அரசு மருத்துவரை கத்தியால் தாக்கிய இளைஞர் மீது யாருக்கும் சந்தேகம் வராதது ஏன்? அமைச்சர் விளக்கம்
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் பணியாற்றி வந்த மருத்துவர் பாலாஜி என்பவரை இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிண்டி மருத்துவரை கத்தியால் தாக்கிய இளைஞர் மீது யாருக்கும் சந்தேகம் வராதது ஏன்? என்றும், இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது பற்றியும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் மருத்துவராக உள்ள பாலாஜியை, விக்னேஷ்வரன் என்ற வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிண்டி மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தாய்க்கு உரிய சிகிச்சையை வழங்கவில்லை என்ற ஆத்திரத்தில் மருத்துவரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கிண்டி மருத்துவரை கத்தியால் தாக்கிய இளைஞர் மீது யாருக்கும் சந்தேகம் வராதது ஏன்? என்றும், இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது பற்றியும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார். இது தொடர்பாக மா சுப்பிரமணியன் கூறியதாவது:-
24 மணி நேரமும் இங்கு காவலர்கள் பாதுகாப்பு பணியில் தான் உள்ளனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் தினமும் இங்கு வருகிறார்கள். தனியாக வந்த ஒருத்தர் டாக்டரை பார்க்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். யாரும் ஓபி சீட் இல்லாமல் வர முடியாது. அவரோட அம்மாவுக்கு இங்கே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததால் தொடர்ச்சியாக இங்கே வந்து பழக்கப்பட்டு இருக்கிறார்.
அதனால் தான் மற்றவர்கள் கூட இவர் இங்கு வரக்கூடியவர் தானே என்று விட்டு இருக்கிறார்கள். அப்போது டாக்டரின் ரூமுக்கு சென்று கத்தியால் குத்தியிருக்கிறார். நான் பள்ளிக்கரணையில் ஒரு ஆய்வில் இருந்தபோது என்னிடம் இது பற்றி சொன்னாங்க.. முதலில் வடநாட்டு இளைஞர் என்று சொன்னாங்க.. அப்படியெல்லாம் இல்லை. தமிழகத்தை சேர்ந்தவர் தான். அவரது பெயர் விக்னேஷ்வரன்.
இப்போது காவல்துறை கட்டுப்பாட்டில் தான் விக்னேஷ்வரன் உள்ளார். இனிமேல் தான் அவரிடம் விசாரிக்க உள்ளோம். அவரது அம்மாவுக்கு சரியான சிகிச்சை கொடுக்கவில்லை என்று தவறாக புரிந்துகொண்டு இப்படி செய்திருக்கிறார். இந்த மருத்துவமனையில் சிகிச்சை நன்றாக கொடுக்கப்படுகிறது. விக்னேஷ்வரனின் அம்மாவுக்கும் மருத்துவர் சொன்ன மாதிரி 6 ஹீமோதியாரெபி கொடுக்கப்பட்டிருக்கிறது. இங்கே இருக்கிற எந்த டாக்டரும் சிகிச்சை அளிப்பதில் வஞ்சனம் பண்ண மாட்டாங்க..
இங்கே எல்லா மருத்துவரும் சிறப்பான சிகிச்சையை கொடுத்து இருக்கிறார்கள். அதிலும் கூட இந்த டாக்டர் பாலாஜி மீது நல்ல பெயர் உள்ளது. யாரோ தவறுதலாக அந்த இளைஞரிடம் சொல்லியிருக்கிறார்கள். வெளியில் உள்ள மருத்துவர் யாரோ இந்த சிகிச்சை சரியாக செய்யவில்லை என்று அவரிடம் தவறுதலாக சொல்லியிருக்கலாம். அதனை தவறாக புரிந்துகொண்டு இப்படி செய்திருக்கிறார். இவ்வாறு மா சுப்பிரமணியன் கூறினார். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications