போச்சு, போச்சு.. அமித்ஷாவே சொல்லிட்டாரா.. அவசரமாக நடந்த 2 சந்திப்பு.. எல்லாத்துக்கும் காரணமே அவர்தானா
ஓபிஎஸ் எடப்பாடியை ஒரே நாளில் அண்ணாமலை ஏன் சந்தித்தார் என்ற தகவல் கசிந்துள்ளது
சென்னை: நேற்று ஒரே நாளில் அதிமுகவின் 2 தரப்பையுமே நேரில் சந்தித்து பரபரப்பாக்கிவிட்டது தமிழக பாஜக.. இதற்கு என்ன காரணம் என்ற தகவல் ஓரளவு கசிந்துள்ளது..!!!
வேறு எந்த இடைத்தேர்தலிலும் இந்த அளவுக்கான குழப்பத்தை பாஜக எதிர்கொண்டிருக்காது, இதற்கு காரணம் கூட்டணியில் உள்ள அதிமுகதான் என்கிறார்கள்.
ஆரம்பத்தில் இந்த இடைத்தேர்தலை பாஜக கண்டுகொள்ளவேயில்லை.. தேர்தல் தேதி அறிவித்து 4 நாட்கள் ஆனபோதும்கூட, அண்ணாமலை அதற்கு பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை.

யுவராஜா
இதற்கு 2 காரணங்கள் சொல்லப்பட்டன.. இடைத்தேர்தல் என்றாலே ஆளும்கட்சியே வெற்றி பெறும் என்பதால், இதில் போட்டியிட்டும் பலனில்லை என்று பாஜக நினைத்ததாம்.. மற்றொன்று, தொகுதியை தமாகாவுக்கு எடப்பாடி பழனிசாமி ஒதுக்கிவிடுவார் என்றும் நம்பியதாம்.. பாஜக மேலிடமே இதை எடப்பாடியிடம் சொன்னதாம்.. இலை கிடைக்காவிட்டால், பாஜகவின் தாமரை சின்னத்தில் யுவராஜா போட்டியிடட்டும் என்றும் பாஜக தரப்பு சொல்லியுள்ளது.. ஆனால், இதற்கு எடப்பாடி ஒப்புக்கொள்ளவில்லையாம்.. சிடி ரவியும், எடப்பாடியிடம் 3 முறை போனில் பேசியும் எடப்பாடி அதையும் ஏற்கவில்லையாம்.

கமலாலயம்
அதற்கு பிறகு, நேரடியாக வாசனிடமே பேசி அவர் வாயிலாகவே அதிமுக போட்டியிடுவதாக அறிவிக்கவும் செய்துவிட்டார் எடப்பாடி. இதுதான் தமிழக பாஜக சீனியர்களுக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிகிறது.. தங்களை ஆலோசிக்காமல் வேட்பாளரை அறிவித்ததுடன், கமலாலயத்துக்கு நிர்வாகிகளை அனுப்பி வைத்துவிட்டு எடப்பாடி பழனிசாமி நேரடியாக வந்து ஆதரவும் கேட்கவில்லையே என்ற ஆதங்கமும் சீனியர்களுக்கு இருந்துள்ளது.. இதை மாநில தலைமையிடமே சொல்லியும், அதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை என்கிறார்கள்..

சப்போர்ட்
அதுமட்டுமல்ல, "இலை இல்லாவிட்டால் திமுகவுக்குதான் சாதகமாகிவிடும், அதனால் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வேண்டும்.. நமக்கு ஓபிஎஸ், தினகரன், சப்போர்ட் இருக்கிறது. வேட்பாளரை அறிவிக்கலாம்" என்றும் சீனியர்கள் சொன்னார்களாம். அதையும் மாநில தலைமை கவனத்தில் கொள்ளாமல் இருந்ததாக தெரிகிறது.. சுருக்கமாக சொல்லப்போனால், போட்டியிடாமல் இருப்பதே எடப்பாடி பழனிசாமிக்கு தரும் முக்கியத்துவமாகவும் கருதப்பட்டது. அதனால்தான், சில சீனியர்கள் டெல்லிக்கே இதுகுறித்து புகாரை அனுப்பினார்களாம்... அந்த புகாரையும் மேலிடம் கவனத்தில் கொள்ளவில்லை என்கிறார்கள்..

அவசர சந்திப்பு
கடைசியில், எடப்பாடி தரப்புக்கு ஆதரவாக மாநில தலைமை செயல்படுவதாக அமித்ஷா வட்டாரத்துக்கு ஓபிஎஸ்ஸே தகவல் அனுப்பிவிட்டாராம்.. அதுதான் டெல்லியை திரும்பி பார்க்க வைத்துள்ளது.. இதன் விளைவாகவே, அண்ணாமலை அவசரமாக டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு, எடப்பாடி ஆதரவு நிலைப்பாடு குறித்து கேள்விகளை எழுப்பியதாகவும் சொல்கிறார்கள். தன் தரப்பு விளக்கத்தை அங்கு தந்துவிட்டு, உடனடியாக தமிழகம் திரும்பிய வேகத்திலேயே 2 தரப்பையும் நேற்று காலை சந்தித்து பேசினாராம் அண்ணாமலை..

சாஃப்ட் கார்னர்
"அதிமுகவை ஒருங்கிணைக்கவே பாடுபடுகிறோம்" என்று பேட்டிகளை தந்ததும் அதன் விளைவாகத்தான் என்கிறார்கள்.. ஆரம்பத்தில் இருந்தே எடப்பாடி மீது அண்ணாமலைக்கு ஒரு சாப்ட் கார்னர் இருப்பதாகவே தகவல்கள் கசிந்து வரும் நிலையில், தற்போதைய இடைத்தேர்தலில் அது வெளிப்படையாகவே தென்பட்டுவிட்டது என்கிறார்கள்.. எனினும் இவ்வளவு சமாதானங்கள் செய்தும்கூட, எடப்பாடி பழனிசாமியின் மனசு கரையுமா? மாறுமா? இறங்கி வருவாரா? என்று எதிர்நோக்கி உள்ளதாம் பாஜக..!!
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications