பழைய துணி இருந்தா போதும்.. மாதம் ₹40,000 சம்பாதிக்கலாம்! அரசு தரும் ₹10 லட்சம் நோ-கியாரண்டி லோன்
சென்னை: இன்றைய விலைவாசி உயர்வில் குடும்பத்தை நடத்த கணவன், மனைவி இருவருமே சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.. ஆனால், குழந்தைகளையும் வீட்டையும் கவனித்துக்கொண்டு வெளியே சென்று வேலை பார்க்க முடியாத பல பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளதுதான் இந்த 'டோர் மேட்' (Door Mat) தயாரிக்கும் தொழில்.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
வெறும் பழைய துணிகள் மற்றும் ஒரு சிறிய டெயிலரிங் மிஷின் இருந்தால் போதும், வீட்டிலேயே உட்கார்ந்து மாதம் 40,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்பது பலருக்குத் தெரியாத ஒரு ரகசியம்..

சோஷியல் மீடியாவில் இது தொடர்பான ஒரு வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இப்போது பல இல்லத்தரசிகள் இந்த தொழிலை நோக்கி திரும்பி வருகிறார்களாம்.. "பழைய துணியில் இவ்வளவு வருமானமா?" என்று ஆச்சரியப்படுபவர்கள், இதிலுள்ள லாபக் கணக்கைப் பார்த்தால் கண்டிப்பாக அசந்து போவார்கள்..
மத்திய அரசு நிதியுதவி
இப்படி சிறு தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு, நம்முடைய தமிழக அரசு மற்றும் மத்திய அரசு பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகின்றன.. குறிப்பாக, தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் (NRLM) மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) மூலம் சுய உதவிக் குழுக்களில் (SHG) உள்ள பெண்களுக்கு மிகப்பெரிய அளவில் கடனுதவி வழங்கப்படுகிறது.
சமீபத்தில் வெளியான அறிவிப்பின்படி, பெண்கள் எந்தவிதமான சொத்துப் பிணையும் இல்லாமல், சுமார் 10 லட்சம் ரூபாய் வரை வங்கிக் கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது..
அரசு தரும் மானியம்
இந்தத் திட்டத்தின் கீழ், டோர் மேட் தயாரிப்பு போன்ற கைவினைத் தொழில்களுக்குத் தேவையான இயந்திரங்கள் வாங்கவும், மூலப்பொருட்கள் சேகரிக்கவும் அரசு மானியத்துடன் கூடிய கடன்களை வழங்குகிறது.. இது சாதாரண இல்லத்தரசிகளை ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோராக மாற்றும் ஒரு மிகப்பெரிய வாய்ப்பாகும்..
ஒரு சாதாரண டோர் மேட் சந்தையில் 50 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.. இதற்குத் தேவையான மூலப்பொருட்கள் என்றால், உங்கள் வீட்டில் இருக்கும் பழைய சேலைகள், சுடிதார்கள் அல்லது துணிக் கடைகளில் மிகக் குறைந்த விலைக்குக் கிடைக்கும் துண்டுத் துணிகள் தான்.
ஒரு நாளைக்கு ஒரு பெண்மணி ஓய்வு நேரங்களில் மட்டும் வேலை செய்தாலே 10 முதல் 15 டோர் மேட்களை எளிதாகத் தயாரித்துவிட முடியும்.. ஒரு மேட் தயாரிப்பதற்கான செலவு வெறும் 10 முதல் 20 ரூபாய் மட்டுமே.. ஆனால் அதை நீங்கள் கடைகளுக்கோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ விற்கும்போது ஒரு மேட்டுக்கு 50 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது.. இதைக் கணக்கிட்டுப் பார்த்தால், மாதம் 30,000 முதல் 40,000 ரூபாய் என்பது மிகச் சாதாரணமான ஒரு வருமானம் தான்..
ரூ.10 லட்சம் வரை கடனுதவி திட்டங்கள்
அரசு வழங்கும் இந்த 10 லட்சம் ரூபாய் வரையிலான கடனுதவியைப் பெற, பெண்கள் தங்கள் பகுதியில் உள்ள ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு (PLF) அல்லது மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனைச் சங்கத்தை அணுகலாம்..
ஆனால், தையல் கலை தெரிந்த பெண்களுக்கு இது ஒரு மிகப்பெரிய ஜாக்பாட் என்றே சொல்லலாம்.. ஆரம்பத்தில் உங்கள் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் விற்று விட்டு, பிறகு மெல்ல மெல்ல வாட்ஸ்அப் குரூப்கள் மற்றும் மீஷோ (Meesho) போன்ற ஆன்லைன் தளங்கள் மூலம் உங்கள் பிசினஸைவிரிவுபடுத்தலாம்..
அரசு வேலைக்காகவோ அல்லது பெரிய நிறுவனங்களின் அழைப்புக்காகவோ காத்திருக்காமல், உங்கள் கைத்தொழிலை நம்பி இறங்கினால் கண்டிப்பா ஒரு தொழில்முனைவோராக மாற முடியும்.. உழைப்பும், அரசின் இந்த நிதி உதவியும் இருந்தால், உங்கள் வீட்டின் ஒரு மூலையில் இருந்தே கோடிகளை எட்ட முடியும் என்பதற்கு இந்த "டோர் மேட்" தொழிலே ஒரு சாட்சி என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்...!!












Click it and Unblock the Notifications