என்னாது எச் ராஜாவா?, ஆளுநரா? அவருக்கு அந்த தகுதி எல்லாம் இருக்கா என்ன? துரை வைகோ கடும் விமர்சனம்
ஆவடி: பாஜகவை சேர்ந்த எச் ராஜா போன்றோருக்கு ஆளுநர் ஆகும் தகுதி உள்ளதா என மதிமுக செயலாளர் துரை வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
மதிமுக ஆவடி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதிமுக செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகி 500 க்கும் மேற்பட்டோர் மதிமுகவில் இணைந்தனர்.
அது போல் பாஜக, அமமுக, சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட மாற்று கட்சிகளில் இருந்தும் மதிமுகவில் பலர் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் மதிமுகவின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து துரை வைகோ ஆலோசனை நடத்தினார்.

தேர்தல்கள்
இனி வரும் தேர்தல்களில் மதிமுகவின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் அவர் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் கழக வளர்ச்சி பணிகள் கழகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது குறித்தும் ஆலோசனை நடத்தினேன்.

பல்கலைக்கழக துணைவேந்தர்
பல்கலைக்கழக துணை வேந்தரை மாநில அரசே நியமிக்கலாம் என்ற சட்ட மசோதாவை நிறைவேற்றி உள்ள தமிழக அரசின் செயல்பாடு வரவேற்கத்தக்கது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மாநில அரசுகளே பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமனம் செய்கிறார்கள்.

துணை வேந்தர்கள்
தமிழகத்திலும் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கலாம் என்ற வரைவு மசோதாவை மதிமுக வரவேற்கிறது. பாஜகவைச் சேர்ந்த எச் ராஜா ஆளுநர் ஆவதற்கு அனைத்து தகுதிகளும் உள்ளவர் என அண்ணாமலை கூறியிருப்பது ஏற்கத்தக்கதாக இல்லை. எச் ராஜாவுக்கு ஆளுநர் ஆகும் தகுதி உள்ளதா என துரை வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

வாரிசு அரசியலை எதிர்த்த வைகோ
துரை வைகோ மேலும் ஒரு கூட்டத்தில் பேசுகையில் எனக்கு வாரிசு அரசியல் அறவே பிடிக்காது. ஆனால் தொண்டர்கள் என்னை நிர்பந்தித்து அரசியலுக்குள் இழுத்துவிட்டனர் என்றார். திமுகவில் வைகோ இருந்த போது அங்கு தனது மகனை கருணாநிதி கட்சியில் முன்னிலைப்படுத்தினார் என்ற கோபத்தில்தான் வைகோ திமுகவிலிருந்து வெளியேறி மதிமுக என்ற கட்சியை தொடங்கினார். இந்த நிலையில் அவரது மகனே அரசியலில் நுழைந்துள்ளது கட்சியில் பலருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிபபிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications