4 இடி மத்தளத்துக்கு.. யாரந்த சொந்தக்காரர்? தரைமட்டமாகும் பிளான்.. ஸ்டாலினை மிஞ்சும் எடப்பாடி பழனிசாமி
சென்னை: எந்த திட்டத்தை வைத்து ஸ்கோர் செய்ய திமுக நினைக்கிறதோ, அதே திட்டத்தை வைத்து திமுகவை டேமேஜ் செய்ய அதிமுக தயாராகி வருகிறதாம். இதுகுறித்து ஸ்பெஷல் தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
வாக்குறுதியில் சொன்னபடியே, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை அமலாக்கி உள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.. ஆனால், "தகுதியுடையவருக்கு உரிமைத்தொகை" என்பதால், இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் தலையிட்டன.. அனைவருக்குமே உரிமைத்தொகையை தர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

உரிமைத்தொகை: மற்றொருபக்கம் தகுதியுடைய நிறைய பேருக்கு உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்ற சச்சரவுகள் வெடித்து வருகின்றன.. நேற்று அதிமுக மூத்த தலைவர் ஆர்.பி., உதயகுமார் சட்டசபையில் பேசும்போது, உரிமைதொகை திட்டத்தில் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.
"உரிமைத் தொகைக்காக 2 கோடியே 20 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டதாகவும், அதில் 1 கோடி மனுக்கள் தகுதியுடையதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், 59 லட்சம் மனுக்கள் அரசால் தகுதி இல்லை என தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் அறிகிறேன்.
குடும்ப தலைவிகள்: இதை எந்த தகுதியின் அடிப்படையில் வகுத்தார்கள் என்று தெரியாது. ஆனால், முதல்வர் இத்திட்டத்தை அறிவித்தபோது சாமானிய மக்கள் அனைவருக்குமே வழங்குவதாக சொன்னார். இப்போது, வசதி படைத்த குடும்பத் தலைவிகள் இந்த உரிமைத் தொகையைப் பெற்றிருப்பதாகவும், ஏழை எளிய சாமானிய மக்கள் விடுப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது" என்று பேசியிருந்தது பலரது கவனத்தையும் திருப்பியிருந்தது.
அந்தவகையில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அதிமுக தரப்பு கையில் எடுத்துள்ளது.. எடப்பாடி பழனிச்சாமி, தன்னுடைய சம்பந்தி குடும்பத்தினர் தரப்பினரிடம் ஒரு பொறுப்பை தந்திருக்கிறார்.. ரகசியமாக ஒரு சர்வே எடுக்கும் பணியையும் அவரிடம் கொடுத்துள்ளார்.
அதாவது, திமுக அரசு நிறைவேற்றியுள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டம், பெண்களிடம் எந்தளவுக்கு வரவேற்பு பெற்றுள்ளது ? அதிருப்தி இருக்கிறதா? என்பது குறித்து சர்வே எடுத்து ரிப்போர்ட் கொடுக்கச் சொல்லியிருக்கிறாராம்.
சர்வே பணிகள்: அந்த உறவுக்காரரும் தனியார் ஏஜென்சி ஒன்றின் உதவியுடன் எடுத்து வருகிறார். இந்த சர்வே மிக ரகசியமாக எடுக்கப்பட்டு வருகிறதாம்.. அதிமுக மாவட்ட செயலாளர்களிடம் இந்த சர்வே பணியை கொடுக்காமல் உறவுக்காரரிடம் கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி..
இது ஒருபுறமிருக்க, மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் பயன்பெற்றுள்ளவர்களின் லிஸ்ட் வேண்டுமென அரசாங்கத்தில் உள்ள தனக்கு நெருக்கமான அதிகாரிகளிடம் கேட்டிருக்கிறாராம் எடப்பாடி. அந்த பட்டியலை வைத்து, பயன்பெற்றவர்கள் யார் யார் என்று அறிய விரும்புகிறாராம்.
குறிப்பாக, திமுக மகளிர் அணியில் இருப்பவர்கள், திமுக ஆதரவு மகளிர் சுயஉதவிக்குழுவில் இருப்பவர்கள் தான் இதில் அதிக அளவில் பலனடைந்திருப்பதாக எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு தகவல் தரப்பட்டதாம். அதனால்தான், தனக்கு நெருக்கமான அதிகாரிகளிடம் அந்த பட்டியலைக் கேட்டிருக்கிறாராம் எடப்பாடி என்று சொல்கிறார்கள். இந்த லிஸ்ட் கையில் கிடைத்ததுமே, எடப்பாடியின் அடுத்த ஆட்டம் ஆரம்பமாகும் என்கிறார்கள்.
அதிமுக + பாஜக: இன்னொன்றையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.. அதிமுகவுக்கு எப்போதுமே பெண்களின் வாக்குகள் அதிகம்... இந்த உரிமைத்தொகை விஷயத்தில், வாக்குகளை திமுகவுக்கு விட்டுத்தர அதிமுக தயாராக இல்லை.. அதனால், விண்ணப்பித்த பெண்களில் கணிசமானோருக்கு உரிமைத்தொகை கிடைக்காவிட்டாலும் இந்த விஷயத்தை அதிமுக விடப்போவதில்லை.. அதிமுகவே தீவிர எதிர்ப்பில் உள்ளபோது, அண்ணாமலையும் நிச்சயம் விடப்போவதில்லை.. '
அதனால், உரிமைத்தொகை திட்டத்தை நிறைவேற்றினாலும்கூட, திமுகவுக்கு "2 பக்கமும் இடி" காத்துள்ளதாகவே தெரிகிறது.. அதிமுக, பாஜகவின் வியூகங்களை திமுக எப்படி முறியடிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications