உள்நோக்கத்துடன் கேட்காதீங்க.. சொல்லியாச்சி.. நிருபரின் கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த கேஎஸ் அழகிரி
சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக தொடர்ந்து கேள்விகள் கேட்கப்பட்டதால் ‛‛உள்நோக்கத்துடன் கேள்வி கேட்காதீங்க.. சொல்லியாச்சி..'' எனக்கூறி காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி பதில் கூற மறுத்து தமிழக அரசுக்கு ஆதரவாக பேசினார்.
சென்னையில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த வேளையில் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.
சாவர்க்கர் பற்றிய கருத்துக்கு ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சென்னையில் கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் குறித்த கேள்விகளுக்கும், காங்கிரஸ் கட்சி அலுவலக மோதல் தொடர்பான கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

புனையப்பட்ட வழக்கு
முதலாவதாக ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கேஎஸ் அழகிரி, ‛‛ஒரு கருத்து சொன்னால் வழக்குப்பதிவு செய்வார்கள் என்றால் அந்த வழக்கை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் உறுதியாக இருக்கிறார்கள். சாவர்க்கார் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து தான் ஆங்கிலேயர்களின் சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்த கடிதம் இன்றைக்கும் உள்ளது. யாரும் உண்மைக்கு எதிராக எதுவும் சொல்லிவிடவில்லை. ராகுல் காந்திக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு என்பது உண்மையில் புனையப்பட்டது தான். இது வெற்றி பெறாது. நிற்காது'' என்றார்.

கூட்டணியில் வேறுபாடு
இதையடுத்து சாவர்க்கர் பற்றிய கருத்துக்கு மகாராஷ்டிராவில் கூட்டணியில் உள்ள சிவசேனாவின் உத்தவ் தாக்கரேவே ராகுல் காந்தி இவ்வாறு பேசி இருக்க கூடாது என கூறியுள்ளாரே? என்ற வினா எழுப்பபட்டது. இதற்கு கேஎஸ் அழகிரி, ‛‛கூட்டணி கட்சிகள் நாங்கள் சொல்லும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதோ, அனைத்தையும் எதிர்க்க வேண்டும் என்பதோ விதியல்ல. நாங்கள் பல விஷயங்களில் கூட்டணி கட்சிகளுடன் வேறுபட்டு வருகிறோம். இருப்பினும் மாதசார்பின்மை என்ற ஒன்றில் ஒன்றாக இருக்கிறோம். உத்தவ் தாக்கரே அவரது மாநில நலன் கருதி சொல்கிறார். இதில் எந்த பிரச்சனையும் இல்லை. நாங்கள் எங்கள் கருத்தை கூறியுள்ளோம்'' என்றார்.

இயல்பு தான்-நிகழ்வு தான்
இந்த வேளையில் சென்னை அரசு மருத்துவமனையில் கால்பந்து வீராங்கணை பிரியா மரணம் பற்றியும், மருத்துவர்கள் கவனக்குறைவாக இருப்பதாகவும், மருந்துகள் சரியாக கிடைப்பது இல்லை எனவும் குற்றச்சாட்டு உள்ளது. திமுகவின் கூட்டணி கட்சியாக இதை எப்படி பார்க்கிறீர்கள்? என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு கேஎஸ் அழகிரி, ‛‛ மருத்துவமனைகள் எப்போதும் பிரச்சனைக்கு உரியது தான். மருத்துவமனையில் கவனக்குறைவு இருப்பது இயல்பு தான். மருத்துவமனையில் மரணம் ஏற்படுவது நிகழ்வு தான். ஆனால் இந்த அரசாங்கம் ஏற்கனவே இருந்த முந்தைய அரசை விட பொது மருத்துவமனையில் கவனம் செலுத்தி இருக்கிறதா? இல்லையா? என்பது தான் முக்கியம். நல்ல முறையில் கவனம் செலுத்தி இருக்கிறார்கள். முதலமைச்சர் கவனம் செலுத்துகிறார். இன்றைய சுகாதாரத்துறை அமைச்சர் சென்று பார்க்காத மருத்துவமனையே இல்லை. ஒரு காலத்தில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நுழையவே முடியாது. துர்நாற்றம் வீசும். தற்போது நிலையை மேம்படுத்தி உள்ளனர். மேம்படுத்தி இருந்தாலும் சில குறைகள் இருக்கும். அதனை அரசாங்கம் சரிசெய்யும்'' என்றார்.

வரவேற்க வேண்டும்
இந்த வேளையில் குறுக்கிட்ட பத்திரிகையாளர்கள், ‛‛தமிழ்நாட்டில் இதுபோன்ற மரணம் இயல்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா?'' என கேள்வி எழுப்பினர். அதற்கு கேஎஸ் அழகிரி, ‛‛காலம் காலமாக இது நடந்து வருகிறது. தனியார் மருத்துவமனையில் இதுபோன்று நடக்கவில்லையா?. மரணத்தை நியாயப்படுத்தினால் தான் தவறு. ஆனால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் நாம் வரவேற்க வேண்டும். அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்தினார்கள். தவறு நடந்தால் நியாயப்படுத்தக்கூடாது. ஆமாம் தவறு நடந்துவிட்டது என ஒப்புக்கொள்ள வேண்டும். இன்றைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் தவறு நடந்துவிட்டதாக கூறி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். ஜனநாயகத்தில் இதை தான் செய்ய முடியும்'' என்றார்.

உள்நோக்கத்துடன் கேள்வி
இதையடுத்து மருத்துவர்கள் மட்டுமின்றி மருத்துவ நிர்வாகம் மீது தவறு இருப்பதாக கூறப்படுகிறது என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு கேஎஸ் அழகிரி, ‛‛நீங்கள் உங்நோக்கத்துடன் கேள்வி கேட்கிறீர்கள். அப்படியே கொண்டு சென்றால் பிரதமர் வரை புகார் கொண்டு செல்லலாம். நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா'' என்றார்.

அதிருப்தி என்பது இயல்பு
அதன்பிறகு காங்கிரஸ் தலைவர் தன்னிச்சையாக செயல்படுகிறார், தலைமை மீது அதிருப்தி இருப்பதாக ரூபி மனோகரன் கூறியுள்ளாரே என கேட்டதற்கு கேஎஸ் அழகிரி பதிலளித்தார். அப்போது ‛‛அது உள்கட்சி விவகாரம். அதனை கட்சிக்குள் பார்த்து கொள்கிறோம். என் மீது புகார் அளிக்க கூடாது என நான் சொல்லவில்லை. என் மீதும் புகார் அளிக்கலாம். கட்சியில் அதிருப்தி வருவது இயல்பு தான். உலகில் அனைத்து தலைமை மீதும் அதிருப்தி உள்ளது. ஒரு தலைமையை 100 சதவீதம் ஏற்றுக்கொண்டது யார்? அதனால் பிரச்சனையை பெரிதுப்படுத்தப்படவில்லை'' என்றார்.

வரவேற்பு
மேலும் ராஜீவ் வழக்கில் 6 பேர் விடுதலை மற்றும் தமிழகத்தில் நடத்தப்படும் என்ஐஏ, போலீஸ் சோதனை பற்றிய கேள்விகளுக்கு கேஎஸ்அழகிரி, ‛‛ராஜீவ் வழக்கில் 6 பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனு செய்திருப்பதை வரவேற்கிறோம். தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கிறது என சோதனை நடத்தினால் அதில் தவறு இல்லை. தீவிரவாதிகள் எங்கு இருந்தாலும் எந்த மதத்தில் இருந்தாலும் அவர்கள் தேடி கண்டுபிடிக்கக்கூடியவர்கள். இதனை எடுத்தவுடன் நாம் குறை சொல்லக்கூடாது '' என்றார்.
-
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன்












Click it and Unblock the Notifications