Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிதியை திருடி தேர்தல் செலவு? தேவநாதன் யாதவின் 5 வங்கி கணக்குகள் முடக்கம்.. ரெடியாகும் சொத்து லிஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட ரூ.525 கோடியை மோசடி செய்த விவகாரத்தில், தேவநாதன் யாதவின் 5 வங்கி கணக்குகளை பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் முடக்கி உள்ளனர். மேலும் தேவநாதன் யாதவின் சொத்து பட்டியலை தயார் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் 'தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிடெட்' என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் நிறுவனரான தேவநாதன் யாதவ் செயல்பட்டு வருகிறார்.

Devanathan chennai crime

இந்த நிதி நிறுவனத்தில் ஓய்வூதிய திட்டம் என்ற பெயரில் முதியோர் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கான சிறப்பு திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 8 முதல் 12 சதவீதம் வரை முதலீட்டு பணத்திற்கு வட்டி தருவதாக ஆசை காட்டியுள்ளனர். இதனை நம்பி தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் இந்த நிரந்தர வைப்புத் தொகை திட்டத்தில் முதலீடு செய்தனர்.

அதன்படி இந்த நிதி நிறுவனத்தில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு நிதியாக ரூ.525 கோடி வரை முதலீடு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக முதலீட்டு பணத்தின் முதிர்வு பணம் திரும்ப கொடுக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மயிலாப்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட 144 பேர் தங்களது ரூ.24.5 கோடி பணத்தை பெற்று தர கோரி அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றத் தடுப்புப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.

மயிலாப்பூர் இந்து நிரந்தர வைப்பு நிதி லிமிடெட் நிறுவனம் மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் தேவநாதன் யாதவ், மோசடிக்கு உடந்தையாக இருந்த தேவநாதன் யாதவ் நடத்தும் தொலைக்காட்சியில் பணியாற்றும் நிர்வாகிகளான குணசீலன், மகிமைநாதன் மற்றும் சாலமன் மோகன்தாஸ் ஆகியோர் மீது 409, 420 உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் கடந்த 12 ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து திருச்சி அருகே இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த மோசடி வழக்கு தொடர்பாக அந்த நிறுவனத்தின் இயக்குநர்களான குணசீலன், மகிமைநாதன் ஆகியோரை இன்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவிடம் விசாரணை நடத்திய போது, மயிலாப்பூர் இந்து நிரந்தர வைப்பு நிதி நிறுவனத்தில் முதலீட்டாளர்களின் ரூ.525 கோடி அளவுக்கு மோசடி நடந்து இருப்பது தெரியவந்தது. மேலும், தேவநாதன் யாதவ் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நிதி நிறுவனத்தின் சொத்துகளை அபகரிக்கும் வகையில் முறைகேட்டில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் சிவகங்கை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட போது தேவநாதன் யாதவ் பல கோடி ரூபாய் நிதி நிறுவனத்தில் இருந்து ரொக்க பணமாக எடுத்து தேர்தல் செலவுக்கு பயன்படுத்தியதாகவும் புகார்கள் வந்துள்ளன. மேலும், 150 ஆண்டு கால பழமையான மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அதில் ஒரு பகுதியை தேவநாதன் யாதவ் அவர் நடத்தும் தனியார் தொலைக்காட்சி அலுவலகமாக மாற்றிக்கொண்டதாகவும் புகார் எழுந்துள்ளது.

மேலும், நிதி நிறுவனத்தின் சொத்துக்களின் வருமானத்தையும் அவர் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததும் தெரியவந்தது. மயிலாப்பூர் இந்து நிதி நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிகள் சிலர், நிதி நிறுவனத்தின் கட்டிடத்தின் ரகசிய அறையில் வைக்கப்பட்டிருந்த 300 கிலோ தங்க கட்டிகளை தேவநாதன் யாதவ் தனது கட்டுப்பாட்டில் கொண்டு சென்றதாகவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து, தேவநாதன் மோசடி தொடர்பாக அதிர்ச்சி தகவல்கள் வெளியான நிலையில், தேவநாதன் யாதவ் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், தேவநாதனின் 5 வங்கி கணக்குகளை முடக்கி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நிதி நிறுவன மோசடி தொடர்பாக சட்ட விதிகளின் படி, மோசடியில் ஈடுபட்ட நபர்களின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கப்படுவது வழக்கம். அதன்படி தேவநாதன் யாதவ் வங்கி கணக்குகள் மற்றும் இந்து சாசுவத நிதி லிட் நிறுவனத்தின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

மேலும், தேவநாதனின் சொத்து குறித்து பட்டியலை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் எடுத்து வருகின்றனர். குறிப்பாக நிதி நிறுவனத்தில் எம்.டியாக பதவியேற்ற 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் வாங்கி குவித்த சொத்துக்கள் முழுவதும் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிள்ளது.

நிதி நிறுவன மோசடி தொடர்பாக ஏற்கனவே 144 புகார்கள் வந்த நிலையில் தற்போது 300க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மோசடி தொடர்பாக தற்போது தீவிர விசாரணையில் பொருளாதார குற்றத் தடுப்பு போலீசார் முழுமூச்சாக இறங்கி உள்ளனர். தலைமறைவாக உள்ள முன்னாள் இயக்குநர்களையும் தேடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+