரோ, அந்த இடத்தை சுற்றிலும் முதலைகள் இருந்தன. இதில் ஏதாவது ஒரு முதலை தாக்கினால்கூட, இளைஞரின் உசுருக்கு உத்தரவாதம் இல்லை.. அப்படியிருந்தும், எந்த பயமும் இல்லாமல் வெறுங்காலுடன் நடந்து சென்றார்.
நடுநடுங்குதே: இதை அவரே வீடியோவாக எடுத்திருக்கிறார். @AMAZlNGNATURE என்பவர் இதை ட்விட்டரில் ஷேர் செய்திருக்கிறார்.. இந்த வீடியோவை பார்க்கும் ஒவ்வொருவரும் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து கிடக்கிறார்கள்.
மரணத்திற்கு பக்கத்திலேயே இருந்த அதிர்ஷ்டசாலி என்று, இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.. "இந்த நபரின் துணிச்சலை பாராட்டாமல் இருக்க முடியவில்லை, மிகவும் தைரியசாலி, எங்களுக்குதான் பார்த்தாலே நடுங்குது" என்றும் பாராட்டி கொண்டிருக்கிறார்கள்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications