ஏன் பயம்? ஊழல் அம்பலமாகிருமா? ED சம்மனுக்கு எதிரான திமுக அரசின் வழக்கால் டென்ஷன் ஆன அண்ணாமலை!
சென்னை: ஐஏஎஸ் அதிகாரிகளை அமலாக்கத்துறை விசாரணைக்கு வரவிடாமல் தடுக்க திமுக அரசு முயற்சிப்பது ஏன்? ஊழலை அமலாக்கத்துறை விசாரணை அம்பலப்படுத்திவிடும் என்று திமுக அரசு பயப்படுகிறதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார் அண்ணாமலை.
தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதைதொடர்ந்து சட்டவிரோத பண பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி ஒரே நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தை சேர்ந்த தொழிலதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், ரத்தினத்தின் உறவினர் கோவிந்தன், மணல் குவாரி அதிபர் கரிகாலன் மற்றும் பொதுப்பணித்துறையில் பணியற்றிய ஓய்வுபெற்ற பொறியாளர் திலகம், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா ஆகியோருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் எழிலகத்தில் உள்ள நீர்வளத்துறை அலுவலகம் என பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த அதிரடி சோதனையில், முக்கிய ஆவணங்கள், ரொக்கப் பணம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து 10 மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திலகம் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது.

இந்த சம்மனை தொடர்ந்து நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சில முக்கிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகியிருந்தார். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் கனிமவள சட்டம் சேர்க்கப்படாத நிலையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லை என்றும், மாநில அரசு அதிகாரிகளை துன்புறுத்தும் நோக்கிலும், அரசு நிர்வாகத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கிலும் அமலாக்கத் துறை செயல்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், 10 மாவட்ட கலெக்டர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளதை மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. இதுதொடர்பாக X சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, "மறைப்பதற்கு நிறைய உள்ளவர்கள் பீதி அடையவும் பல காரணங்கள் உள்ளன. ஊழலில் திளைக்கும் தி.மு.க அரசின் இந்த அயோக்கியத்தனமான நடவடிக்கை, நமது மாநிலத்தின் வளங்களை சுரண்டுவதற்காக திமுக உருவாக்கிய ஆழமான அழுகலைத்தான் உணர்த்துகிறது.
மணல் சுரங்கப் பண மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்கு அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை விசாரணைக்கு வரவிடாமல் தடுக்க திமுக அரசு முயற்சிப்பது ஏன்? தனிப்பட்ட ஆதாயங்களுக்காக அவர்கள் வேண்டுமென்றே உருவாக்கிய நஷ்டத்தை, அமலாக்கத்துறை விசாரணை அம்பலப்படுத்திவிடும் என்று ஊழல் திமுக அரசு பயப்படுகிறதா?" என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார் அண்ணாமலை.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications