சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லெட்டர் பேடு கட்சிகளுக்கு இனி ஆப்பு... 25 ஆயிரம் உறுப்பினர்கள் தேவை - சாட்டையை சுழற்றிய நீதிபதிகள்

25ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தால் தான் அரசியல் கட்சி என தேர்தல் ஆணையம் அனுமதி வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து கூறியுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: 25ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தால் தான் அரசியல் கட்சி என தேர்தல் ஆணையம் அனுமதி வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து கூறியுள்ளனர். புதிய அரசியல் கட்சி தொடங்க எதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்குகிறது என்று கேட்ட நீதிபதிகள், எதிர்மனுதாரர்களாக தேர்தல் ஆணையம், உள்துறை, சட்டத்துறை சேர்க்கப்பட்டு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சையைச் சேர்ந்த தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தமிழ் நேசன் உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில் திருச்சியில் இயங்கி வரும் ஆக்சிஜன் சிலிண்டர் கேஸ் நிறுவனத்தை மூட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

EC should give permission to a political party only if it has 25 thousand members says HC bench Madurai

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அடங்கிய அமர்வு, ஆக்சிஜன் சிலிண்டர் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரிய தமிழ் நேசனுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் பணம் பறிக்கும் நோக்கில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்தனர். அத்துடன் மனுதாரரின் கட்சி எந்த அடிப்படையில் பதிவு செய்யப்பட்டு உள்ளது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், லெட்டர் பேட் கட்சிகளால் மக்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்றும் தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத சில லெட்டர் பேட் அரசியல் கட்சிகள் பணம் பறிக்கும் செயலில் ஈடுபடுவதாகவும் வேதனை தெரிவித்தனர்.

சிவகாசி ஜவுளிக்கடையில் தீ விபத்து - பல லட்சம் ஜவுளிகள் எரிந்து சாம்பல்சிவகாசி ஜவுளிக்கடையில் தீ விபத்து - பல லட்சம் ஜவுளிகள் எரிந்து சாம்பல்

லெட்டர்பேட் கட்சிகளால் மக்கள் பல பிரச்சினைகளை சந்திப்பதால் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை தேவை என்றும் கூறிய நீதிபதிகள், புதிய அரசியல் கட்சி தொடங்க எதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்குகிறது என்று கேள்வி எழுப்பினர்.

லெட்டர் பேட் கட்சிகளால் மக்கள் பல பிரச்சனைகளை சந்திப்பதால் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை தேவைப்படுகிறது என்று கூறிய நீதிபதிகள், 25,000 உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே அரசியல் கட்சி தொடங்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கூறி, எதிர்மனுதாரர்களாக தேர்தல் ஆணையம், உள்துறை, சட்டத்துறையை சேர்த்து பதிலளிக்க உத்தரவிட்டனர்.

English summary
Judges of the Madurai branch of the High Court have suggested that the Election Commission should give permission to a political party only if it has 25,000 members. The Madurai branch of the High Court has ordered the Election Commission, the Home Ministry and the Legal Department to be added as respondents to the judges who asked on what basis the Election Commission gives permission to start a new political party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X