"இன்று ஈஸ்டர்".. இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்ததை தத்ரூபமாக காட்டிய சர்ச்சுகள்.. சிறப்பு பிரார்த்தனை
சென்னை: இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பிறகு 3வது நாள் உயிர்த்தெழுந்ததாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். இதன் நினைவாக இன்று உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகையை கிறிஸ்தவர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள சர்ச்சுகளில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் இயேசு உயிர்த்தெழும் நிகழ்வுகள் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டன.
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஈஸ்டர். இயேசு சிலுவையில் அறைந்த பிறகு 3வது நாளில் உயிர்த்தெழுந்ததாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். அதன்படி இன்று உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

ஈஸ்டர் பண்டிகையையொட்டி உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். நள்ளிரவு முதல் அதிகாலை வரை சர்ச்சுகளில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
ஈஸ்டர் பண்டிகையின் ஒருபகுதியாக இயேசு கிறிஸ்து மீண்டும் உயிர்த்தெழுவது போன்ற காட்சிகள் தத்ரூபமாக காட்டப்பட்டது. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழும் நிகழ்ச்சியின்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. ஈஸ்டர் பண்டிகையையொட்டி சர்ச்சுகள் மின்னொளியில் ஜொலித்தன. தமிழகத்தில் சென்னை, நாகை, கோவை உள்பட பல மாவட்டங்களில் ஈஸ்டர் பண்டிகை களைகட்டியது. குறிப்பாக தென்மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் கிறிஸ்தவர்கள் குடும்பம் குடும்பமாக ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றனர்.
நாகை வேளாங்கண்ணி சர்ச்சில் நேற்று இரவு 1.45 மணி முதல் பாஸ்கா திருவிழிப்பு திருப்தில நடைபெற்றது. மெழுகுவர்த்தி ஏந்தி கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை மேற்கொண்டனர். அதன்பிறகு நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை ஈஸ்டர் சிறப்பு பிரா்த்தனை நடந்தது. இயேசு உயியர்தெழும் நிகழ்வுகள் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.
ஈஸ்டர் பண்டிகையையொட்டி தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். முன்னதாக ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடித்தனர். கடந்த மாதம் 5ம் தேதி சாம்பல் புதன் தினத்தில் கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது. திவ்ய நற்கருணை ஆராதனையும் நடைபெற்றது.
இந்த தவக்காலத்தின் முக்கிய நாளாக புனித வியாழன், புனித வெள்ளி ஆகியவை உள்ளது. புனித வியாழன் கடந்த 17 ம் தேதியும், புனித வெள்ளி நேற்று முன்தினமும் கடைப்பிடிக்கப்பட்டது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளை நினைவு கூரும் வகையில் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்பட்டது. அதன்பிறகு இயேசு கிறிஸ்து 3வது நாள் உயிர்த்தெழுந்ததை நினைவுப்படுத்தும் வகையில் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications