வெயிலால் 1-5 மாணவர்களுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு? அமைச்சர் அன்பில் மகேஷ் தந்த தகவல்
சென்னை: தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இந்த வெயில் காரணமாக தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு நடத்தப்படுமா? என்பது பற்றி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவடைந்துவிட்டது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கி உள்ளது.
இந்நிலையில் தான் சென்னையில் இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பத்திரிகையாளர் ஒருவர் 1-ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளின் தேர்வு குறித்து கேள்வி எழுப்பினார்.

இதுதொடர்பாக அந்த பத்திரிகையாளர், ‛‛இப்போது வெயில் அதிகரித்துள்ளது. பிளஸ் 2, பிளஸ் 1, 10ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்தி விடுகிறோம். 1ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு தான் அடுத்த மாதம் தான் தேர்வு நடத்த உள்ளோம். தேர்வை முன்கூட்டியே நடத்துவதற்கு வாய்ப்பு உள்ளதா?'' என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ், ‛‛பொதுவாக இந்த கோரிக்கை என்பது ஒவ்வொரு ஆண்டும் பத்திரிகையாளர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் வைக்கப்பட்டு வரும் கோரிக்கை தான். குறிப்பாக ஒவ்வொரு காலக்கட்டத்துக்கும் தேவையான பாடத்தை முடித்து அடுத்த கல்வியாண்டு தொடங்குவதற்கான சவால் என்பது நம்மிடம் நிறைந்து தான் உள்ளது. எனவே சூழலை பொறுத்து முடிவு எடுக்கப்படும். இதுதொடர்பாக அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம் (சிஇஓ) கலந்து பேசி அதுதொடர்பான முடிவு எடுக்கப்படும்'' என்றார்.
இதன்மூலம் முன்கூட்டியே தேர்வு நடத்துவது பற்றி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். தமிழகத்தை எடுத்து கொண்டால் இன்னும் கோடைக்காலம் தொடங்கவே இல்லை. ஆனால் இப்போதே வெயில் அதிகரிக்க தொடங்கிவிட்டது. வீட்டில் ஏசி, மின்விசிறி இன்றி இருக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. அதிகரித்துள்ள வெப்பத்தால் மதிய வேளையில் வாகனங்களில் சாலைகளில் செல்லும் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி மார்ச் 25ம் தேதி முடிவடைந்தது. அதன்பிறகு 11ம் வகுப்பு பொதுத் தேர்வு 2025 மார்ச் 5ம் தேதி தொடங்கி நேற்றுடன் (மார்ச் 27) முடிவடைந்தது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி நடந்து வருகிறது. இந்த தேர்வு ஏப்ரல் 15ம் தேதி முடிவடைய உள்ளது. 1 முதல் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் முழுஆண்டு தேர்வு தொடங்கி முடிவடைய உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications