ஒன்னு கூடிய தவெக, பாஜக.. எனக்கும் இது சதினு தான் தோன்றுகிறது! டாக்டர் ஷர்மிளா சொல்லும் 10 பாயிண்ட்
சென்னை: சொல்லி வைத்தார் போல கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆகியோர் தமிழக அரசையும் காவல் துறையையும் நோக்கி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் கரூர் விவகாரத்தில் நடந்தது சதி என்று தான் தனக்கும் தோன்றுகிறது எனக் கூறியிருக்கிறார் பிரபல சமூக ஆர்வலரான டாக்டர் ஷர்மிளா. இது தொடர்பாக 10 கேள்விகளையும் அவர் முன் வைத்திருக்கிறார்.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி த.வெ.க. தலைவரும், நடிகருமன விஜய் தலைமையில் கரூரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் புயலையும் கிளப்பியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, அதிமுக மற்றும் பா.ஜ.க. கட்சிகள், தமிழக அரசு மற்றும் காவல் துறையை நேரடியாக குற்றஞ்சாட்டி வருகின்றனர். காவல் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை, நிகழ்ச்சி நடைபெறும் போது போலீசார் முறையாக பாதுகாப்பு வழங்கவில்லை என்ற குற்றசாட்டு முன்வைக்கப்படுகிறது.

விஜய் பிரச்சாரம்
மேலும், அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள், பொதுமக்களின் உயிர் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் வகையில் இல்லை என அதிமுக, பாஜக, தவெக ஒரே குரலாக ஒலித்து வருகின்றன. இதற்கிடையே, பா.ஜ.க., தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஹேமமாலினி எம்.பி. தலைமையில் 8 பேர் கொண்ட குழு கரூர் சம்பவத்தை ஆய்வு செய்ய தமிழகத்துக்கு அனுப்பியுள்ளது. இந்த குழு நிகழ்ச்சி நடத்திய இடம், பாதிக்கப்பாட்டவர்களின் குடும்பம், மற்றும் பொதுமக்களை சந்தித்து, சம்பவத்தின் முழு விவரங்களை அறிந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டுள்ளது.
டாக்டர் ஷர்மிளா கேள்விகள்
இந்த நிலையில் கரூர் விவகாரத்தில் நடந்தது சதி என்று தான் தனக்கும் தோன்றுகிறது எனக் கூறியிருக்கிறார் பிரபல சமூக ஆர்வலரான டாக்டர் ஷர்மிளா. இது தொடர்பாக 10 கேள்விகளையும் அவர் முன் வைத்திருக்கிறார். இதுதொடர்பாக கேள்வி எழுப்பியுள்ள அவர்,"
1. வட சென்னை / திருவள்ளூர் போக வேண்டிய #விஜய் ஏன் திடீரென்று நாமக்கல் மற்றும் கரூர் என்று தன் சனிக்கிழமை சுற்றுலாவை மாற்றினார் ?
2. செந்தில் பாலாஜி தான் இவர்கள் டார்கெட்டா ? இல்லை அவர் மூலமாக முகவர்களை டார்கெட் பண்றாங்களா ?
2. ஏன் 8 மணி நேரம் தாமதமாக வந்தார்? மக்கள் மயங்கி விழுந்தனர் என்று தெரிந்தும் ஏன் பேச்சை தொடர்ந்தார் ?
4. சம்பவம் நடந்த பின் ஏன் தப்பி ஓடினார் ?
5. 72 மணி நேரம் ஏன் பதுங்கி இருந்தார்? இந்த நேரத்துல் யாரை எல்லாம் தொடர்பு கொண்டார் ?
6. இதற்க்கிடையில் #விஜய்யை காப்பாற்ற #பாஜக ஏன் தீவிரம் காட்டுகிறது ?
7. #தவெக #பாஜக இரு தரப்பும் சொல்லி வைத்தது போல் ஏன் சிபிஐ விசாரணை கேட்கிறார்கள் ?
8. ஆதவ் அர்ஜுணா ஏன் இரவோடு இரவாக கலவரத்தை தூண்ட முயற்சிக்கிறார் ?
9. #விஜய் ஏன் முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என்று சவால் விடுகுறார் ? இது மூலமாக தன் ரசிகர்களை மேலும் உசுப்பேத்தி வன்முறையை தூண்ட ஏன் முயற்சிக்கிறார் ?
10. இது எல்லாமே #பாஜக - #தவெக சேர்ந்து செய்யும் சதியாக ஏன் இருக்கக்கூடாது?
நேர்வழியில் வெற்றி பெற முடியாது என்று தெரிந்து , கொள்கை எதிரியுடன் ரகசிய கூட்டணியமைத்து அரசியல் எதிரியை வீழ்த்த சதியா? " என கூறியுள்ளார்.
-
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
தாம்தக்க.. தையத்தக்க.. திருச்சி கிழக்கில் ராகவா லாரன்ஸ் போட்டி? விஜய் போட்டு வைத்த கணக்கு! என்ன? -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
தொகுதி தோறும் 2 கேமராமேன், ஒரு எடிட்டர்! தவெக எம்எல்ஏ-க்களுக்கு கட்சி தலைமை போட்ட 'இன்ஸ்டா' உத்தரவு! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
நாளை திடீரென டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார்.. என்ன காரணம் -
விஜய், சுந்தர் சியின் முடிவு.. சூழ்ச்சி இருக்கு! சொல்லுறதை நம்ப முடியல! ரகசியங்களை உடைத்த நடிகர் இளவரசு -
திடீரென போனை போட்டு பேசிய விஜய்.. பொருளாதார ஜாம்பவான்களுடன் ரகசிய ஆலோசனை.. என்ன காரணம்? -
பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்.. முதல்வர் விஜய் அறிவிப்பு! -
மீண்டும் டெல்லி செல்லும் விஜய்! அதுவும் 3 நாள் பயணம்.. முக்கிய அஜெண்டா என்ன? ராகுலை சந்திப்பாரா? -
இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிடனும்.. பாஜக மீது லேசான பாசம்! ‘இந்தியா’வுக்கு நோ சொன்ன விஜய்!












Click it and Unblock the Notifications