Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திராவிடம், தமிழன், தமிழ் தேசியம்.. ஸ்டாலின், அண்ணாமலை, சீமான்.. அனல் பறந்த ட்விட்டர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒற்றை வார்த்தை ட்வீட் ட்ரெண்டில் தமிழக அரசியல் கட்சித்தலைவர்களும் இணைந்து பதிவிட்டு வருகின்றனர். திராவிடம் என்ற ஒற்றை வார்த்தையை ட்விட் செய்துள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின். நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் தேசியம் என்று ட்வீட் செய்ய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையோ தமிழன் என்று ட்வீட் செய்து பரபரப்பை பற்ற வைத்துள்ளது.

ட்விட்டரில் நேற்று காலை முதலே பலரும் ஒரு சொல்லில் ட்வீட் செய்து வருகின்றனர். தனி நபர்கள், வணிக நிறுவனங்கள், அரசியல் கட்சிகளில் அக்கவுண்ட்கள் என அனைத்து பக்கங்களிலும் இந்த ஒரு வார்த்தை ட்வீட் தான் ட்ரெண்டிங்க்கில் உள்ளது.

ஒற்றை வார்த்தை ட்வீட் ட்ரெண்டானது எப்படி என்று தேடிய போது, அமெரிக்காவில் உள்ள ரயில் சேவை நிறுவனமான ஆம்ட்ராக், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், செப்டம்பர் 2 அதிகாலை 12:30 மணிக்கு 'Trains' ரயில்கள் என ஒரு வார்த்தையில் ட்வீட் செய்திருந்தது. இதனையடுத்து பலரும் இதே போல ட்வீட் செய்ய தொடங்கினர்.

சச்சின் ட்வீட்

சச்சின் ட்வீட்

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஐசிசியின் ட்விட்டர் பக்கம் இரண்டும் கிரிக்கெட் என ட்வீட் செய்தனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜனநாயகம் என ட்வீட் செய்தார். அதேபோல் கூகுள் மேப்ஸ், மேப்ஸ் எனவும் சிறுவர்கள் கண்டு ரசிக்கும் WWE ரெஸ்லிங் என பல்வேறு நிறுவனங்கள் பல ட்வீட்கள் செய்தனர்.

அதிமுக

அதிமுக

தமிழ்நாட்டு அரசியல் கட்சி தலைவர்களிடையே இந்த ஒரு வார்த்தை ட்வீட் ட்ரெண்டானது.
அதிமுகவின் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வந்த நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு 'எடப்பாடியார்' என ட்வீட் செய்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் வகையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடப்பாடி யார் என்று கேட்டு ட்வீட் செய்தனர். எடப்பாடி பழனிச்சாமியோ தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாடு என்று ட்வீட் செய்தார்.

மு.க ஸ்டாலின்

மு.க ஸ்டாலின்

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 'திராவிடம்' என ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரீ ட்வீட் செய்தனர். 20 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். எல்லோருக்கும் எல்லாம் என்கிற உலகின் உயர்ந்த தத்துவம். அடிமை ஆதிக்க சிறை உடைத்த சமூக புரட்சியின் குறியீடு! திராவிடம் என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

சீமான்

சீமான்

நாம் தமிழர் கட்சி ஒறுங்கிணைப்பாளர் சீமான் 'தமிழ்தேசியம்' என ட்வீட் செய்தார். அதற்கு பதிலடியாக தமிழ் தேசியம் என்பதே திராவிடத்தின் ஒர் உட்கூறு தான் என்று பதிவிட்டனர். நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தமிழ் என பதிவிடப்பட்டது.

அண்ணாமலை

அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் 'தமிழன்' எனவும் ட்வீட் செய்துள்ளார். இந்த ட்வீட்டை 2500 பேர் ரீ ட்வீட் செய்துள்ளனர். 12,500 பேர் லைக் செய்துள்ளனர். ஏராளமானோர் கமெண்ட் செய்துள்ளனர். கருப்புத் தமிழன் அண்ணாமலை என்றும் பதிவிட்டுள்ளனர். கன்னடர் என்று பெருமையாக சொன்ன அண்ணாமலை தமிழர் என்று பதிவிட்டுள்ளதாக கூறி அவர் பேசிய வீடியோவை சிலர் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+