அக்டோபர் 9ஆம் தேதி திமுக பொதுக்குழு! தலைவர் -பொதுச்செயலாளர்-பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்!
சென்னை: அக்டோபர் 9ஆம் தேதி சென்னையில் திமுக பொதுக்குழு நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
திமுக தலைவர் -பொதுச்செயலாளர்-பொருளாளர் பதவிகளுக்கு பொதுக்குழு மூலம் தேர்வு நடைபெறும் என்பதையும் அவர் அறிவித்துள்ளார்.
இதனால் திமுக வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பு காணப்படுகிறது.

துரைமுருகன் அறிவிப்பு
''திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15ஆவது பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் 9-10-2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு சென்னை, அமைந்தகரை, பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள "செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில்" நடைபெறும். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.''

தலைவர் பதவிக்கு தேர்தல்
இது மட்டுமல்லாமல் திமுக தலைவர் -பொதுச்செயலாளர்-பொருளாளர் பதவிகளுக்கு பொதுக்குழு மூலம் தேர்வு நடைபெறும் என்றும் தணிக்கை குழு உறுப்பினர்கள் தேர்வு நடைபெறும் எனவும் அறிவித்திருக்கிறார். துரைமுருகன் வெளியிட்டுள்ள பொதுக்குழு பற்றிய அறிவிப்பால், திமுக வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பு காணப்படுகிறது. இதனிடையே பொதுக்குழுவுக்கு முன்னதாகவே மாவட்டச் செயலாளர் தேர்தல் முடிவுகள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.

போட்டியின்றி
திமுக தலைவர் -பொதுச்செயலாளர்-பொருளாளர் பதவியிடங்களுக்கு பொதுக்குழு மூலம் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் இது ஒரு சம்பிரதாய அறிவிப்பாகவே பார்க்கப்படுகிறது. நூற்றுக்கு நூறு சதவீதம், ஸ்டாலின் திமுக தலைவராகவும், துரைமுருகன் திமுக பொதுச்செயலாளராகவும் டி.ஆர்.பாலு பொருளாளராகவும் மீண்டும் தேர்வு ஆகப் போவது உறுதியாகிவிட்டது.

அண்ணா அறிவாலயம்
சென்னையில் திமுக பொதுக்குழு நடத்தப்பட்டால் வழக்கமாக கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தான் நடத்தப்படும். ஆனால் முதல் முறையாக சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் திமுக பொதுக்குழு நடைபெறவுள்ளது.
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications