Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக பொன்விழா ஆண்டில் அடி.. எட்டாத இரட்டை இலை.. அலுவலத்திற்கு சீல்! புலம்பி தவிக்கும் ர.ர.க்கள்.!

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுக நிர்வாகிகளின் அதிகாரப்போட்டியால் எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக் காத்த கட்சி சின்னமான இரட்டை இலை உள்ளாட்சி தேர்தலில் ஓபிஎஸ்- இபிஎஸ் கையெழுத்திடாததால் தொண்டர்களுக்கு கிடைக்காத நிலையில், தற்போது கட்சி அலுவகத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளதால் தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக கட்சி அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை முடிவுசெய்ய இருதரப்பினரும் தாமாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ வரும் 25ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று இருதரப்பினருக்கும் வருவாய்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது.

நேற்று ஓபிஎஸ் கட்சி தலைமை அலுவலகம் வருகிறார் என என்பதை கேள்விப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களும் அங்கு சரிசமமாக குவிந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலைவிய நிலையில் கற்கள் கட்டைகள் உள்ளிட்டவற்றால் மாறி மாறி இருதரப்பு ஆதரவாளர்களும் கடுமையாகத் தாக்கி கொண்டனர்.

ராயப்பேட்டை மோதல்

ராயப்பேட்டை மோதல்

இதனையடுத்து அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இதனிடையே அலுவலகம் யாருக்கு சொந்தம் என தெரிவிக்க ஆஜராக நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், " நேற்று (11.07.2022) காலை சுமார் 8.30 மணியளவில் E-2 ராயப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்திற்கு ஒரு பிரிவினர் சென்றபோது. அங்கிருந்த மற்றொரு பிரிவினர் கட்சி தலைமை அலுவலகத்தில் நுழையவிடாமல் தடுத்துள்ளனர். இதனால் இருதரப்பினரும் ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டு , கற்களையும் எறிந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

13 பேர் கைது

13 பேர் கைது

காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்ததுடன், அவ்வை சண்முகம் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு தனியார் பேருந்துகள் மற்றும் கார்களை சேதப்படுத்தினர். இதுதொடர்பாக, பாசறை பாலசந்திரன் என்பவர் 13 நபர்களுடன் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தபோது போலீசார் அவர்களை கைது செய்து காவல்துறையினர் அவ்விடத்தில் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

பலரும் காயம்

பலரும் காயம்

மேற்படி தாக்குதல் சம்பவத்தில் ஒரு தரப்பில் 24 நபர்களும் , மற்றொரு தரப்பில் 20 நபர்களும் காயமடைந்தனர். மேலும் காவல் துறையைச்சேர்ந்த 2 நபர்களும், ஒரு தனி நபர் என மொத்தம் 47 நபர்கள் காயமடைந்தனர் , காயமடைந்தவர்கள் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை , ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனை. கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காவேரி மருத்துவமனை ஆகிய இடங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாரிகள் அறிக்கை

அதிகாரிகள் அறிக்கை

இது குறித்து E-2 ராயப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது . இந்த வழக்கில் தொடர்புடைய 14பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் காயமடைந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருதரப்பினரிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டு இது தொடர்பாக உரிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் . கட்சி அலுவலத்தின் உரிமையை கோருவது தொடர்பாக இரு பிரிவினர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையால் பொது அமைதி பாதிக்கப்பட்டதால் , E - 2 இராயப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க தென்சென்னை வருவாய் கோட்ட அலுவலரிடம் அறிக்கை அளித்தார்.

இரு தரப்புக்கும் நோட்டீஸ்

இரு தரப்புக்கும் நோட்டீஸ்

அதன்பேரில், வருவாய் கோட்ட அலுவலர், முதல் தகவல் அறிக்கை மற்ற ஆவணங்களை ஆராய்ந்து , சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் , உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனில் இப்பிரச்சனை தீவிர சட்டம் ஒழுங்கு பாதிப்பையும் , பொது அமைதியையும் சீர்குலைத்துவிடும் என்று கருதியதன் அடிப்படையில் (11.07.2022 ) கட்சி அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை முடிவு செய்ய, வருகின்ற 25.07.2022 அன்று இரு தரப்பினரும் தாமாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜர் ஆக வேண்டும் எனக் கூறி சட்டப்பிரிவு 145 - ன் படி இருதரப்பினருக்கும் நோட்டீஸ் வழங்கினார்.

கட்டிடத்தை பூட்டி சீல்

கட்டிடத்தை பூட்டி சீல்

இதைதொடர்ந்து வருவாய் கோட்ட அலுவலர் பொது அமைதியை காக்கும் பொருட்டு பிரச்சனைக்குரிய கட்டிடத்தை பூட்டி சீல் வைத்து போதுமான பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டார். மேலும் , இரு தரப்பினரையும் உரிய உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி தேவையான உத்தரவுகளை பெறுமாறும், மேற்படி சொத்திற்கு பொறுப்பாளராக மயிலாப்பூர் வட்டாட்சியரை நியமித்து, வருவாய் கோட்ட அலுவலரின் உத்தரவின்படி செயல்படப் பணித்துள்ளார்.

தொண்டர்கள் அதிருப்தி

தொண்டர்கள் அதிருப்தி

மேற்படி பிரச்சனைக்குரிய அலுவலகத்தில் நடந்த சம்பவங்களைத் தொடர்ந்து , சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட கட்சி அலுவலகம் மற்றும் இரு தரப்பைச்சேர்ந்த தலைவர்கள் வீடுகளுக்கு தக்க காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது." என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதிமுகவின் பொன்விழா ஆண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில், அதிமுக நிர்வாகிகளின் அதிகாரப்போட்டியால் எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக் காத்த கட்சி சின்னமான இரட்டை இலை உள்ளாட்சி தேர்தலில் ஓபிஎஸ்- இபிஎஸ் கையெழுத்திடாததால் தொண்டர்களுக்கு கிடைக்காத நிலையில் , தற்போது கட்சி அலுவகத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளதால் தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+