எந்த மாநிலத்தில் வேணாலும் இருங்க! புதிய ரேஷன் கார்டு வேண்டுமா? ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: புதிய ரேஷன் கார்டு வேண்டுமா, அதை எளிதாக விண்ணப்பிக்க என்னென்ன வழிகள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் ரேஷன் விநியோக திட்டம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு மலிவு விலையில் ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறது. இதன் மூலம் அரிசி, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை அரசு கொடுத்து வருகிறது.

கொரோனா காரணமாக அரசு சில இலவச பொருட்களை கொடுத்து வருகிறார்கள். இதற்காக ரேஷன் திட்டத்தின் கீழ் நியாய விலை பொருட்கள் பெற மக்கள் ரேஷன் கார்டு வைத்திருக்க வேண்டும். அரசால் வழங்கப்படும் ரேஷனைப் பெற ஆதார் அட்டை, பான் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது போலவே, ரேஷன் கார்டு வைத்திருப்பதும் மக்களுக்கு முக்கியம்.
இதன் மூலம்தான் ரேஷனில் கொடுக்கும் பொருட்களை பெற முடியும். இந்த ரேஷன் பொருள் விநியோகம் என்பது மாநிலத்திற்கு மாநிலம் வித்தியாசப்படும். தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா நிவாரணமாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ 4000 இரு தவணைகளாக வழங்கப்பட்டது. அது போல் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.
பொங்கல் பண்டிகையையொட்டி ரூ 1000 ரொக்கம் வழங்கப்பட்டது. இது போல் ஒவ்வொரு மாநிலமும் தங்கள் கொள்கை முடிவுகளுக்கேற்ப ரேஷன் பொருட்களை வைத்திருக்கிறது. தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டமும் தொடங்க போவதாக சொல்லப்படுகிறது. எனவே ஒரு கார்டை வாங்கினாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
ரேஷன் வினியோகம் செய்யும் உரிமை மாநில அரசுகளின் கையில் இருப்பதால், ரேஷன் கார்டு தயாரிக்கும் பணியும் மாநில அரசின் கீழ் வரும். ரேஷன் கார்டு தயாரிப்பதற்கான போர்டல் ஒவ்வொரு மாநில மக்களுக்கும் வேறுபட்டது. நீங்கள் தமிழ்நாட்டில் வசித்தால் தமிழக அரசின் இணையதளமான https://tnpds.gov.in/ சென்று விண்ணப்பிக்கலாம். இந்த போர்ட்டல்களில், பெயர், முகவரி மற்றும் வருமானத் தகவல்களைக் கொடுக்க வேண்டும். தகவல் சரியாக இருந்தால் உங்கள் ரேஷன் கார்டு செய்து தரப்படும்.
ஆன்லைன் ரேஷன் கார்டை பெற சில முக்கியமான ஆவணங்கள் தேவை. இதற்கு ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் ஒன்றை வைத்திருக்க வேண்டும். மேலும், உங்கள் வீட்டு முகவரிக்கான சான்றாக மின்சாரம் அல்லது தண்ணீர் ரசீது எடுத்துக் கொள்ளலாம். ரேஷன் கார்டு பெற, வருமானச் சான்றிதழும் வைத்திருக்க வேண்டும். தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக க்யூ-ஆர் கோடு மூலம் நியாய விலை கடைகளில் பொருட்களை பெற்றுகொள்ளும் திட்டம், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 65 கடைகளில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
-
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications