ராத்திரி 10 மணிக்கு மேல் சென்னையில் பைக்கில் போறீங்களா.. உயிர் பயத்தை காட்டிட்டாங்க பரமா?
சென்னை: சென்னை முழுக்க நாய்கள் தொல்லை பலமடங்கு அதிகமாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் இரவுகளில் கும்பல் கும்பலாக நாய்கள் திரிகின்றன. இரவு 10 மணிக்கு மேல் சென்னையில் பைக்கில் செல்வது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளதாக பல நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
சென்னை, தாம்பரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தெருநாய்கள் அதிக அளவில் உள்ளன. கும்பலாக சேர்ந்து தெருநாய்கள் பலரையும் துரத்துவதால் பலர் நடைபயிற்சிக்கு செல்லவே அச்சப்படும் நிலை உள்ளது. குறிப்பாக சென்னையின் புறநகர் பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிமாக உள்ளது.

நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவே தனியாக அமைப்பை சென்னையில் உருவாக்க வேண்டும் என்கிற அளவில் சென்னையில் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோரையே பெரும்பாலும் தெருநாய்கள் துரத்துகின்றன. இதனால் இரவு 10 மணிக்கு மேல் சாலைகளில் இருசக்கர வாகனத்தில் செல்லவே அச்சப்படும் நிலை இருப்பதாக குற்றம்சாட்டுகின்றனர்.
அதிஷா என்ற நெட்டிசன் வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் தெருநாய் குறித்து வெளியிட்ட பதிவு பெரிய அளவில் விவாதத்தையும் கவனத்தையும் பெற்றுள்ளது. அதனை இப்போது பார்ப்போம். "சென்னை முழுக்க நாய்கள் தொல்லை பலமடங்கு அதிகமாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் இரவுகளில் கும்பல் கும்பலாக நாய்கள் திரிகின்றன. இரவு நேரத்தில் பைக்கில் போகும்போது நாய்கள் துரத்துவது ஒரு மேன்டேட்டரி விஷயமாகிவிட்டது. சமீபத்தில் பத்து நாய்கள் சுத்துப்போட்டு விரட்டியதில் பைக்கோடு விழுந்து வாரி இருப்பேன். பேலன்ஸ் பண்ணி ஓட்டிச்சென்றதால் உயிர்தப்பினேன்.
என்பீல்டோடு விழுந்தால் குறைபட்சம் ஒரு பெரிய எலும்பாவது முறிந்திருக்கும். இந்த நாய்களுக்கு பயந்தே புதுப்புது ரூட்களில் செல்ல வேண்டி இருக்கிறது. கார்பரேஷனில் விசாரித்தால் குடும்பக்கட்டுப்பாடு பண்ணுகிறோம் என்கிறார்கள். ஆனால் இனப்பெருக்கம் எதுவும் குறைந்தபாடில்லை. குட்டி குட்டியாகத்தான் ஏராளமாக சாலைகளில் திரிகின்றன.
அன்னை நகர், சேலையூர்... தினமும் இதனை கடந்து வரவேண்டியாதாக உள்ளது. குழந்தைகள், சிறார்/சிறுமியர் பள்ளிக்கு செல்லுகையில் மிகுந்த சிரமத்திற்கும் பயத்திற்கும் உள்ளாகிறார்கள்.
— K. RAJESH (@rajeshkmoorthy) September 9, 2023
உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சனை. Lets not be reactive. Lets be proactive. @TambaramCorpor#TambaramCorporation… https://t.co/HJ8tYw7khO pic.twitter.com/QAqX9tFpTk
தெருநாய்களுக்கு சோறு வைப்பவர்களை கண்டாலே கோபம் வருகிறது. நாய்கள் பெருக்கத்திற்கு இரண்டு காரணங்கள் ஒன்று குப்பைத்தொட்டிகள் இன்னொன்று இந்த நாயாபிமானிகள். அரசாங்கம் எதை எதைதான் செய்யும் என்று தோன்றினாலும் இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்க வேண்டும். பைக்கில் செல்லும்போது நாய்கள் துரத்தாமல் தப்ப வேறு எதாவது உபாயங்கள் உண்டா என்பதை கண்டுபிடித்து பயன்படுத்த வேண்டும்." என்று கூறியுள்ளார்.
ராஜேஷ் என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், தாம்பரம் மாநகராட்சியில் அன்னை நகர், சேலையூர்... தினமும் தெருநாய்களை கடந்து வரவேண்டியாதாக உள்ளது. குழந்தைகள், சிறார்/சிறுமியர் பள்ளிக்கு செல்லுகையில் மிகுந்த சிரமத்திற்கும் பயத்திற்கும் உள்ளாகிறார்கள் என்று கூறி புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications