சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"டிக்.. டிக்.. டிக்".. திமுக வீசும் பந்தை, திருப்பி வாங்கி வீசும் பாஜக.. கமலாலயம் "கணக்கே" வேற லெவல்

வாட்ச்சுக்கான பில்லை கரெக்ட்டாக வைத்திருக்கிறாராம் அண்ணாமலை

Google Oneindia Tamil News

சென்னை: எம்பி தேர்தலுக்கான பணிகளில் தமிழக அரசியல் கட்சிகள் ஜரூர் வேகத்தில் இறங்கி உள்ளன.. அதிலும் பாஜக, ஓவர் ஸ்பீடில் கோதாவில் குதித்துள்ளது.. இப்படியான பரபரப்புகளுக்கு நடுவில், தமிழக பாஜக தலைவர் குறித்த ஒரு முக்கியமான செய்தி கமலாலய வட்டாரத்தில் வலம்வந்து கொண்டிருக்கிறது.. என்னவாம் அது?
தினம் தினம், ஏகப்பட்ட ட்வீட்களை பதிவிட்டு கொண்டு, இன்னமும் ஆவேசம் அடங்காமல் உள்ளார் காயத்ரி ரகுராம்.. அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று காயத்ரி ரகுராம் குற்றஞ்சாட்டியதுடன், பல்வேறு விமர்சனங்களையும் அண்ணாமலை மீது வைத்து வருகிறார்.

அண்ணாமலையுடன் ஒரு நேர்காணலை நடத்த விரும்புகிறேன். அவர் வெளியே வந்து என்னை எதிர்கொள்வாரா? உண்மையைச் சொல்லுங்கள்.. உண்மையை உலகம் அறியட்டும் என்று கதறி கேட்டுக் கொண்டே இருக்கிறார் காயத்ரி.

 களமிறக்கப்பட்ட தனி டீம்.. கட்டணத்தை உயர்த்தினாலே ஆக்ஷன்! ஆம்னி பேருந்துகளுக்கு சிவசங்கர் எச்சரிக்கை களமிறக்கப்பட்ட தனி டீம்.. கட்டணத்தை உயர்த்தினாலே ஆக்ஷன்! ஆம்னி பேருந்துகளுக்கு சிவசங்கர் எச்சரிக்கை

ஆதாரம் எங்கே

ஆதாரம் எங்கே

மற்றொருபக்கம், அண்ணாமலையால் கட்சிக்குள் நிறைய குழப்பங்கள், சர்ச்சைகள் நிலவுகிறது, அவரை நீக்க வேண்டும் என்று பாஜக தலைமைக்கு சொந்த கட்சியில் இருந்தே அழுத்தங்களும், புகார்களும் பறந்து கொண்டிருக்கின்றன. இதற்கு நடுவில் திமுக அரசு மீது, நாள்தவறாமல் புகார்களை அண்ணாமலை சொல்லி வருவதால், திமுக கடுப்பாகி உள்ளது.. அந்த குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் ஆதாரம் எங்கே? இதுவரை ஒரு குற்றச்சாட்டையாவது அண்ணாமலை நிரூபித்திருக்கிறாரா என்று திமுக தரப்பில் கேள்விகள் எழுகின்றன..

கூசலயே

கூசலயே

சில நாட்களுக்கு முன்பு, மூத்த பத்திரிகையாளரும், திமுக ஐ.டி-விங் ஆலோசகரும், கவிஞருமான மனுஷ்யபுத்திரன், நம் ஒன் இந்தியா தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்திருந்தார். அப்போது திமுக அரசு மீது, அண்ணாமலை முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து நாம் அவரிடம் கேள்வி எழுப்பினோம்.. அதற்கு மனுஷ்யபுத்திரன், "அண்ணாமலை என்ன 24 மணி நேரமும் போராளியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறாரா? இந்த நாட்டில் இவ்வளவு பிரச்சனை இருக்கே, சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காக, இவர் பேசாமல் போய் அந்த போலீஸ் ஆபீசர் வேலையை பார்க்கலாம் இல்ல? எதுக்கு எப்ப பார்த்தாலும் பேட்டி தந்துட்டே இருக்கார்?

வதந்தி மனிதர்

வதந்தி மனிதர்

அதாவது திமுக அரசு மீது குறை சொல்ல ஒன்னுமே இல்லை.. அவர்கள் சொல்லக்கூடிய விமர்சனங்களிலும் உடனுக்குடன் குட்டு வெளிப்பட்டு விடுகிறது.. இதுதான் அவங்களுக்கு பிரச்சனையே... அண்ணாமலை சொல்லக்கூடிய குற்றச்சாட்டுக்கு இதுவரைக்கும் ஏதாவது ஆதாரம் இருக்கா? அவர் சொன்ன எத்தனையோ குற்றச்சாட்டுகளுக்கு திமுக தரப்பில் விளக்கம் சொல்லப்பட்டுள்ளது.. அப்படி விளக்கம் சொன்னபிறகும், திமுக தந்த விளக்கம் தவறு என்று என்னைக்காவது வந்து அவர் நிரூபித்திருக்கிறாரா? அண்ணாமலை என்பவர் வதந்தியை பரப்பும் ஒரு நபர்.. அவ்வளவுதான்" என்று விமர்சித்திருந்தார்.

சேனல் பேர்

சேனல் பேர்

இப்படி நாலாபுறமும் பாஜக குறித்த ஹாட் செய்திகள் வட்டமடிக்கும் நிலையில், ஏதாவது ஒரு பேட்டிகளை தந்து, அதற்கு மேல் களத்தை சூடாக்கிவிடுகிறார் அண்ணாமலை.. அந்தவகையில் 4 நாட்களுக்கு முன்பு நடந்த பேட்டியின் கதகதப்பு இன்னமும் குறையாமல் உள்ளது... நீங்கள் எந்த சேனல்? உங்கள் பெயர் என்ன? என்று கேட்டு செய்தியாளர்களை திணறடித்தார்.. அப்போது, ஒரு செய்தியாளரிடம் வாட்ச் பஞ்சாயத்தையும் அவரே எடுத்தார்..

வாட்ச்சிங்

வாட்ச்சிங்

தன்னுடைய ரஃபேல் வாட்சை கொடுத்து, 24 மணி நேரம் தர்றேன்.. அதுக்குள்ளே தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் சென்று வாட்சை திறந்து பாருங்கள்... அதில் ஒட்டுக் கேட்கும் கருவி இருக்கிறதா? என்று ஆராயலாம். அதற்கான முழு செலவையும் நானே தருகிறேன். இந்த வாட்ச் மீதான உங்கள் சந்தேகங்களை தீர்த்து கொள்ளுங்கள் என்றும் அண்ணாமலை அப்போது காட்டமாக கூறியிருந்தார்.. அன்று அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் ஆரம்பித்த வாட்ச் பிரச்சனை இன்றுவரை தீராமல் ஓடிக் கொண்டிருக்கிறது..

கரெக்ட் பில்

கரெக்ட் பில்

அந்த வாட்ச்சுக்கான பில்லைக் காட்டுங்களே பார்ப்போம் என்று மீண்டும் மீண்டும் கேட்டு, கெடு வைத்து கொண்டுமிருந்தும் இருந்தார்.. இதற்கு அண்ணாமலை, "ஏப்ரல் மாதம் நடைபயணம் செல்லும்போது பில்லை வெளியிடுவேன் என்றும் கூறியிருந்தார். இருந்தாலும், அண்ணாமலை சொன்னபடி பில்லைக் காட்டுவாரா? என்ற சந்தேகம் களத்தில் வட்டமடித்து கொண்டே இருக்கிறது. ஆனால், உண்மையிலேயே அந்த வாட்ச்சுக்கான பில்லை கரெக்ட்டாக வைத்திருக்கிறாராம் அண்ணாமலை.

சபாஷ் சபாஷ்

சபாஷ் சபாஷ்

வாட்ச் பில் மட்டுமல்ல, இப்போதெல்லாம் ஆர்டர் செய்து சாப்பாடு வாங்கினாலும், அந்த பில்லையும் ஞாபகமாக எடுத்து பத்திரப்படுத்தி வருகிறாராம்.. அவரது காருக்கான ஒரு மாத டீசல் செலவு இப்போதைக்கு 95 ஆயிரம் ரூபாய் என்கிறார்கள்.. இதற்கான பில்லையும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாராம்... தன்மீது எந்த ஒரு குற்றச்சாட்டும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும், எல்லா விஷயத்திலும் 'கறார்'தன்மையுடன் உள்ளாராம்.. அதனால், வரவு செலவு கணக்கு விஷயத்தில் மட்டும் அண்ணாமலையிடம் வாயை கொடுத்து லேசில் சிக்கிவிட முடியாது என்கிறார்கள் கமலாலய வட்டாரங்கள்.. சபாஷ்.. சபாஷ்..!!

English summary
Does Annamalai give a bill for all his expenses and What is the Tamil Nadu BJP saying
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X