மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய 58 இடங்களில் மீண்டும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
Recommended Video
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது டெண்டர் முறைகேடு உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக மேலும் ஒரு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ளது.

மீண்டும் ரெய்டு
இந்த வழக்கின் அடிப்படையில் இன்று எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். அப்போது வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ13 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

மொத்தம் 58 இடங்கள்
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்பட 13 பேர், 3 நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறை புதியதாக வழக்குப்பதிவு செய்துள்ளது. இதையடுத்து சென்னை, கோவை, சேலம் உட்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் மட்டும் 41 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் ரெய்டு
சென்னை மயிலாப்பூர் சாய்பாபா காலனியில் உள்ள கோன்ஸ்ட்ரோமால் கூட்ஸ் நிறுவனம், சென்னை தேனாம்பேட்டை அண்ணாசாலையில் உள்ள ஆலம் கோல்ட் அண்ட் டயமண்ட்ஸ் நிறுவனம், சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஶ்ரீபிரியன் ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை நந்தனம் சி.ஐ.டி.நகரில் உள்ள ஶ்ரீ மகா கணபதி ஜூவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், சென்னை கோடம்பாக்கம் தெற்கு சிவன் கோவில் தெரு வானம் அபார்ட்மெண்ட்ஸில் ஜெயபிரகாஷ் மகனும் கோன்ஸ்ட்ரோனிக்ஸ் நிறுவன முன்னாள் பங்குதாரருமான விஷ்ணுவர்தன் வீடு, கோன்ஸ்ட்ரோனிக்ஸ் நிறுவன முன்னாள் பங்குதாரர் அ.சரவணக்குமார் வீடு மற்றும் மயிலாப்பூர் பாபநாசம் சிவன் சாலையில் காவல்துறை அதிகாரி எல்.ஸ்டாலின் வீடு ஆகிய இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

கோவையில் ரெய்டு
கோவையில் சிங்காநல்லூர் எம்.எல்.ஏ. கே ஜெயராமன், சந்திரசேகர், முன்னாள் எம்.எல்.ஏ. எட்டிமலை சண்முகம், ராஜேந்திரன் ஆகியோரின் வீடு மற்றும் இவர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்றது. கோவை மாவட்ட காவல்துறை அதிகாரிகளாக இருந்த அனிதா, சண்முகம், லோகநாதன், சந்திரகாந்தா ஆகியோரது வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications