ஸ்கூல் பீஸ் கேட்டு பெற்றோர்களை கட்டாயப்படுத்தக்கூடாது... தானாக கட்ட தடையில்லை - தமிழக அரசு
இக்கட்டான இந்த சூழ்நிலையில் ஃபீஸ் கேட்டு தனியார் பள்ளிகள் பெற்றோர்களை நிர்பந்திக்க கூடாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை: தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்தும் படி பெற்றோரை நிர்ப்பந்திக்கக் கூடாது என்றும் அதே நேரத்தில் பெற்றோர் தாமாக முன்வந்து கட்டணம் செலுத்துவதற்கு எந்த தடையும் இல்லை என்றும் தமிழக அரசு சார்ப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் தவணை முறையில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக திட்டம் வகுக்க கோரி தனியார் பள்ளிகள் சங்கங்கள் அரசுக்கு மனு அளிக்கலாம் என்று உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்க கூடாது என்ற அரசாணைக்கு தடை கோரியும், கல்வி கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்க கோரியும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கே.பழனியப்பன், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. பள்ளி மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலித்தால்தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியும். கடந்த சில மாதங்களாக பள்ளிகளில் பணியாற்றும் அனைவருக்கும் தனியார் பள்ளிகள் சம்பளம் வழங்கி வருகிறது.

கடந்த மூன்று மாதங்களாக பள்ளிகள் இயங்காவிட்டாலும், அங்கு பணியாற்றும் அனைவருக்கும் தனியார் பள்ளிகள் சம்பளம் வழங்கி வருவதாகவும், தற்போது கல்வி கட்டணம் வசூலிக்க அனுமதித்தால்தான் ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும், வழக்கு முடியும் வரை அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது சங்கம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் விஜய்ஆனந்த் அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி வாதிட்டார். இதை கேட்ட நீதிபதி அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் ஆசிரியர்களுக்கும் மற்றும் பிற ஊழியர்களுக்கும் ஊதியத்தை முறையாக வழங்க வேண்டுமென்பது அரசின் கொள்கை முடிவாக இருக்கின்ற நிலையில், அரசு உதவி பெறாத பள்ளிகள் கட்டணத்தை வசூலிக்காமல் எப்படி சம்பளத்தை வழங்க முடியுமென கேள்வி எழுப்பினர்.
ஆன்லைன் வகுப்புகளை பெரும்பாலான பள்ளிகள் தொடங்கிவிட்டு, வகுப்புகளை நடத்த ஆசிரியர்களை கல்வி நிறுவனங்கள் நிர்பந்திக்கும் நிலையில் எப்படி சம்பளம் வழங்காமல் இருக்க முடியுமெனவும் கேள்வி எழுப்பினார். இந்த வழக்கில் தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு சார்பாக ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்தும் படி பெற்றோரை நிர்ப்பந்திக்கக் கூடாது என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்றும்
பெற்றோர் தாமாக முன்வந்து கட்டணம் செலுத்துவதற்கு எந்த தடையும் இல்லை என்றும் தெரிவித்தார்.
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இடங்களை 248 கோடியை 76 லட்சம் ரூபாய் ஏற்கனவே தனியார் பள்ளிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகையைப் பயன்படுத்தி மூன்று நான்கு மாதங்களுக்கு ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்கலாம்.என்று தமிழக அரசு சார்பாக தெரிவித்தார்
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் தவணைமுறையில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக திட்டம் வகுக்க கோரி தனியார் பள்ளிகள் சங்கங்கள் அரசுக்கு மனு அளிக்கலாம் என்றும் அறிவுறுத்திய நீதிபதி தனியார் பள்ளிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து விரைந்து தவணை முறையில் கட்டணம் செலுத்துவது தொடர்பான திட்டத்தை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு ஜூலை 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
திருப்பரங்குன்றம் மலை அளவீடு.. தொல்லியல் துறை சொன்ன தகவல்.. உடனே ஐகோர்ட் போட்ட உத்தரவு! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications