திருப்பத்தூரில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை.. முதல்வர் ஸ்டாலின் விசிட்டால் கலெக்டர் ஆர்டர்!
திருப்பத்தூர்: திருப்பத்தூரில் ஜூன் 25, 26 ஆகிய நாட்களில் டிரோன்கள், விளம்பர பலூன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இரண்டு நாட்களுக்கு ட்ரோன் பறக்கத் தடை விதிக்கப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் பத்து மாதங்களே உள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கி, புதிய திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். அந்த வகையில் ஜூன் மாதம் 25 ஆம் தேதி மற்றும் 26 ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இதுதொடர்பாக திருப்பத்தூர் ஆட்சியர் சிவசவுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 25 ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகிறார். அன்று திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகம் அருகே நிறுவப்பட்டு உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவ சிலையை திறந்து வைக்கிறார்.
இதையடுத்து 26 ஆம் தேதி காலை 4 மணி அளவில் ஜோலார்பேட்டை அருகே உள்ள பொன்னேரி பகுதியில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாவட்டத்தில் முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக 25, 26 ஆகிய 2 நாட்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் ட்ரோன்கள், விளம்பர பலூன்கள் போன்றவை பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
7 நாட்கள் 7 அறிக்கைகள்.. விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் திமுக.. சொல்ல வருவது ஒரே மேட்டர் தான் -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications