மிட்டாய்க்கு பதில் கஞ்சா விற்பனை..பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை.. கொந்தளித்து பேசிய செளமியா அன்புமணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் அனைத்து குற்றங்களுக்கும் பின்னணியாக போதை வஸ்துக்களே காரணமாக இருப்பதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் அவர்கள் எப்படி வீட்டைவிட்டு வெளியே செல்வார்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவியும், பசுமை தாயகம் அமைப்பின் தலைவருமான செளமியா அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.

Sowmiya Anbumani pmk chennai

நிகழ்ச்சியில் பேசிய அவர்," ஆண்டுதோறும் மார்ச் 8ந் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதுபோன்று மகளிர் தினத்தை முன்னிட்டு சுமார் 1 மாத காலத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது நன்றாக உள்ளது. பெண் கல்வி என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.

வீட்டில் உள்ள பெண்களுக்கு பள்ளிக்கல்வி சிறப்பாக வழங்கப்படுகிறது. ஆனால் கல்லூரி கல்வி என்பது பெரும் சவாலாக உள்ளது. கிராம புறங்களில் குறைந்தளவு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால் அங்கு பெண் குழந்தைகள் கல்வி கற்பது குறைவாக உள்ளது. ஆனால் அந்த பிரச்சினை பெருநகரங்களில் இல்லை. பெண் குழந்தைகளுக்கு பள்ளி, கல்லூரி வீடு உள்ளிட்ட எங்குமே பாதுகாப்பு இல்லை. தினமும் இதை நாம் பார்க்கிறோம். நெஞ்சை பதற வைக்கும் செய்திகளை கேட்கும்போது அச்சமாக உள்ளது.

பெண்கள் பாதுகாப்பு என்பது பெரிய கேள்வி குறியாக உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்றால் அவர்கள் எப்படி வீட்டைவிட்டு வெளியே செல்வார்கள். இந்த பயத்திற்கு காரணம் மதுவிற்பனை என்றே கூறலாம். பொது இடங்களில் மிட்டாய் விற்பனைக்கு பதில் கஞ்சா விற்பனை நடக்கிறது. தமிழகத்தில் தினசரி பாலியல் குற்றங்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகிறது இவற்றிற்கு முக்கிய காரணமாக இருப்பது போதைப் பொருள் தான். தமிழகத்தில் போதை நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.

Sowmiya Anbumani pmk chennai

முன்னதாக மேடையில் பேசிய அவர் பெண்கள் இன்றைய தினம் சமூக வலைதளங்களை மிகவும் கவனத்தோடு பயன்படுத்த வேண்டும். முன்பின் தெரியாத பழக்கம் இல்லாத நபர்களை சமூக வலைதளங்களில் நண்பர்களாக இருக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். மேலும் தற்போதைய காலகட்டத்தில் பெற்றோர்களை மதிக்கும் பாங்கு இளைஞர்களிடம் வெகுவாக குறைந்து வருகிறது. பெற்றோர்கள் நமக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் எனவே அவர்களிடம் எந்த கடுஞ்சொல்லையும் கூறக்கூடாது பெற்றோரை மதித்து பழக வேண்டும்.

பெண் கல்வி மிக மிக முக்கியம் என்றும் பெண்களுக்கு என்று படிப்பதற்கும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கும் பல்வேறு வாய்ப்புகள் உருவாகியுள்ளது. அவற்றை பயன்படுத்திக் கொண்டு பெண்கள் வாழ்க்கையில் சிறந்த இடத்திற்கு உயர்ந்து வர வேண்டும்." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+