Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வில்லிவாக்கம் இல்ல 'வெள்ள'வாக்கம்.. கரண்ட், தண்ணி இல்லாமல் புலம்பும் மக்கள்! கிரவுண்ட் ரிப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையின் புறநகர் பகுதிகளில் மழை நீர் இன்னும் வடியாமல் இருப்பது ஒருபுறம் இருந்தாலும், சென்னையின் உட்பகுதிகளான வடசென்னை, மத்திய சென்னையின் பல்வேறு முக்கிய இடங்களிலேயே இன்னும் மழைநீர் வடியாமல் இருக்கிறது. குறிப்பாக வில்லிவாக்கம் பகுதி கடும் பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கிறது.

மத்திய சென்னையின் மிக முக்கியமான பகுதி வில்லிவாக்கம். திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இது கருதப்பட்டாலும், சென்னையின் பிஸியான ஏரியாக்களில் இதுவும் ஒன்று. சென்னையை அம்பத்தூர், ஆவடியுடன் இணைக்கும் ஏரியா இதுதான். வழக்கமாக பருவமழை காலங்களில் வில்லிவாக்கத்தின் சில இடங்களில் எப்போதாவது தண்ணீர் தேங்கும். பின்னர் சிறிது நேரத்தில் வடிந்துவிடும். ஆனால் இந்த 'மிக்ஜாம்' புயல் மழை காரணமாக தேங்கிய தண்ணீர் 3 நாட்கள் ஆகியும் இன்னும் வடியாமல் இருக்கிறது.

Due to heavy rains there has been severe flooding in Villivakkam, Chennai

குறிப்பாக வில்லிவாக்கத்தின் திருநகர் பகுதிகளில் சூழ்ந்திருந்த வெள்ளம் இன்று காலைதான் முழுமையாக வடிந்திருக்கிறது. திருநகரின் 5வது தெரு, 20வது தெருக்களில் ஓரடி வரை மழை நீர் தேங்கயிருந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மாநகராட்சி சார்பில் மோட்டார் பம்ப் வைத்து நீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து வந்தது. இருப்பினும் இன்று காலைதான் முழுமையாக நீர் வெளியேற்றப்பட்டிருக்கிறது. எனவே மின்சாரமும் இன்று காலையில்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது.

மறுபுறம் நேரு நகர், வள்ளியம்மை நகர், பலராமபுரம் பகுதியில் இன்னும் மழை நீர் வடியவில்லை. நேரு நகரின் 1வது தொடங்கி நகர் முழுவதும் தண்ணீர் தேங்கியிருக்கிறது. இங்கு மாநகராட்சி சார்பில் உணவு சமைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இருப்பினும் அது போதுமானதாக இல்லை என்கிற புகார் எழுந்திருக்கிறது. அதுபோல, கடந்த மூன்று நாட்களாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதால் முதியோர்கள், நோயாளிகள் மற்றும் குழந்தைகள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். குழந்தைகளுக்கு பால் கிடைப்பது என்பது பெரிய சவாலாக மாறியிருக்கிறது.

மறுபுறம் சிட்கோ நகர் வரலாறு காணாத வகையில் வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது. வில்லிவாக்கம் பகுதியின் தொழில் மையமாக சிட்கோ நகர் இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் பெய்த பெரு மழையில் சிட்கோ நகரின் சில பகுதிகளில் மட்டுமே மழை நீர் தேங்கியிருந்தது. அப்போதைய அதிமுக அரசை, திமுக ஆட்சியாளர்கள் கடுமையாக விமர்சித்தனர். பின்னர் திமுக ஆட்சி பொறுப்பேற்றதையடுத்து சில இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் மும்முரமாக நடைபெற்றது. இருப்பினும் இந்த புயல் மழை காரணமாக சிட்டோ நகர் முழுவதும் வெள்ளம் தேங்கியிருக்கிறது.

சிட்கோ நகரின் 1வது மெயின் ரோடு தொடங்கி 46, 47, 48, 49 மற்றும் 50வது தெருக்களிலும், 8வது மெயின் ரோடு முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது. இந்த பகுதிகள் முழுவதும் கடந்த 3 நாட்களாக மின் இணைப்பு கிடையாது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக், கார்களில் வெள்ள நீர் புகுந்திருக்கிறது. அதேபோல வில்லிவாக்கம் பேருந்து நிலையம் செல்லும் பிரதான சாலையில் தேங்கிய மழை நீர் இன்னமும் வடியவில்லை. இதன் காரணமாக இந்த சாலை முழுவதும் இரண்டு நாட்களுக்கும் மேலாக மின்வெட்டு நீடிக்கிறது.

Due to heavy rains there has been severe flooding in Villivakkam, Chennai

இது எல்லாவற்றிற்கும் மேலாக, வில்லிவாக்கத்தையும், கொளத்தூர் பகுதியையும் இணைக்கும் வில்லிவாக்கம் சுரங்கப்பாதை முற்றிலுமாக வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது. இதனால் மக்கள் பல கி.மீ தொலைவை சுற்றிக்கொண்டு கொளத்தூருக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. சிறுவர்கள் ஆபத்தை உணராமல் சுரங்க பாதையில் தேங்கியிருக்கும் தண்ணீரில் நீச்சல் அடித்து விளையாடி வருகின்றனர். அதேபோல சென்னை-திருவள்ளூர் ஹைரோட்டில் உள்ள பகுதிகளில் மின் இணைப்பு நேற்று பிற்பகல்தான் வந்திருக்கிறது.

சில இடங்களில் தண்ணீர் சற்று வடிய தொடங்கினாலும், சிட்டோ நகர், வள்ளியம்மை நகர், பலராம்புரம் மற்றும் நேரு நகர் பகுதியில் வெள்ளம் வடிய 2-3 நாட்கள் வரை ஆகும் என சொல்லப்படுகிறது. அதுவரை இப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு போதுமான உணவு மற்றும் குடிநீர் கிடைப்பது உறுதி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தவிர வில்லிவாக்கத்திற்கு உட்பட்ட அயனாவரம் பகுதியில் நிலைமை மோசமாக இருக்கிறது. மழை நின்று 3 நாட்கள் ஆன பின்னரும் அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அயனாவரத்தின் 97,98வது வார்டுகளில் குட்டியப்பன் தெரு, லாக்மா நகர், சன்யாசிபுரம், டேவிட்புரம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 3 நாட்களாக கழிவுநீர் கலந்த மழை நீர் 4 அடி வரை தேங்கியிருப்பதாகவும், அதை உடனடியாக அகற்றி, அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+