சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓஹ்ஹோ.. எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்திக்க காரணமே வேறயாமே.. இது பாஜகவுக்கு தெரியுமா?.. திணறும் யூகம்

ஆளுநரை எடப்பாடி பழனிசாமி சந்தித்தது ஏன் என்ற தகவல்கள் வட்டமடித்து வருகின்றன

Google Oneindia Tamil News

சென்னை: எடப்பாடி பழனிசாமி உண்மையிலேயே எதற்காக, ஆளுநரை சந்தித்து பேசியிருப்பார் என்பதற்கான யூகங்கள், தமிழக அரசியலை சுற்றி வந்து கொண்டிருக்கிறது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் 2 நாட்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகையில் சந்தித்தார்.

ஆளும் திமுகவுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவரும் எடப்பாடி பழனிசாமி, ஆளுநரிடமும் புகார்ப்பட்டியலையும் அப்போது வாசித்திருக்கிறார்.

அதிமுகவில் ஓபிஎஸ்..சேர்த்து கொள்ள தயார்! எடப்பாடி டீம் ’தலை’ க்ரீன் சிக்னல்! ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்? அதிமுகவில் ஓபிஎஸ்..சேர்த்து கொள்ள தயார்! எடப்பாடி டீம் ’தலை’ க்ரீன் சிக்னல்! ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்?

 ஃபோகஸ்

ஃபோகஸ்

வழக்கமாக ஆளும்கட்சி மீது எதிர்க்கட்சிகள் குறைகளை சொல்வதும், புகார்களை வாசிப்பதும் இயல்புதான் என்றாலும், இந்த முறை எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்ததன் பின்னணி மட்டும் பலவாறாக சொல்லப்படுகிறது.. இதுகுறித்த ஹாட் யூகங்களும் இன்னும் அடங்கவில்லை.. சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு, ஊழல் முறைகேடுகள் என திமுக மீதான புகார்களை எடப்பாடி தரப்பு லிஸ்ட்டாக தந்துள்ளது என்றாலும், 2 விதமான அனுமானங்கள் இந்த சந்திப்பு குறித்து வட்டமடிக்கிறது.

 நொறுங்கிய கணக்கு

நொறுங்கிய கணக்கு

முதலாவதாக, பாஜகவுக்கே அதாவது அண்ணாமலைக்கே செக் வைக்கும் வகையில்தான் இந்த சந்திப்பு நடந்ததாக சொல்கிறார்கள்.. நாங்கள்தான் எதிர்க்கட்சி என்று இந்த 6 மாத காலமாகவே அண்ணாமலை மாய தோற்றத்தை அழுத்தமாக விதைத்துவிட்ட நிலையில், இதை நொறுக்கவே இந்த சந்திப்பு நடந்ததாம்.. அதனால்தான், கடந்த சில தினங்களாகவே, ஓபிஎஸ், தினகரன் பற்றியெல்லாம் பேட்டிகளை தராமல், முழு ஃபோகஸ்ஸையும் திமுக மீது திருப்பி உள்ளாராம் எடப்பாடி.. ஆளுநர் வரை புகார்களை தந்து, தாங்கள்தான் நிஜமான எதிர்க்கட்சி என்பதையும் நிரூபிக்க முயற்சித்துள்ளார் என்கிறார்கள்.

"பெஸ்ட்" ஆளுநர்

இரண்டாவதாக, ஆளுநருக்கு தங்கள் ஆதரவை தெரிவிப்பதற்காகவே, எடப்பாடியின் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக சொல்கிறார்கள்.. சில தினங்களாகவே திமுகவும், கூட்டணி கட்சிகளும் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்ற விவகாரத்தில் தீவிரம் காட்டி வரும் நிலையில், ஆளுநருக்கு ஆதரவாக தாம் இருப்பதை காட்டிக் கொள்ளவே, எடப்பாடி நேரடியாக சந்தித்ததுடன், "சிறந்த ஆளுநர்" என்ற பாராட்டு பத்திரத்தையும் வாசித்திருக்கிறாராம்.. இது ஆளுநர் மாளிகையை குளிரவைப்பதுடன், டெல்லி வரை இந்த மெசேஜ் பாயும் என்றும் நினைக்கிறாராம் எடப்பாடி.

 சாப்ட் கார்னர்

சாப்ட் கார்னர்

இறுதியில், ஒரு சாஃப்ட் கார்னர் வரும்பட்சத்தில், மேலிட கவனம் தன்மீதுதிரும்பும் என்றும், அதன்மூலம் இரட்டை இலையை தக்க வைத்துக் கொள்ள இயலும் என்பதே எடப்பாடியின் கணக்காக உள்ளதாம். இப்படி ஆளுநர் - எடப்பாடி குறித்து 2 விதமான அனுமானங்கள் வட்டமடித்து வந்தாலும், ஓபிஎஸ்ஸை தவிர்த்துவிட்டு, ஆளுநரோ, மோடியோ, அமித்ஷாவோ, எடப்பாடியை மட்டுமே அதிமுகவாக கருதி, ஆதரவு தரமாட்டார்கள் என்பதை ஆணித்தரமாக சுட்டிக்காட்டுகிறார்கள் அரசியல்நோக்கர்கள்..!!

English summary
Do you know why did Edapadi Palanisamy meet Governor RN Ravi, says sources
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X