சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே நாளில் ரூ.600 கோடி டீல்! Ex அமைச்சர்களின் ஆபத்பாந்தவன்! 131% அதிக சொத்து! யார் இந்த இளங்கோவன்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர் என்பதை தாண்டி மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவன் தமிழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் அனைவருக்கும் ஆபந்தபாந்தவனாக திகழ்ந்தவர் என்கிறார்கள் அதிமுகவின் மேல்மட்ட ரத்தத்தின் ரத்தங்கள்.

எடப்பாடிக்கு ஸ்கெட்ச்! ஸ்டாலின் ஆக்சனில் செம ட்விஸ்ட்! இளங்கோவன் ரெய்டில் சிக்கியதன் பின்னணி! எடப்பாடிக்கு ஸ்கெட்ச்! ஸ்டாலின் ஆக்சனில் செம ட்விஸ்ட்! இளங்கோவன் ரெய்டில் சிக்கியதன் பின்னணி!

ஜெயலலிதாவின் நம்பிக்கை நட்சத்திரம்

ஜெயலலிதாவின் நம்பிக்கை நட்சத்திரம்

தமிழக அளவில் கூட்டுறவு வங்கியின் மாநிலப் பொறுப்பில் பல வருடங்களாக இருப்பவர் இளங்கோவன். குறிப்பாக அதிமுக ஆட்சியில் கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் இளங்கோவன் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். போயஸ் கார்டனுக்குள் ஜெயலலிதா இவரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அனுமதிப்பார் என்கிறார்கள். அதற்கு காரணம் வரவு - செலவு விவகாரத்தில் இளங்கோவன் செம கில்லி. அதிலும் குறிப்பாக அமைச்சர்கள் மூலமான கார்டன் வருமானத்தை முழுக்க முழுக்க மேற்பார்வை செய்தது இளங்கோவன் தானாம். மேலும் அமைச்சர்கள் கொடுக்கும் கமிசன் தொகை சரியான அளவில் உள்ளதா என்பரை கிராஸ் செக் செய்யவும் இளங்கோவனைத்தான் ஜெயலலிதா பயன்படுத்துவார் என்று கூறுகிறார்கள்.

சசிகலாவின் பொருளாதார தளபதி

சசிகலாவின் பொருளாதார தளபதி

ஜெயலலிதா மட்டும் அல்ல சசிகலாவிற்கும் இளங்கோவன் நெருக்கமாக இருந்தார். இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சராக இருந்தாலும் கார்டனுக்கு இளங்கோவன் தான் செல்லப்பிள்ளை. எனவே சேலத்தில் அப்போது எடப்பாடி பழனிசாமியை விட இளங்கோவன் அதிகாரமிக்கவராக திகழ்ந்துள்ளார். மேலும் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியே இளங்கோவன் கண்காணிப்பில் தான் இருந்துள்ளார். இதற்கு காரணம் சசிகலாவிடம் வரவு செலவு கணக்குகளை எவ்வித பிசிறும் இல்லாமல் கேட்கும் போதெல்லாம் இளங்கோவன் கொடுத்து வந்தது தான் என்று கூறப்படுகிறது. அதோடு பெங்களூர் சிறையில் சசிகலா இருந்த போது அவருக்கு சிறையில் தேவையான வசதிகளை செய்து கொடுக்க கோடிக்கணக்கில் பணம் கைமாறிய விவகாரத்திலும் இளங்கோவன் பெயர் அடிபட்டது.

அமைச்சர்களின் ஆபத்பாந்தவன்

அமைச்சர்களின் ஆபத்பாந்தவன்

அதிமுக ஆட்சி தமிழகத்தில் இருந்த போது தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி மேற்கொண்டார். அப்போது கையில் கரன்சியாக வைத்திருந்த அமைச்சர்கள் அனைவரும் ஒரு கனம் ஆடிப்போகினர். ஆனால் அவர்கள் அனைவரையும் பக்காவாக அரவணைத்து பழைய ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் புத்தம் புதிய 2000 ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொடுத்த குற்றச்சாட்டிலும் இளங்கோவன் சிக்கினார். அந்த வகையில் சேலம் மாவட்ட கூட்டுறவு வங்கியை மையமாக வைத்து ஒரே நாளில் 600 கோடி ரூபாய் அளவிற்கு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டது தொடர்பாக விசாரணையும் நடைபெற்றது. இது தவிர தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகள் மூலம் அப்போதைய அமைச்சர்கள் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகளின் பழைய ரூபாய் நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொடுத்தவர் இளங்கோவன் தான் என்றும் ஒரு புகார் உண்டு.

அனைத்து EX அமைச்சர்களுக்கும் கிலி

அனைத்து EX அமைச்சர்களுக்கும் கிலி

இளங்கோவன் வீட்டில் நடைபெறும் ரெய்டால், எடப்பாடி பழனிசாமி மட்டும் அல்ல அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த அனைவருமே தற்போது ஆடிப்போயுள்ளதாக கூறுகிறார்கள். இதற்கு காரணம் இளங்கோவனுடன் வரவு செலவு வைத்துக் கொள்ளாத அதிமுக அமைச்சர்களே இல்லையாம்.

English summary
DVAC Raids: All you need to know about Tamilnadu Co-Op Bank chief Elangovan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X