குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் இந்த தவறை மறந்தும் செய்ய வேண்டாம்.. நேற்று இரவு என்ன நடந்தது?
சென்னை: சென்னை குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் ஜிஎஸ்டி சாலையை ஒட்டிய பகுதிக்கு செல்ல எந்த பிரச்சனையும் இல்லை.. மாறாக சிட்லபாக்கம் மற்றும் ரயில் நிலையத்தை அடுத்து உள்ள ராதா நகர் உள்பட குரோம்பேட்டையின் மறுபக்கம் செல்வோர் பெரிய ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது. நேற்று இரவு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
சென்னை குரோம்பேட்டை ரயில் நிலையம் மிக முக்கியமான சென்னையின் புறநகர் ரயில் நிலையங்களில் ஒன்று.. ஒரு காலத்தின் சென்னையின் புறநகர் பகுதியாக இருந்த குரோம்பேட்டை, ரேடியல் சாலையிலும், ஓஎம்ஆர் சாலையிலும் உருவான ஏரளமான ஐடி நிறுவனங்கள் காரணமாக, சென்னையின் தவிர்க்க முடியாத வர்த்தக மையமாக வளர்ந்துவிட்டது.

சென்னையில் திநகர், புரசைவாக்கத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய வணிக பகுதியாக குரோம்பேட்டை வளர்ந்துவிட்டது. அதற்கு காரணம் ரயில் நிலையமும் பேருந்து நிலையமும் ஒரே இடத்தில் இருப்பது. அதேபோல் பல்லாவரம், ரேடியல் சாலையின் இணைப்பு பகுதியாக குரோம்பேட்டை இருப்பது தான். தென் சென்னையின் முக்கியமான ரயில் நிலையமாக குரோம்பேட்டை இருக்கிறது.
இந்நிலையில் குரோம்பேட்டை ரயில் நிலையத்தை பொறுத்தவரை புறநகர் ரயிலில் ஏறி வருவோர், ஜிஎஸ்டி சாலை செல்ல எந்த பிரச்சனையும் இருக்காது. எந்த வகையிலும் தண்டாவாளத்தில் சிக்கி உயிரிழக்கமாட்டார்கள்.. ஆனால் குரோம்பேட்டை ராதா நகர், சிட்லபாக்கம் பகுதிக்கு சென்றால், அதாவது சரவணா ஸ்டோர்ஸ் கடையின் பின்புறம் உள்ள தண்டாவளைத்தை கடந்து செல்ல விரும்பினால் தொடர்ந்து மிகப்பெரிய நான்கு முக்கிய தண்டவாளங்களை ஆபத்தான முறையில் கடந்து செல்ல வேண்டியது இருக்கிறது. இந்த ஆபத்தை உணராத இரண்டு பேர் நேற்று தண்டவாளத்தில் ரயிலில் அடிப்பட்டு இறந்து போனார்கள்.
இதுபற்றி இருப்புப்பாதை போலீசாருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்க்கு இருப்புப்பாதை போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். அங்கு இறந்து கிடந்த இளைஞர்களில் உடல்களை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். பின்னர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போது, நேற்றிரவு மின்சார ரயிலில் வந்தவர்கள் கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதியதில் உயிரிழந்தது தெரியவந்தது.
உயிரிழந்தவர்களுள் ஒருவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள வங்கியில் பணிபுரிந்து வந்த சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்த சதீஷ் என்பதும், மற்றொருவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரனவ் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இருவரும் நேற்றிரவு தங்களது பணியை முடித்துவிட்டு செல்லும் போது கவனக்குறைவாக தண்டாவாளத்தை கடக்க முயன்றுள்ளார்கள். அப்போது, திடீரென அசாம் மாநிலம் டின்சுகியாவில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவு ரயில் அடுத்தடுத்து இருவர் மீதும் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
குரோம்பேட்டையின் கிழக்கு பக்கம் உள்ள ராதா நகர், சிட்லபாக்கம் வழியாக செல்ல விரும்புவோர். தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்து செல்கிறார்கள்.. அதேபோல் குரோம்பேட்டையின் கிழக்கு பக்கம் உள்ள மக்கள் ஆபத்தான முறையில் கடந்து சென்று ரயிலில் ஏறும் நிலையே இருக்கிறது. அப்படி நடந்து செல்பவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. தற்போதைய நிலையில் அங்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. அந்த பாதையில் ரயிலில் பயணிப்போரும் கீழே இறங்கி சென்று கடக்கும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும்.. அதுதான் அங்கு ஒரே தீர்வாக இருக்கும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications