சுக்கு சுக்கா போச்சே.. தகிக்கும் பாஜக.. தமிழகத்தை "விடாத" மோடி.. வதந்திக்கு பின்னால் இவ்வளவு இருக்கா
பிரதமர் மோடியின் பசும்பொன் வருகை என தவறான தகவல், சில அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது
சென்னை: பசும்பொன்னுக்கு பிரதமர் மோடி வருவதாக பரவுவது தவறான தகவல் என்றாலும், அது தொடர்பான தாக்கங்களும், யூகங்களும், சந்தேகங்களும் தமிழக அரசியல் களத்தில் சுழன்று கொண்டேயிருக்கின்றன.
பிரதமர் மோடியின் தம்பி பங்கஜ் மோடி, கடந்த வாரம் பசும்பொன் சென்று முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பாஜக நிர்வாகிகளையும் அவர் சந்தித்துப் பேசினார்... அதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடியும் பசும்பொன் வர உள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது.

ஜாயிண்ட் பார்ட்டி
இதையடுத்து, தேவர் ஜெயந்தி நிகழ்வை முன்னிட்டு பசும்பொன்னுக்கு அஞ்சலி செலுத்த எடப்பாடி பழனிசாமி வருவாரா? அப்படி வந்தால், ஓபிஎஸ் - சசிகலா இணைந்து வருவார்களா? மோடி பசும்பொன்னை நோக்கி வருவதால், இது ஓபிஎஸ்ஸுக்கான ஆதரவாக எடுத்து கொள்வதா? என்பன போன்ற கேள்விகள் தமிழக அரசியலில் சுழன்றடித்தது.. அதுமட்டுமல்ல, மோடியின் வருகை, முக்குலத்தோர் வாக்குகளை பெருமளவு அள்ளவே உதவும் என்றும் கணிக்கப்பட்டது.. அதேசமயம், இந்த தகவல் உறுதிப்படுத்தப்படாத தகவலாகவே உலாவியது.. அண்ணாமலையும் இந்த சமயத்தில் ஊரில் இல்லை என்பதால், தமிழக பாஜகவே இதனால் நிறையவே குழம்பி போனது..

சான்ஸே இல்லை
ஆனால், அண்ணாமலை இதுகுறித்து விளக்கம் அளித்த பிறகுதான், றெக்கை கட்டி வந்த யூகங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.. "அப்படியெல்லாம் எந்தத் திட்டமும் இல்லை... பிரதமரை அனைத்து குருபூஜைக்கும் அழைத்து வர வேண்டும் என்று ஆசைதான். ஆனால், இந்த ஆண்டு அதற்கான வாய்ப்பில்லை. அடுத்த ஆண்டு அவரை அழைத்து வருவோம்" என்று மாநில தலைவர் அண்ணாமலை ஏர்போர்ட்டிலேயே தெளிவுபடுத்திவிட்டார். அப்படியானால், இந்த செய்தியை கிளப்பியது யார் என்ற அடுத்த கேள்வி கிளம்பி உள்ளது.

FLASH நியூஸ்
ஏதோ ஒரு செய்தி சேனலில், மோடி பசும்பொன் வரப்போகிறார் என்று ஃப்ளாஷ் நியூஸ் ஓடியதாம்.. அதை பார்த்து மற்ற சேனல்கள் இந்த செய்தியை எடுத்து போட்டுவிட்டதாக சொல்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, இப்படி கிளப்பிவிட்ட தகவலால், தமிழக பாஜக கொந்தளித்து போயுள்ளதாம்.. காரணம், பிரதமர் பசும்பொன் வருகிறார் என்ற தகவல், முக்குலத்தோரிடையே பெரிதும் எதிர்பார்ப்பை இந்த 3 நாட்களில் ஏற்படுத்திவிட்டது.. இப்போது அவர் வரவில்லை என்று சொன்னால், தென் மாவட்டங்களில் அதுவும், முக்குலத்தோர் மத்தியில் பிரதமர் மீதும், பாஜக மீதும் தேவையற்ற அதிருப்தியை உண்டுபண்ணிவிட்டார்களே? என்று கடுப்பாகி உள்ளதாம்..

அப்செட்
இன்னொரு அப்செட்டும் தர்மசங்கடமும் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது.. வரும் எம்பி தேர்தலில் தேவர் சமுதாய மக்கள் மட்டுமல்லாமல், நாடார்கள், தேவேந்திர குல வேளாளர்கள் அடர்த்தியாக இருக்கும் விருதுநகர், தென்காசி, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்காக ஒரு கணக்கை போட்டு வருகிறது.. இந்த சூழலில் மோடி வருகையானது, அதற்கு பக்கபலமாக இருக்கும் என்றும் நம்பிக் கொண்டிருந்த நிலையில், அது கேன்சல் ஆகிவிட்டதால், பாஜகவில் இருக்கும் நாடார் மற்றும் தேவேந்திர புள்ளிகள் அதிர்ச்சியில் உள்ளார்களாம்..!!

மெசேஜ் பாஸ்
இதற்கு நடுவில் இன்னொன்றையும் சொல்கிறார்கள்.. மோடி உண்மையிலேயே தேனி வருவதாக ஒரு ப்ளான் இருந்ததாம்.. பசும்பொன்னுக்கு வந்து முக்குலத்தோர் வாக்கு வங்கிக்கு குறி வைத்தாலும், முக்குலத்தோர் வாக்குகளை அவ்வளவு எளிதாக பெற முடியாது.. அத்துடன், நாடார், தேவேந்திர குல வேளாளர்களின் ஆதரவையும் இழக்க வேண்டியிருக்கும் என்று டெல்லி மேலிட பொறுப்பாளர்களுக்கு ஒரு தகவல் இங்கிருந்து அனுப்பப்பட்டதாம்.. இதையடுத்துதான், அண்ணாமலை, அப்படி ஒரு பேட்டியை ஏர்போட்டில் தந்திருக்கிறார் என்று சலசலக்கிறார்கள்.. ஆக, மோடி வந்தாலும் பரபரப்புகள் குறைவதில்லை.. வராவிட்டாலும் சலசலப்புகள் குறைவதில்லை போலும்..!
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications