கொரோனா நோயாளிகளே! வெடித்து போகும் அளவுக்கு தலைவலியா.. உடனே இதை நுகருங்கள்- டாக்டர் ஒய் தீபா அட்வைஸ்
சென்னை: கொரோனா நேரத்தில் வெடித்து போகும் தலைவலியை துரத்தும் அரோமா எண்ணெய் குறித்து அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையின் கைநுட்ப மருத்துவத் துறையின் தலைவர் டாக்டர் ஒய் தீபா தெரிவித்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து டாக்டர் ஒய் தீபா ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறுகையில், இன்று நாம் பார்க்க இருக்கும் விஷயம் அரோமா எண்ணெய் குறித்ததுதான். இந்த கொரோனா நேரத்தில் நமது முழு கவனமும் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது குறித்துதான்.
ஒரு நல்ல நோய் எதிர்ப்பு சக்தி, நமது நேர்மறையான எண்ணங்களை பொருத்தே அமைகிறது. உளவியல் நிபுணர்கள் கூறுவது என்னவெனில் யார் ஒருவர் நல்ல மனநிலையிலும் நேர்மறையாகவும் இருக்கிறார்களோ அவர்களுடைய எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

எதிர்மறை
ஒருவருடைய மன அழுத்தம் அதிகமாக இருக்கிறது, எதிர்மறையான எண்ணங்கள் அதிகமாக இருந்தால் அவர்களுடயை எதிர்ப்பு சக்தி குறையும். நல்ல மன அழுத்தத்தை குறைப்பதற்கும், நல்ல ஒரு எண்ணத்தை கொண்டு வரவும், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இந்த அரோமா எண்ணெயின் பணி என்ன என்பதை பார்ப்போம்.

நீலகிரி
இந்த கொரோனா நேரத்தில் நீலகிரி தைலம், பெப்பர் மின்ட் ஆயில், லெமன் கிராஸ் ஆயில், லாவண்டர் ஆயில் ஆகியவற்றை கொரோனா நோயாளிகளுக்கு தினமும் நுகர்ந்து பார்க்க கொடுக்க வேண்டும். அது போல் ஆவி பிடிக்கும் போது அதில் அந்த எண்ணெய்யை கலந்து சுவாசிக்கவும் கொடுக்கலாம்.

தலைவலி
இதனால் பல நன்மைகள் கிடைக்கிறது, குறிப்பாக தலைவலி குறைகிறது. கொரோனா அறிகுறி இல்லாதவர்களுக்கு வாசனை தெரியாது. உணவின் ருசியும் தெரியாது. இந்த நேரத்தில் கொரோனா அறிகுறி இல்லாத நோயாளிகள் அரோமா எண்ணெய்யை நுகர்வது மூலம் வாசனையும், சுவையும் திரும்ப பெறுவர்.

வெளிநாடு
வெறும் ஓரிரு நாட்களிலேயே நல்ல ரிசல்ட்டை கொடுக்கிறது. மார்பு, தலை பகுதிகளில் பாரமாக இருத்தல், அசதி, உடல்வலி ஆகியவையும் அரோமா எண்ணெய்களை சுவாசித்தாலே சரியாகிவிடும். இந்த எண்ணெயில் டர்பைன் இருக்கிறது. இவையெல்லாம் ஆன்டி வைரலாக செயல்படுகிறது. இந்த அரோமா எண்ணெய் வெளிநாடுகளிலும் பயன்படுத்துகிறார்கள்.

மன அமைதி தரும்
குறிப்பாக ஜப்பானியர் டீக்கி ஆயில், யுகாலிப்டஸ் ஆயில், பெப்பர் மின்ட் ஆயில் ஆகியவற்றை அதிகமாக இந்த கொரோனா காலத்தில் சிகிச்சைக்கு பயன்படுத்துகிறார்கள். இந்த எண்ணெயை சுவாசிக்கும் போது நமது லிம்பட்டிக் சிஸ்டம் மூலமாக மூளைக்கு சென்று அங்கு ஹைப்போ தாலமஸில் ஒரு உணர்வை உருவாக்குகிறது. இது மன அமைதியை தருகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி
நேர்மறையான எண்ணம் வருகிறது. நல்ல தூக்கத்தை கொடுத்து, மன அமைதியையும் கொடுக்கிறது. அலைபாயும் மனதை அமைதிப்படுத்தும். இதன் மூலமாக நாம் மன அழுத்தத்தை எளிதாக குறைக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கலாம் என டாக்டர் தீபா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications