கர்ப்பிணிகள் எந்த உணவுகளை உட்கொள்ளலாம்?.. ஃபோலிக் ஆசிட் அளவு குறைந்தால் என்ன?.. டாக்டர் ஒய் தீபா
சென்னை: கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் எந்தெந்த உணவுகளை எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்து அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ மருத்துவமனை டாக்டர் ஒய் தீபா அறிவுறுத்தியுள்ளார்.
Recommended Video
இது குறித்து டாக்டர் ஒய் தீபா ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், கர்ப்ப காலத்தில் என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பதை பார்ப்போம். இதன் மூலம் தாய், சேய் ஆரோக்கியத்தை எப்படி மேன்மைப்படுத்துவது என்பதை பார்ப்போம்.
நாம் சாப்பிடும் உணவுகளில் ஊட்டச்சத்து நிறைந்திருக்க வேண்டும். பிரசவ காலத்தில் பெண்கள் உடல் எடை அதிகமாகிவிடக் கூடாது என்பதற்காக சத்தான உணவை எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிடுகிறோம். சத்தான உணவை எடுத்துக் கொண்டால்தான் எந்த குறைப்பாடும் இல்லாமல் குழந்தை ஆரோக்கியமாக வளரும். கால்சியம், ஃபோலிக் ஆசிட், இரும்பு, புரதம் ஆகிய சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தினசரி உணவில் இவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகமாக இருப்பதை எடுத்துக் கொள்வதால் தாய், சேயின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சிறுதானியங்களை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் நார்ச்சத்து, இரும்பு சத்து, விட்டமின் பி ஆகியவை அதிகமாக இருக்கிறது.

ஜீரண பிரச்சினைகள்
இவை ரத்த ஓட்டத்தை அதிகரித்து ஜீரண பிரச்சினைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளும். பிரசவ காலத்தில் ஏற்படக் கூடிய மனஅழுத்தத்தை குறைக்கவும் உதவும். காபி, டீ எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இதில் இருக்கக் கூடிய கஃபைன் என்ற ஒரு பொருள் அதிக சிறுநீர் கழிப்பதை தூண்டும். அப்போது எளிதில் நம் உடலில் நீர் சத்து குறைந்துவிடும். காற்று அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், சோடா, ஆல்கஹால் இருக்கும் பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஊறுகாய் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். இது நம் ஆரோக்கியத்தையும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

உப்பு அதிகம் உள்ள உணவுகள்
உப்பு அதிகமாக இருக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். உப்பு அதிகமாக சேர்த்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். தேவையற்ற மருந்துகளை எடுத்துக் கொள்ள நேரிடும். அசைவ உணவுகளில் காரமில்லாத உணவுகள், முட்டை, மீன் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். தினமும் இரு முட்டைகளை எடுத்துக் கொள்ளலாம். பிரசவ காலத்தில் எவ்வளவு எடை போடலாம் என்பதை பார்ப்போம். முதல் 3 மாதங்களில் கர்ப்பிணிகள் 4 கிலோ வரை எடை போடலாம். இரண்டாவது மற்றும் 3ஆவது 3 மாதங்களில் 600 கலோரிகள் ஊட்டம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் எடுத்துக் கொள்ளும் உணவு நம் உடல் எடையை மட்டும் அதிகரிக்கவில்லை, நம் குழந்தையின் வளர்ச்சியையும் அதிகரிக்கிறது.

கர்ப்பிணிகள்
பொதுவாக ஒரு நாளைக்கு 1000 முதல் 1200 கலோரிகள் தேவைப்படுகிறது. கர்ப்பிணிகளுக்கு 2000 முதல் 2200 வரை கலோரிகள் தேவைப்படுகிறது. ஒவ்வொருவரின் உடல் எடை மற்றும் உயரத்தை பொருத்து கலோரிகள் மாறுபடும். விட்டமின் பி, ஃபோலிக் ஆசிட் நிறைந்த உணவுகளை நாம் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஃபோலிக் ஆசிட் குறைவாக இருந்தால் குழந்தையின் உடல் உறுப்புகள் உருவாவதில் பிரச்சினை ஏற்படும். மனரீதியிலான பாதிப்புகளையும் கொடுக்கும். நரம்பு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும். எனவே மூளை வளர்ச்சிக்கு இந்த ஃபோலிக் ஆசிட் மிகவும் தேவையான ஒன்று. பீன்ஸ், தானியங்கள், மாதுளை, உலர் திராட்சை, அத்திப்பழம், பேரிச்சம் பழம், பீட்ரூட் ஆகிய உணவுகளில் ஃபோலிக் ஆசிட் அதிகமாக இருக்கிறது.

விட்டமின் சி
ஃபோலிக் ஆசிட் உணவுடன் விட்டமின் சி நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொண்டால் இரும்பு சத்து அதிகமாக சுரக்கும். எலுமிச்சை, பெரிய நெல்லிக்காய், ஆரஞ்சு, சாத்துக்குடி ஆகிய விட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். அது போல் கால்சியம் சத்தும் மிகவும் அவசியம் ஆகும். குழந்தைகளின் பல், எலும்பு, மற்ற உறுப்புகளின் வளர்ச்சிக்கும் இந்த கால்சியம் மிக முக்கியமானதாகும். கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளாவிட்டால் குழந்தையின் எலும்புகள் வலுவிழந்து இருக்கும். பிரசவ காலத்தில் அவ்வப்போது தசைபிடிப்பு ஏற்படும். பால், தயிர், மோர், கம்பு, கேழ்வரகு, கீரை வகைகள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

முருங்கை கீரை
குறிப்பாக பசலை கீரை, முருங்கை கீரை ஆகியவற்றை அதிகமாக எடுத்துக் கொள்வதால் மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். கால்சியமும் இதன் மூலம் அதிகமாக கிடைக்கும். ஒரு நாளைக்கு 25 மில்லிகிராம் இரும்பு சத்து எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் குழந்தையின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் இது உதவுகிறது. இரும்பு சத்துள்ள உணவுகளை நாம் அதிகம் எடுத்துக் கொள்வதால் நம் உடலில் துவர்ப்பு சுவை அதிகமாகிறது. இதனால் ரத்தஓட்டம் சீராக இருந்து ரத்த சோகை ஏற்படாமல் பார்த்து கொள்கிறது. இந்த துவர்ப்பு சுவையின் முக்கியமான விஷயம் என்னவெனில் ஜீரண சக்திதான். செரிமான கோளாறுகள் ஏற்படாமல் உடல் சோர்வு ஏற்படாமல் பாதுகாக்க இரும்பு சத்து உதவுகிறது.

இரும்பு சத்து
இரும்பு சத்துடன் விட்டமின் சி உணவுகளையும் நாம் எடுத்துக் கொள்வது முக்கியமானதாகும். பழங்களை அதிகமாக சேர்த்துக் கொள்வதால் நமக்கு நார்சத்து அதிகமார கிடைக்கிறது. தினமும் உணவில் கறிவேப்பிலையை சேர்த்துக் கொள்வது அவசியம். அடுத்தது புரத சத்து உடல் உறுப்பு வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. 2 அல்லது 3 மாதங்களில் புரதச் சத்துள்ள உணவுகளை நாம் எடுக்கும் போது குழந்தையின் தசை மற்றும் உறுப்பு வளர்ச்சிக்கு இது உதவும். உலர் கொட்டைகள், விதைகள், சிறுதானியங்கள், முட்டை, மீன், பால் ஆகிய உணவுகளில் புரதசத்து அதிகமாக உள்ளது. அதிகமாக அசைவ உணவுகளை தவிர்க்கலாம். காய்கறிகள், பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்வதால் அதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகமாக இருக்கிறது. நமது மன அழுத்தத்தையும் குறைக்கிறது. குழந்தையின் உடல் உறுப்புகள் நன்றாக இயங்க இது உதவுகிறது. இதன் மூலம் ரத்தத்தின் சர்க்கரையின் அளவையும் சரியாக வைத்துக் கொள்ள உதவுகிறது என்றார் டாக்டர் ஒய் தீபா.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications