மாறுபட்ட கோணங்கள்.. மோடி "மூவ்" கவனிச்சீங்களா? அதிமுக, திமுக ஆடிடுச்சு? வந்துவிழுந்த "2 சிங்கங்கள்"
சென்னை: மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார் பிரதமர் மோடி.. என்ன நடக்கிறது பாஜகவில்?
"கரீஷ்மா" என்ற ஆங்கிலத்தில் ஒன்று உள்ளது.. நம்முடைய தமிழக அரசியல் வரலாற்றிலேயே, இந்த "கரீஷ்மா" கொட்டிக்கிடந்தது மறைந்த முதல்வர் எம்ஜிஆரிடம் என்றே சொல்லலாம். எம்ஜிஆருக்கு பிறகு இப்படியொரு வசீகர தலைவரை இந்த தமிழகம் பார்த்ததில்லை.

எளிய குணம்: மக்களை ஈர்க்கும் கொள்கைகள், அதிரடி திட்டங்கள், உதவும் குணம், எளிய அணுகுமுறை போன்ற பல்வேறு குணங்கள் இருந்தாலும், தமிழக மக்களின் மனதில், எம்ஜிஆர், மனப்பூர்வமாக நிறைந்திருக்க காரணம் அவரது பொலிவான தோற்றமும்தான்!
அரசியலுக்கு வருவதற்கு முன்பேயே, தன்னுடைய பிம்பத்திற்கு, மக்களிடம் மவுசு இருக்கிறது என்று எம்ஜிஆருக்கு அன்றே தெரிந்தாலும், அதற்காக அசால்ட்டான அரசியலை அவர் நடத்தவில்லை..
கணக்கு போட்டும், கணக்கில்லாமல் உதவிகளை செய்தும்தான், எதிர்க்கட்சிகளை திணறடித்தார்.. 10 வருட ஆட்சி காலத்தில் எத்தனையோ விமர்சனங்களை எம்ஜிஆர் சுமந்தாலும் அத்தனையையும் முறியடித்துவிட்டுதான் ஓய்ந்தார் எம்ஜிஆர்!
அரசியல் வியூகம்: அதனால்தானோ என்னவோ, அவருக்கு பின் வருபவர்கள், அவரை போலவே அரசியல் செய்ய நினைக்கிறார்கள்.. எம்ஜிஆரின் ஆளுமையையும், அவரது நல்லியல்புகளையும், ஹாட்ரிக் வெற்றிகளையும், மக்களிடம் முன்னிறுத்தியே தேர்தலையும் சந்திக்கிறார்கள்.. இதில் முழுமையான வெற்றியையும் பெற்றவர் ஜெயலலிதா மட்டுமே. அதனால்தான், எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்துக்கு பிறகு, "அம்மா" என்ற மூன்றெழுத்தில் தமிழக மக்களிடம் நிரந்தரமாக தங்கிவிட்டார்.
இவருக்கு பிறகு கட்சியை துவங்கிய, பாக்யராஜ், விஜயகாந்த், சரத்குமார், என ஆரம்பித்து இன்றைய விஜய்வரை, எம்ஜிஆரை துணைக்கு அழைத்து வந்தவர்கள்தான்.. இதில், விஜயகாந்த் தவிர வேறு யாரும் அவ்வளவாக சோபிக்கவில்லை. எம்ஜிஆர் பாணியையும் இவர்களால் முழுமையாக மக்களிடம் கொண்டு செல்ல முடியவில்லை என்பதே உண்மை.
என்ன காரணம்: இவர்களாவது பரவாயில்லை, எம்ஜிஆருடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்பில் இருந்தவர்கள், சினிமாவில் பயணித்தவர்கள் என்று ஏற்றுக் கொள்ளலாம்.. ஆனால், சம்பந்தமே இல்லாமல் பாஜக இதில் நுழைந்து, எம்ஜிஆரை தன் பக்கம் வாரிக் கொண்டதை, இந்த தமிழ்நாடே ஆச்சரியத்துடன் பார்த்தது.
3 வருடங்களுக்கு முன்பேயே, அப்போதைய மாநில தலைவரான எல்.முருகனின் வேல் யாத்திரை கொடியில், எம்ஜிஆர் உருவம் இருந்தது வியப்பை கூட்டியது. இதுகுறித்து, ஒருமுறை தற்போதைய மாநில தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டார்கள்.. அதற்கு அண்ணாமலை, "எம்ஜிஆர் படத்தை பாஜக பயன்படுத்தியது அரசியல் உள்நோக்கம் கிடையாது என்றும் ஒவ்வொரு இடத்திலும் பாஜக தடையை மீறித்தான் வளர்ந்து கொண்டு வருகிறது" என்றும் கூறியிருந்தார்.
திருப்போரூர்: அப்போதும் இந்த பிரச்சனை அடங்கவில்லை.. திடுதிப்பென்று ஒருநாள், திருப்போரூர் மாவட்டத்தில், எம்ஜிஆர் "காவிநிறத்துண்டில்" காட்சி அளித்ததை பார்த்ததுமே தமிழக மக்களுக்கு தூக்கி வாரிப்போட்டது..
யார் இந்த காரியத்தை செய்தது என்ற விசாரணையில் போலீசார் இறங்கினாலும், அம்பேத்கர், பாரதியார் வரிசையில் எம்ஜிஆரும் இணைந்தது, மிகப்பெரிய அரசியல் தந்திரமாக அப்போது பார்க்கப்பட்டது.
சமீபத்தில்கூட, பேரறிஞர் அண்ணா பற்றியும், அதிமுக தலைவர்கள் பற்றியும் அண்ணாமலை சொன்ன கருத்துக்கள் அதிமுகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.. இன்னும் சொல்லப்போனால், அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு, அண்ணாமலையின் இந்த வெறுப்புப் பேச்சும் என்று காரணம் சொல்லப்பட்டது.
இப்போது விஷயமென்னவென்றால், எம்ஜிஆர் படத்தை பயன்படுத்தியதில் அரசியல் எதுவும் கிடையாது, ஒவ்வொரு இடத்திலும் பாஜக தடையை மீறித்தான் வளர்ந்து கொண்டு வருகிறது" என்று அண்ணாமலை அன்று கூறியிருந்தாலும், இன்று பிரதமர் மோடி, அதே எம்ஜிஆர் பெயரை தன்னுடைய வாயாலேயே உச்சரித்திருக்கிறார்.. அதுவும் மானாவாரியாக புகழ்ந்து..!!!
பாஜக கூட்டம்: பல்லடம் பாஜக விழாவில் பிரதமர் மோடி பேசியபோது, "எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில், சிறந்த ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றது. குடும்ப அரசியல் நடத்தி, எம்ஜிஆர் ஆட்சிக்கு வரவில்லை.. திமுக எம்ஜிஆரை அவமதிக்கிறது. திமுக அரசியலால் தமிழகத்துக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது. எம்ஜிஆருக்கு பிறகு சிறப்பான ஆட்சியை தந்தவர் ஜெயலலிதா" என்று உரையாற்றியிருக்கிறார் மோடி.
எத்தனையோ முறை இதே தமிழகத்துக்கு பிரதமர் மோடி வந்து சென்றிருக்கிறார்.. ஆனால், எம்ஜிஆரை பற்றி இந்த அளவுக்கு புகழ்ந்தது இல்லை.. திமுக, காங்கிரஸை டேமேஜ் செய்ய வேண்டும் என்ற நோக்கம் இருந்தாலும்கூட, அவர்களை விமர்சிக்க எத்தனையோ காரணங்கள் பாஜகவுக்கு இருக்கின்றன.. அதைவிட்டுவிட்டு, தேர்தல் நேரத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவை, தன்னுடைய பேச்சில் பிரதமர் ஏன் இழுத்து கொண்டு வர வேண்டும்? என்பதுதான் சந்தேகமாக உள்ளது.
சமாதானமா: ஒருவேளை, கூட்டணிக்கு அதிமுகவை சமாதானப்படுத்த பாஜக மேலிடம் முயல்கிறதா என்று தெரியவில்லை.. அப்படியே சமாதானப்படுத்தும் நோக்கம் இருந்தாலும், அதிமுக பெயரையோ அல்லது எடப்பாடி பெயரையோ தன்னுடைய உரையில் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அதிமுகவை விமர்சிக்கவேயில்லை.. அக்கட்சி பற்றியும் பெரிதாக பேசாமல், எம்ஜிஆர் + ஜெயலலிதாவை மட்டுமே புகழ்ந்து பேசியிருப்பது கூடுதல் சந்தேகத்தை கிளப்பி வருகிறது.
கடந்த முறை மோடி தமிழகம் வந்தபோது, விஜயகாந்த்துக்கு தேசிய அளவில் விருது வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படியே, விருதையும் அறிவித்து கவுரப்படுத்தியிருந்தது மத்திய அரசு.
தேமுதிக வாக்குகள: தேமுதிகவின் வாக்குகளை அள்ளவே, பிரதமர் இவ்வாறு கூறியதாக சலசலக்கப்பட்டது. அதுபோலவே, அதிமுகவின் வாக்குகளை கவர, பிரதமர் மோடி எம்ஜிஆர் பெயரை பயன்படுத்துகிறாரா? அப்படியே பயன்படுத்தினாலும், ரத்தத்தின் ரத்தங்கள் இதனை ஏற்பார்களா? அதிமுகவின் வாக்குகள் பாஜக பக்கம் விழுமா? என்றும் தெரியவில்லை.
ஆனால், நியாயப்படி பார்த்தால், பாஜக செய்வதை அதிமுகதான் செய்திருக்க வேண்டும்.. எம்ஜிஆரை விடாமல் தங்கள் கைகளில் இறுக்கி பிடித்திருக்க வேண்டும்.
அதிமுக நிகழ்ச்சிகளில், ஒருசில முன்னாள் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் தவிர எம்ஜிஆரை பற்றி பேசுவதும், நினைவுகூர்வதும் குறைவாகவே உள்ளது என்பதை மறுக்க முடியாது.. அதேசமயம், மற்ற கட்சிக்காரர்கள் எம்ஜிஆரிடம் நெருங்கினால், அதை மட்டும் அதிமுகவால் ஜீரணிக்கவும் முடியவில்லை..
என்ன காரணம் : உண்மையிலேயே எம்ஜிஆர் யாருக்கு சொந்தம்? தேர்தல் முடிந்ததும் மறுபடியும் மறக்கடிக்கப்பட்டு விடுவாரா? என்று சொல்ல தெரியவில்லை.. ஆனால் இறந்து இத்தனை வருஷமாகியும், திராவிட கட்சிகளையும் தாண்டி, உச்சரிக்கப்பட்டு கொண்டிருக்கிறார் மக்கள் தலைவர் எம்ஜிஆர்... அந்தவகையில், எம்ஜிஆர் "பார்முலா" இன்று பாஜகவுக்கும் தேவையாக இருக்கிறது போலும்!!
-
தொடரும் ஈரான் போர்! கச்சா எண்ணெய் – கேஸ் அபாயம் பற்றி மாநில முதலமைச்சர்களுடன் மோடி தீவிர ஆலோசனை -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி












Click it and Unblock the Notifications