Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“பெரியார் வழியில்..” Dude இயக்குநர் ஓபன் டாக்! என்ன இப்படி சொல்லிட்டாரே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடிப்பில், அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் வெளியான 'டியூட்' திரைப்படம், திரையரங்குகளில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய இயக்குநர் கீர்த்தீஸ்வரன், "பெரியார் வழியில் செல்வேன்" என்று கூறியிருக்கிறார். அவரது பேச்சு கவனம் பெற்றிருக்கிறது.

தமிழ்நாட்டில் வெளியாகும் திரைப்படங்கள் இரண்டு வகைகளில் கவனம் பெறுகின்றன. ஒன்று, அதன் திரைக்கதை. இன்னொன்று அதன் இயக்குநர். அந்த வகையில் தீபாவளிக்கு வெளியான திரைப்படங்களில் பைசன் அதிக கவனம் பெற்றிருந்தது. அதை தொடர்ந்து தற்போது டியூட் கவனம் பெற்றிருக்கிறது.

Dude Film movie Periyar

1960களில் நடந்த சம்பவத்தை ஏன் இன்னும் திரைப்படமாக எடுக்கிறீர்கள் என்று, பைசன் இயக்குநர் மாரி செல்வராஜிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு அவர், "ஒவ்வொருவரையும் திருப்திபடுத்த முடியாது. எனது அனுபவங்களை படைப்புகளாக மாற்ற வேண்டாம் என்று எப்படி சொல்ல முடியும். எல்லோருக்கும் உரிமை இருக்கிறது" என்று கூறியிருந்தார். அதேபோல டியூட் திரைப்படத்திலும் சாதிக்கு எதிரான வசனங்கள் இடம்பெற்றிருப்பது சாதியவாதிகளிடம் பேசுபொருளாகியிருந்தது.

இந்த பஞ்சாயத்துகளுக்கு இடையில்தான் இன்று டியூட் திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. அதில் பேசிய படத்தின் இயக்குநர் கீர்த்தீஸ்வரன், "படத்தின் இறுதியில் ஒரு வசனம் இடம் பெற்றிருக்கும். அதில், 'உங்க ஆணவத்திற்கு கொலை செய்வீர்களா? அவ்வளவு ஆணவம் இருந்தால், நீங்கள் போய் சாக வேண்டியதுதானே!' என்று கேட்கப்பட்டிருக்கும். உண்மையில் படத்தில் இப்படியான டயலாக்குகள் தொடக்கத்தில் இடம் பெறவில்லை. ஆனால், படம் தயாராகிக் கொண்டிருந்த போதுதான் திருநெல்வேலி கவின் படுகொலை சம்பவம் நடந்தது.

ஆணவ படுகொலைக்கு எதிராக சினிமா வழியில் எதையாவது தெரிவிக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது. எனவேதான் அந்த டயலாக் திரைப்படத்தில் இடம் பெற்று இருந்தது. இந்த திரைப்படம் விரைவில் ரூ.100 கோடி வசூலை எட்ட இருக்கிறது. அதுவே திரைப்படத்திற்கு எவ்வளவு வரவேற்பு கிடைத்திருக்கிறது என்பதற்கான சான்று.

இந்த திரைப்படம் பல விவாதங்களை கிளப்பி இருப்பதாகவும், பலர் பேசாத விஷயங்கள் இப்படத்தில் பேசப்பட்டிருப்பதாகவும், பலரும் கூறுகிறார்கள். இது தமிழ்நாடு. இங்கு நிறைய பெரியவர்கள் இருந்திருக்கிறார்கள். அதில் பெரியாரும் ஒருவர். இவர்களெல்லாம் சொல்லாத கருத்தை நாங்கள் சொல்லவில்லை. அந்த வகையில் இன்று கருத்துக்கள் தமிழ்நாட்டுக்கு புதியது அல்ல. ஆனால், அதை சினிமா மொழியில் பார்வையாளர்களுக்கு கடத்துவதுதான் என்னுடைய ஆசை" என்று கூறியிருக்கிறார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+