போதும்! இளைய காமராஜர்னு அழைக்காதீர்! 2026 தேர்தல் குறித்தும் பேசாதீங்க ப்ளீஸ்! விஜய் வேண்டுகோள்
சென்னை: என்னை இளைய காமராஜர் என அழைக்க வேண்டாம் என்றும் 2026 தமிழக சட்டசபை தேர்தல் குறித்தும் யாரும் பேச வேண்டாம் என தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது வழங்கும் விழாவுக்கு வந்திருந்த பெற்றோர், மாணவர்களை கட்சியின் தலைவர் விஜய் கேட்டுக் கொண்டார்.

10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கான கல்வி விருது வழங்கும் விழா இன்று 3ஆவது கட்டமாக மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.
இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டார். அப்போது அவர் குஜராத் விமான விபத்து குறித்து வேதனை தெரிவித்தார். விபத்தில் இறந்தவர்களுக்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
குஜராத்
அப்போது அவர் கூறுகையில், நேற்று குஜராத்தில் மிகப் பெரிய சோகமான விபத்து நிகழ்ந்தது. அகமதாபாத் விமான விபத்து தொடர்பான புகைப்படங்கள், வீடியோவை பார்க்கும்போது மனது பதறுகிறது. அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை இது என கூறினார்.
2 நிமிட அஞ்சலி
2 நிமிட அஞ்சலிக்கு பிறகு மீண்டும் விஜய் பேசுகையில், எல்லோரும் மிகத் தூரத்தில் இருந்து வந்துள்ளீர்கள். அனைவரையும் நேரில் சந்தித்துப் பேசுவேன். எனினும், ஒரு சின்ன வேண்டுகோள். பெற்றோர்கள், மாணவர்கள் மேடையில் பேசுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
கல்வி விருது வழங்கும் விழா
இதையடுத்து கல்வி விருது வழங்கும் விழா தொடங்கியது. அப்போது வால்பாறையைச் சேர்ந்த மாணவன் கார்த்திக்கிற்கு விஜய், தங்க மோதிரம் பரிசு வழங்கினார். அப்போது மாணவனின் தந்தை விஜய்யின் வேண்டுகோளையும் மீறி மேடையில் அவரை புகழ்ந்து பேசினார்.
விஜயகாந்த்
அவர் விஜயகாந்த், எம்ஜிஆருடன் விஜய்யை ஒப்பிட்டு பேசினார். அப்போது மைக்கை வாங்கிய விஜய் மீண்டும் ஒரு வேண்டுகோள் என குறிப்பிட்டு, " 2026 தேர்தலைப் பற்றி பேச வேண்டாம். அதேபோல் தயவுசெய்து இளைய காமராஜர் என்று என்னை அழைக்க வேண்டாம். அதற்குப் பதிலாக உங்கள் பள்ளி மற்றும் ஆசிரியர்களைப் பற்றி பேசுங்கள் என கோரிக்கை வைத்தார்.
சிறப்பிடம்
கடந்த 3 ஆண்டுகளாக 10, 12 ஆம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு விஜய் பரிசுத் தொகை வழங்கி வருகிறார். அந்த வகையில் கடந்த 30ஆம் தேதி அரியலூர், ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், சிவகங்கை, செங்கல்பட்டு, சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை சந்தித்து விஜய் விருந்து வைத்து பரிசு , சான்றிதழ்களை வழங்கினார்.
எந்த மாவட்டம்
இதையடுத்து கடந்த 4ஆம் தேதி ராமநாதபுரம், ஈரோடு, கரூர், தஞ்சை, தருமபுரி, திருச்சி, நெல்லை, திருப்பத்தூர், திருப்பூர், திருவாரூர், மயிலாடுதுறை, விருதுநகர் , புதுவை உள்ளிட்ட பகுதியில் உள்ள மாணவர்களை சந்தித்தார்.
இளைய காமராஜர்
அப்போது பேசிய ஒரு மாணவனின் தந்தை இன்று முதல் நீங்கள் இளைய தளபதி என்று அழைக்கப்படுவது போல இளைய காமராஜர் என அழைக்கப்படுவீர்கள் என கூறினார். அதை பார்த்து விஜய் சற்றே மிரண்டு போய் அவரின் தோளை பிடித்து அழுத்தினார். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் விஜய் திட்டமிட்டு தன்னை இளைய காமராஜர் என அழைக்க வைக்கிறார் என நாடார் அமைப்புகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. விஜய்யை கண்டித்து காமராஜர் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications