திமுகவில் இணைந்த டாக்டர் மகேந்திரனுக்கு புதிய பதவி.. துரைமுருகன் அறிவிப்பு
சென்னை: மக்கள் நீதி மய்யத்திலிருந்து திமுகவில் இணைந்த டாக்டர் மகேந்திரனுக்கு திமுகவில் தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியில் துணைத் தலைவர் பதவியிலிருந்தவர் டாக்டர் மகேந்திரன். பொள்ளாச்சியைச் சேர்ந்தவர், கறைபடியாத கைகளுக்கு சொந்தக்காரர். தனது தொழிற்சாலைகள் மூலம் பலருக்கு வேலைவாய்ப்புகளை அளித்து வருபவர்.

இவர் மக்கள் நீதி மய்யம் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு லட்சக்கணக்கான ஓட்டுகளை அள்ளினார். அந்த தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டவர்களில் மகேந்திரனுக்கு கிடைத்த வாக்குகள்தான் அதிகம். அந்தளவுக்கு அவருக்கு கோவையில் செல்வாக்கு இருக்கிறது.
இந்த நிலையில் அவர் சிங்காநல்லூர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றார். இவரது செல்வாக்கை பயன்படுத்தி கமல்ஹாசனும் கோவை தெற்கு பகுதியில் போட்டியிட்டார். கடைசி வரை வெல்வார் என இருந்த நிலையில் கடைசி ரவுண்டில் வானதி ஸ்ரீனிவாசன் ஆயிரத்து சொட்சம் வாக்குகளில் வென்றார்.

இதையடுத்து தேர்தல் தோல்வியிலிருந்து கமல்ஹாசன் பாடம் எடுத்து கொள்ள தயாராக இல்லை என்றும் தேர்தல் தோல்விக்கு வேட்பாளர்களே காரணம் என நியாயமற்ற பழியை சுமத்தியதாக அவர் அக்கட்சியிலிருந்து விலகினார்.
இதையடுத்து அவர் கடந்த ஜூலை 8 ஆம் தேதி திமுகவில் இணைந்தார். அவரது செல்வாக்கையும் பெற்ற வாக்குகளையும் கருத்தில் கொண்டு அவருக்கு சில அசைன்மென்டுகள் ஒப்படைக்கப்பட்டன. இந்த நிலையில் அவருக்கு திமுகவில் புதிய பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
Recommended Video
அந்த வகையில் அவருக்கு திமுக தொழில்நுட்ப அணியின் இணை செயலாளராக மகேந்திரன் நியமிக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை கழகத்தின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டார். ஏற்கெனவே நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் இணைந்து அவர் பணியாற்றுவார் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
-
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
"தூக்க முடியல.. டிராலியில் வந்த புகார்கள்!" ஸ்டாலினிடம் அறிக்கையை ஒப்படைத்த திமுக கள ஆய்வுக்குழு! -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
அவிநாசி சாலையில் 5 நாட்களுக்கு அதிரடி மாற்றம்.. கோவை பயனீர் மில் கிட்ட அதை கவனிச்சீங்களா?












Click it and Unblock the Notifications