ரயில் பயணிகளுக்கு குட்நியூஸ்.. இன்றும், நாளையும் சென்னையில் பிளாட்பார்ம் டிக்கெட் வேண்டாம் - ரயில்வே

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தீபாவளி கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இன்றும், நாளையும் 4 ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட்டை பொதுமக்கள் எடுக்க வேண்டாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் சென்னையில் தங்கி வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர். அதேபோல் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் ஏராளமாக சென்னையில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

platform ticket indian railway


இந்நிலையில் தான் வரும் 31ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.

சென்னையில் தங்கி பணி செய்து வரும் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி கொண்டாட தயாராகி வருகின்றனர். மேலும் சொந்த ஊர்களுக்கு கார், தனியார் பஸ், அரசு பஸ், ரயில்கள், விமானங்கள் மூலம் பயணத்தை தொடங்கி உள்ளனர். இதனால் மாலை வேளைகளில் சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.

அதுமட்டுமின்றி ரயில் மற்றும் பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே தான் பொதுமக்களின் வசதிக்காக சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. அதேபோல் ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் என்பது இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தான் சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் மக்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பிளாட்பார்ம் டிக்கெட் கொடுப்பது என்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தீபாவளியையொட்டி தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டலத்தில் 4 ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர், தாம்பரம், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் இன்று (29.10.2024) மற்றும் நாளை (30.10.2024) ஆகிய 2 நாட்கள் பிளாட்பார்ம் டிக்கெட் வழங்கப்படாது.

மூத்த குடிமக்கள் மற்றும் மருத்துவ உதவி தேவையுள்ள பயணிகளுக்கும் விலக்கு என்பது அளிக்கப்படுகிறது தீபாவளி பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது’’ என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+