Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆபத்து! டிராப்ஸ் Vs சிரப்.. பாராசிட்டாமலை மாற்றி கொடுத்தால் என்னவாகும்.. மருத்துவர் பரூக் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொட்டு மருந்துக்கும் சிரப்புக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன என்பது குறித்து சிவகங்கை அரசு மருத்துவர் பரூக் அப்துல்லா விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அரசு மருத்துவர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

குழந்தைகளுக்கு மருந்து புகட்டுவதில் முக்கியமான ஒரு வித்தியாசத்தை பெற்றோருக்கும் தாத்தா பாட்டிகளுக்கும் விளக்க இந்த பதிவு பெரும்பாலும் ஒரு வயதுக்குட்பட்ட பத்து கிலோவுக்கும் குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு "ட்ராப்ஸ்" எனும் சொட்டு மருந்து வடிவில் மருந்து பரிந்துரைக்கப்படும்.

 வயது எடை

வயது எடை

சற்று வயது கூடிய எடையும் அதிகமாக உள்ள குழந்தைகளுக்கு "சிரப்" வழங்கப்படும். இதில் "ட்ராப்ஸ்" என்பது அதிகபட்சம் பத்து மில்லி அல்லது பதினைந்து மில்லி தான் இருக்கும். "சிரப்" முப்பது மில்லி / அறுபது மில்லி / நூறு மில்லி வரை கூட இருக்கலாம். ட்ராப்ஸ் உடன் கூடவே ட்ராப்பர் எனும் உறிஞ்சு கொடுக்கும்.

உபகரணம்

உபகரணம்

உபகரணமும் வழங்கப்படும் சிரப்புடன் அளவீடு செய்யும் மூடி (Measuring cup) வழங்கப்படும். நம் மக்களில் பலர் இந்த ட்ராப்ஸையும் சிரப்பையும் குழப்பிக் கொள்வதைப் பார்க்க முடிகிறது. கீழ்க்காணும் படத்தில் ஒன்று என்றிருப்பது பாராசிட்டமால் சிரப்பாகும். அதுவே இரண்டு என்றிருப்பது பாராசிட்டமால் ட்ராப்ஸ் ( சொட்டு மருந்தாகும்) .

எடுத்துகாட்டு

எடுத்துகாட்டு

இப்போது முதல் எடுத்துக்காட்டு வாருங்கள் பார்ப்போம். பத்து கிலோ எடை கொண்ட ஒரு வயது உள்ள குழந்தைக்கு மருத்துவர் பாராசிட்டமால் 100மிகி/ மில்லி ட்ராப்ஸ் ஒன்றரை மில்லி மூன்று வேளை கொடுங்கள் என்று பரிந்துரைக்கிறார். இந்தக் குழந்தைக்கு ட்ராப்ஸ் மருத்துவர் சொன்ன அளவில் அளவில் வாங்காமல் சிரப் வாங்கி கொடுத்தால் என்ன ஆகும்?

பாராசிட்டாமல்

பாராசிட்டாமல்

சிரப் பாராசிட்டமாலில் ஐந்து மில்லியில் 250 மில்லிகிராம் பாராசிட்டமால் இருக்கும். இப்போது சிரப்பில் ஒரு மில்லி எடுத்து குழந்தைக்கு கொடுக்கும் போது 150 மில்லிகிராம் கிடைக்க வேண்டிய இடத்தில் வெறும் 50 மில்லிகிராம் பாராசிட்டமால் மட்டுமே கிடைக்கும். இதனால் காய்ச்சல் சரியாக குணமாகாது. மீண்டும் மீண்டும் குறைந்த நேர இடைவெளியில் வந்து கொண்டே இருக்கும். இது UNDER DOSING ஆகும்.

குணமாகாது

குணமாகாது

தேவைக்கும் குறைவாக மருந்தை புகட்டுவது இதனால் நோய் குணமாகாமல் போகும். இதன் இரண்டாவது ஆபத்தான எடுத்துக்காட்டை பார்ப்போம் வாருங்கள். மூன்று வயதுடைய பதினைந்து கிலோ எடை கொண்ட குழந்தைக்கு மருத்துவர் பாராசிட்டமால் 250 மில்லிகிராம் / 5 மில்லி என்ற சிரப்பை 5 மில்லி மூன்று வேளை பரிந்துரைக்கிறார்.

ஓவர்டோஸிங்

ஓவர்டோஸிங்

ஆனால் இங்கு சிரப்புக்கு பதிலாக ட்ராப்ஸ் வாங்கி வந்து அந்த சொட்டு மருந்தில் ஐந்து மில்லி ஊற்றினால் என்ன ஆகும்? ஒரு மில்லியில் நூறு மில்லிகிராம் பாராசிட்டமால் இருக்கும். ஐந்து மில்லி என்றால் ஐநூறு மில்லிகிராம் பாராசிட்டமால் குழந்தைக்கு ஒரு வேளைக்கு கிடைக்கும் . 250 மில்லி கிராம் கிடைக்க வேண்டிய குழந்தைக்கு அதை விட இருமடங்கு மருந்து தேவையில்லாமல் கொடுக்கப்படும். இது OVER DOSING ஆகும்.

மிகுதியான மருந்து

மிகுதியான மருந்து

தேவைக்கு மிகுதியாக மருந்தை வழங்குதல். இதனால் மருந்தின் பக்கவிளைவு மிகுந்து ஆபத்தை உண்டாக்கக்கூடும். எனவே பெற்றோர்கள் , தாத்தா பாட்டிகள் இது குறித்து கவனத்துடன் செயல்பட்டு மருத்துவர் பரிந்துரைத்தது ட்ராப்ஸ் எனும் சொட்டு மருந்தா சிரப் மருந்தா என்பதை கவனமாக பார்த்து குழந்தைக்கு புகட்டுவது கடமை. இவ்வாறு டாக்டர் பரூக் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+